ராஜா ஆதரவாளர்கள் வன்முறை : அரசு பஸ் தீவைத்து எரிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராஜா ஆதரவாளர்கள் வன்முறை : அரசு பஸ் தீவைத்து எரிப்பு

Added : மே 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராஜா ஆதரவாளர்கள் வன்முறை : அரசு பஸ் தீவைத்து எரிப்பு

திருநெல்வேலி: நெல்லையில் அரசு பஸ்சை தீயிட்டு எரித்து, ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு, நேற்று மதியம் அரசு பஸ் சென்றது. கடைசி ஸ்டாப்பிற்கு சென்று, மீண்டும் புறப்பட, பஸ் ரிவர்ஸ் எடுத்துக்கொண்டிருந்த போது, இருவர் பஸ்சில் ஏறினர். டிரைவர், கண்டக்டரை கீழே இறங்கசெய்துவிட்டு, கேனில் கொண்டுவந்திருந்த பெட்ரோலை, பஸ் முழுவதும் ஊற்றி, தீ வைத்து, தப்பிச் சென்றனர். தீ வைத்தவர்கள் ஓடும்போது, எதிரே வந்தவரின் பைக்கை பறித்துக்கொண்டு தப்பினர்.சிமென்ட் வளாகத்தில் உள்ள தீயணைப்பு ஊழியர்கள், தீயை அணைத்தனர். 'ராக்கெட் ராஜா எங்கள் கோவில்; அவரை கைது செய்யாதே, ஆர்.ஆர்., பாய்ஸ், ஜெ.கே.,' என எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வன்முறையாளர்கள் வீசியிருந்தனர்.நெல்லையில், பேராசிரியர் செந்தில்குமார், பிப்ரவரி, 26ல், ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ராக்கெட் ராஜா, அவரது அண்ணன் வழக்கறிஞர் பாலகணேசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. மற்றவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், சென்னையில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா, நேற்றுமுன்தினம், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒரு நாள் போலீஸ் காவலுக்குப்பின், நேற்று அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் பஸ்சை எரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
17-மே-201814:22:41 IST Report Abuse
நெல்லை மணி, இது நிச்சயமாக இவனது எதிராளிகள் இவனை இன்னும் வம்பில் இழுத்துவிடுவதற்காக இவனது ஆதரவாளர்கள் என்கிற போர்வையில் செய்த வன்முறை. அரசு பஸ்ஸை தீவைத்து எரித்த உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும். இவனது ஆதரவாளர்கள் பேருந்தை இவனது ஊரில் வைத்து எரிப்பார்களே தவிர வடக்கு தாழையூத்துக்கு சென்று எரிக்க மாட்டார்கள். இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-மே-201801:02:59 IST Report Abuse
Mani . V உலகத்திலேயே ஒரு ரௌடிக்கு ஆதரவாக கலவரம் செய்யும் அவலம் தமிழகத்தில் மட்டுமே நடைபெறும். பதவியில் இருப்பவர்கள் ஒன்றுக்குமே பிரயோசனம் இல்லாதவர்கள் எனில் இது போன்ற கேவலங்கள் நடைபெறத்தான் செய்யும். (அய்யய்யோ, ஆர்வக் கோளாறில் நான் பாட்டுக்கு ஏதேதோ எழுதிவிட்டேனே. "ராக்கெட் ராஜா, நல்லவர், வல்லவர், உத்தமர், 'சாமி', கடவுளின் அவதாரம்).
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
16-மே-201814:14:09 IST Report Abuse
வல்வில் ஓரி கூண்டெடு புடிச்சி உள்ள வச்சி லாடம் கட்டுங்க....ஜாதிய முன்னால கேடயமா வச்சிக்கிட்டு இவனுங்க எல்லா அட்டூழியமும் பண்ணுறானுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X