லோக்பால் குழு உறுப்பினராக முகுல் ரோஹத்கி நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

லோக்பால் குழு உறுப்பினராக முகுல் ரோஹத்கி நியமனம்

Added : மே 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஊழலுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க, வலுவான லோக்பால் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. லோக்பால் நீதிபதியை தேர்ந்தெடுக்கும் குழுவில், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, லோக்சபா சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் சட்ட நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர் ஆகியோர் இடம் பெறுவர்.இந்த குழுவில் இடம் பெற்றிருந்த, சட்ட நிபுணர், பி.பி.ராவ், 2017 செப்டம்பரில் காலமானார். இதையடுத்து, அந்த இடத்திற்கு வேறு ஒரு நபர் நியமிக்கப்படாமல் இருந்ததால், லோக்பால் நீதிபதியை தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.லோக்பால் நீதிபதி நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி, ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதி மன்றத்தில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால், ''லோக்பால் நீதிபதியை தேர்வு செய்யும் குழுவில், சட்ட நிபுணராக, மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி நியமிக்கப்பட்டுள்ளதாக,'' கூறினார்.இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை, ஜூலை, 2க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X