'ஆப்பரேஷன் தாமரை' பீதி: ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.,க்களுக்கு சிறை? Dinamalar
பதிவு செய்த நாள் :
'ஆப்பரேஷன் தாமரை' பீதி
ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.,க்களுக்கு சிறை?

பெங்களூரு : கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற, பா.ஜ.,வுக்கு சில எம்.எல்.ஏ.,க்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., தலைவர்களுக்கு, 'ஆப்பரேஷன் தாமரை' பீதி எழுந்துள்ளது. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்க, இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

ஆப்பரேஷன் தாமரை,பீதி,ரிசார்ட்டில்,எம்.எல்.ஏ.க்களுக்கு,சிறை?

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க, 112 இடங்கள் தேவை என்ற நிலையில், 104 தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இது, அக்கட்சியின் மேலிடத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, 38 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ம.ஜ.த.,வுக்கு, காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன், ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, முதல்வர் பதவி ஏற்க, பேச்சு தீவிரமாக நடந்து வருகிறது.

காங்., - ம.ஜ.த., இடையே உடன்பாடு ஏற்பட்டு இருந்தாலும், ஆட்சி அமைப்பதற்குள், 'ஆப்பரேஷன் தாமரை' மூலம், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., ஈர்க்கலாம் என, இரு கட்சி தலைவர்களும் பீதி அடைந்துள்ளனர்.

எனவே, ஆட்சி அமைக்கும் வரை, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக, தங்கள் எம்.எல்.ஏ.,க்களை ஏதாவது, 'ரிசார்ட்'டில் சிறைவைக்க திட்டமிட்டுள்ளன.

Advertisement

கடந்த, 2008 தேர்தலில், பா.ஜ.,வுக்கு 110 இடங்களே கிடைத்தன. அதனால், 'ஆப்பரேஷன் தாமரை' என்ற திட்டத்தின் மூலம், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சில, எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதன் பின், அந்தத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
16-மே-201820:30:15 IST Report Abuse

RajMandate is for BJP

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
16-மே-201817:06:03 IST Report Abuse

விருமாண்டிபெரும்பான்மையினர் இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததால் சிறுபான்மையினர் உள்ளே நுழைகிறார்கள்

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
16-மே-201816:22:18 IST Report Abuse

விருமாண்டிஅடுத்த தேர்தல் வரை காங்கிரஸ் தாக்குப்பிடிக்குமா ..??

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-மே-201812:52:50 IST Report Abuse

இந்தியன் kumarஅவ்வளவு நம்பிக்கை இல்லாமலா கட்சியில் சீட் கொடுத்தார்கள் ???

Rate this:
பிரபு - மதுரை,இந்தியா
16-மே-201811:55:49 IST Report Abuse

பிரபுஆட்சி அமைக்க பா.ஜ., மற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கிவிடுவார்கள். இது பா.ஜ., பொதுவாக கடைபிடித்துவரும் பார்முலா தான்.

Rate this:
murugu - paris,பிரான்ஸ்
16-மே-201811:40:50 IST Report Abuse

murugumla வுக்கு சிறை எதனால் ?பிள்ளை பிடிப்பவர்கள் நடமாட்டம் அதிகமாக ,அதிகாரத்துடன் அலைவதால் இப்படியும் சொல்லலாமா???

Rate this:
sudharshana - chennai,இந்தியா
16-மே-201811:27:33 IST Report Abuse

sudharshanaஅடடா சூப்பர் எல்லா முறைகேடு கேட்ட காரியங்களுக்கும் யார் மூலப்புள்ளி என்று நினைக்கும் போது புல்லரிக்கிறது .

Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
16-மே-201811:16:55 IST Report Abuse

sankaseshan1996 ல் தேவகவுடா பிரதமராக இருந்த போது குஜராத்தில் மெஜாரிட்டியுடன் இருந்த பிஜேபி அரசை வாகெலா உதவியுடன் உடைத்து காங்கிரஸ் பதவியை கைப்பற்றியது இன்று தேவகவுடா கவர்னரிடம் கெஞ்ச வேண்டிய நிலையில் உள்ளார் பிஜேபி அரசை கலைத்த சமயம் தித்தித்தது இன்று கவர்நரிடம் கையேந்தும்.நிலை இது தான் கால சக்கரம்.காங்கியும் தேவுடுவும் காவிரி தண்ணீர் தரமாட்டார்கள்

Rate this:
sam - Doha,கத்தார்
16-மே-201809:14:35 IST Report Abuse

samயார் பின்புறம் மூலம் ஆட்சியை அமைக்க முயல்கிறார்கள் என்று நன்றாக தெரிகிறது. கிரிமினல் ரெகார்ட் உள்ளவர்கள், தன் கண்ணாடி வாங்க ஹெலிகாப்டர் மூலம் ஆட்களை அனுப்பியவர்கள் எல்லாம் ஊழல் இல்லாத அரசாங்கம் என்று மார் தட்டும் பிஜேபி இக்கு வெட்கக்கேடு. இது தான் ராமராஜ்யம்

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
16-மே-201806:52:00 IST Report Abuse

Samy Chinnathambiஇதை அப்படியே அப்போசிட்டா திங்க் பண்ணி பாருங்க... சில எம்.எல். ஏக்களை காங்கிரஸ் இழுத்து விட்டால் பா.ஜெ.க வாலும் ஆட்சி மைக்க முடியாது........... இழுக்காவிட்டாலும் ஆட்சி அமைக்க முடியாது............. எப்படி இருந்தாலும் எடப்பாடி மாதிரி திக் திக் னு பயந்துகிட்டே தான் ஆட்சியில இருக்கணும்..........நிம்மதியா தூங்க முடியாது சாப்பிட முடியாது, எப்போ கவர்னர் கூப்பிடுவாரோன்னு பயந்துகிட்டே இருக்கணும்..........தமாசு போங்க...........

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement