கர்நாடகத்தில் இணையற்ற வெற்றி: மோடி பெருமிதம் Dinamalar
பதிவு செய்த நாள் :
கர்நாடகத்தில் இணையற்ற வெற்றி
மோடி பெருமிதம்

புதுடில்லி : ''கர்நாடக மக்கள் பா.ஜ.,வுக்கு முன் எப்போதும் இல்லாத, இணையற்ற வெற்றியை கொடுத்து உள்ளனர். தேர்தல் முடிவுகளால் அம்மாநிலத்தின் வளர்ச்சி பயணம் சிதைக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்,'' என பிரதமர் மோடி பேசினார்.

கர்நாடகா,இணையற்ற வெற்றி,மோடி,பெருமிதம்கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு குறித்து பா.ஜ.,வின் பாராளுமன்ற குழு கூட்டம் டில்லியில் நேற்று மாலை நடந்தது. கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அமித்ஷா வரவேற்றார்.

இதில் மோடி பேசியதாவது: கர்நாடக மக்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். தேர்தல் முடிவுகளால் அம்மாநிலத்தின் வளர்ச்சி பயணம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. மாநிலம் பின் தங்குவதை அனுமதிக்க மாட்டோம்.

பா.ஜ., இந்தி பேசும் வடமாநிலங்களுக்கான கட்சி என்ற பொய் தோற்றத்தை சிலர் உருவாக்க முயன்றனர். ஆனால் எங்களுக்கு வெற்றி அளித்து, அது போன்ற சிதைந்த சிந்தனை கொண்டவர்களுக்கு சரியான பதில் அளித்துள்ளனர் கர்நாடக மக்கள். இது எப்போதும் இல்லாத, இணையற்ற வெற்றி.

நம் நாட்டை பல ஆண்டுகளாக ஆண்ட ஒரு கட்சி வடமாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் பகையை ஏற்படுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கியும் அரசியலமைப்பையும், ஜனநாயக நெறிமுறைகளையும் சிதைத்து விட்டது.

Advertisement

பல மாநில மொழி தெரியாததால் தகவல்களை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்ற தயக்கம் இருந்தது. ஆனால் கர்நாடக மக்கள் மிகப் பெரிய அன்பை பகிர்ந்து, மொழி ஒரு பிச்னை இல்லை என்பதை உறுதி செய்து விட்டனர்.

கட்சி தலைவர் அமித்ஷாவின் நுணுக்கமான அணுகுமுறையால் நமக்கு அடுத்து அடுத்து வெற்றி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பின் மூலம் கட்சித்தொண்டர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (32+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-மே-201820:13:20 IST Report Abuse

Rafi இந்த வெற்றியை பெறுவதற்காக காவேரி நீதியை குழி தோண்டி புதைத்ததை சொல்வதா? பணம் பாதாளம் வரை பாய்ந்ததை சொல்வதா? மத துவேஷங்களை பரப்பியதை சொல்வதா? அனைத்திற்கு மேலாக ஆட்சி அமைப்பதற்காக மாற்று கட்சி MLA க்களை வளைப்பதற்காக குறுக்கு வழியை கையிலெடுத்து பம்பரமாக வேலை செய்வதை சொல்வதா?

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
16-மே-201819:53:00 IST Report Abuse

வந்தியதேவன்கலியுகம் எப்போது முடிமென கண்ணனிடம் கேட்டதற்கு “தருமநெறி பொய்த்ததென தாயர்குலம் வாடுவது தாளாது பொங்கும் நேரம்... தடியுடைய முரடர்களும், படையுடைய தலைவர்களும் தலைதூக்கி நிற்கும் நேரம்.... தர்மவினை பொய்யாகி, காலநிலை தவறாகி, கருணை பறிபோகும் நேரம்... கண்ணனவன் சொன்னபடி, கண்ணெதிரில் வந்துவிடும் “கலியுகம்” முடியும் நேரம்....” என பகவத்கீதை கண்ணன் சொன்னபடி... “கலியுகம்” முடியும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்... மேலே சொன்னதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது... அதனால் கண்ணனவன் சொன்னபடி, கலியுகம் முடியும் நேரம் வந்து... உலகத்துல இருக்குற அத்தனை மனிதப் பதர்களும்... திடீரென ஒருசில நொடிகளில் பூமி பிளந்து... நல்லவன்,கெட்டவன், அறிவாளி, முட்டாள், பணக்காரன், பிச்சைக்காரன் எல்லாருமே மண்ணுக்குள் புதையும் நேரம் வந்துவிட்டது... சர்வம் கிருஷ்ணார்ப்பணம்....

Rate this:
amuthan - kanyakumari,இந்தியா
16-மே-201816:17:32 IST Report Abuse

amuthanஓட்டு எந்திரம் கூட எதிரா வேலை செய்யுது. 70 % ஓட்டு தாமரைக்கு செட் பண்ணி வச்சா 50 % கூட பதியாம விட்டுடிச்சி.

Rate this:
sankar - Nellai,இந்தியா
17-மே-201816:55:40 IST Report Abuse

sankarஇதையே - ஓட்ட ரிக்கார்ட் மாதிரி சொல்லிகிட்டே இருங்க...

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
16-மே-201816:15:59 IST Report Abuse

விருமாண்டிபெரும்பான்மையினர் சண்டைபோட்டால் சிறுபான்மையினருக்கு கொண்டாட்டம் தான் . அதற்கு வழிவகுக்க வேண்டாம்

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
16-மே-201815:39:59 IST Report Abuse

BoochiMarunthuமோடி பிரச்சாரம் , அமித் ஷா வீடு எடுத்து தங்கிய பிரச்சாரம் செய்தது , 10 முதல்வர்கள் , 50 மந்திரிகள் , தேர்தல் கமிஷன், IT டிபார்ட்மென்ட் , ஊடகம், whatsapp பொய் செய்தி, இது எல்லாம் இருந்தும் 104 சீட் , 2008 இது எதுவுமே இல்லாம 110 சீட் எடியூரப்பா வாங்கினார் . உங்க EVM ஆட்கள் திறமை இல்லை போல .

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
16-மே-201813:01:39 IST Report Abuse

balakrishnanஅதாவது பெரும்பான்மை வெற்றி பெறுவது அது வெற்றியாக கருதப்பட்டது, இப்போது அதிகமான இடத்தில் வெற்றி பெற்றால் அது வெற்றி, நாளை ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அது வெற்றி, அதற்கு பிறகு தேர்தலில் கலந்துகொண்டால் அது வெற்றி, வெற்றிக்கு ஆயிரம் அர்த்தங்கள்

Rate this:
suresh - covai,இந்தியா
16-மே-201812:15:20 IST Report Abuse

sureshவாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் மெஜாரிட்டியை கூட பெறவில்லையே. மோடி இருந்தும் கூட. எனவே இது உங்களுக்கு பெரிய அவமானம். அதை மறைக்க இந்த வேசம்.

Rate this:
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
16-மே-201810:09:03 IST Report Abuse

முருகவேல் சண்முகம்..கேவலத்தின் உச்சமாக பெல்லாரி, குவாரி கொள்ளையர்களுக்கு அவரது பினாமிகளுக்கும் மொத்தமாக 10 சீட்டுக்கள் ஒதுக்கி ஊழலை ஒழிக்க பாடுபட்டார்கள், ஆனால் அங்கே அவர்களின் சகோதரர்கள் இருவரும், பினாமி ஸ்ரீராமுலுவும் வெற்றி பெற்றார்கள், வாக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்தார்கள், மொத்தமாக பேரம் பேசி வாங்கினார்கள், ஆனாலும் மாஜிக் என்னை பெறமுடியவில்லை அதுதான் எதார்த்தம். என்னத்த சொல்ல.

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
16-மே-201814:04:21 IST Report Abuse

RameshAre we same concept for DMK and Family + ADMK and Extended Family who have looted TN for last 50 and 30 years and now South Asia Richest person...Not to have double standards with High morale ground as we have started to SELL self respect quite long time back... Introspect...

Rate this:
Gopi - Chennai,இந்தியா
17-மே-201813:44:52 IST Report Abuse

Gopiதிமுகவிலிருந்து அதிமுக அதிமுகவிலிருந்து திமுக என்று கட்சி தாவியவர்களை இன்றளவும் ஆதரிக்கின்றனர் கட்சியை வழிநடத்தும் பெருந்தகைகள். இது தடுக்கப்படவேண்டும். இதே மாதிரி யுக்தியை கர்நாடக தேர்தலிலும் கண்டோம். ரெட்டிஎன்றால் ஊழல் என்னும் காங்கிரஸ் அவர்களிடமிருந்து வந்த வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுத்து அவர்கள் தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளார்கள். இதில் மக்களை தான் குறை சொல்லவேண்டும்...

Rate this:
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
16-மே-201810:06:10 IST Report Abuse

முருகவேல் சண்முகம்..தான் முதுகை தானே தட்டி கொடுத்துக்கொள்ளவேண்டும், ஏன்னா, அடுத்தவர்கள் தட்டிக்கொடுப்பதில்லையையே? இதைவிட அதிக இடங்களை 2008 ல் பிஜேபி பெற்று தனியே ஆட்சி அமைத்தது, அதையெல்லாம் மறந்து, துள்ளி குதிக்கிறார்கள், அல்ப சந்தோஷத்தில்.

Rate this:
rajan - nagercoil,இந்தியா
16-மே-201809:00:48 IST Report Abuse

rajanபிஜேபி 29 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது...12 தொகுதிகளில் 5000க்கும் குறைவான வாக்குகளே வாங்கியுள்ளது..

Rate this:
Gopi - Chennai,இந்தியா
18-மே-201813:49:49 IST Report Abuse

Gopiஉண்மைதான் ஒரு முதலமைச்சராக இருந்தவர் ஒரு தொகுதியில் படு தோல்வி இன்னொரு தொகுதியில் நூலிழையில் வெற்றி . இதை என்ன என்று சொல்லவீர்கள்...

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement