நூலிழையில் வெற்றி: சித்தராமையா 'ஷாக்' Dinamalar
பதிவு செய்த நாள் :
நூலிழையில் வெற்றி
சித்தராமையா 'ஷாக்'

பெங்களூரு : கர்நாடகா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட, முதல்வர் சித்தராமையா, ஒன்றில் தோல்வியும், மற்றொன்றில், நுாலிழையில் வெற்றியும் பெற்று உள்ளதால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில், முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த தொகுதியில் முதல்வர் மீது, மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார்.


அதன்படி, பாதாமி தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த தொகுதியில், பா.ஜ., சார்பில், ஸ்ரீராமுலு களம் இறக்கப்பட்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா, இம்முறை, மதச் சார்பற்ற ஜனதாதளம் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பாதாமி தொகுதியில், வெறும், 1,696 ஓட்டுகள் வித்தியாசத்தில், சித்தராமையா வெற்றி பெற்று உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, பா.ஜ., வேட்பாளர், ஸ்ரீராமுலு தோல்வி அடைந்தார்.

Advertisement

எனினும், ரெட்டி சகோதரர்களுக்கு மிக நெருக்கமானவரான ஸ்ரீராமுலு, மொலக்கல்முறு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

நூலிழையில் வெற்றி,சித்தராமையா,ஷாக்

தொடர்ந்து 5 ஆண்டுகள், கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா, தனக்கு மிகுந்த செல்வாக்கு நிறைந்த தொகுதியாக கருதிய, சாமுண்டீஸ்வரியில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி, பாதாமி தொகுதியிலும், நுாலிழையில் வெற்றி பெற்றுள்ளது, அவரது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (31+ 17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201820:49:15 IST Report Abuse

கைப்புள்ளஹாஹாஹா எனக்கு நல்லா செம ஜோக்கா இருக்குது இங்க. டெய்லியும் வந்து இந்த மோடி எதிர்ப்பாளர்கள் வயிறு எரிஞ்சு எரிஞ்சு கத்துவதை பார்க்கும் போது செம ஆனந்தமா இருக்கு. அது, இது, எது ன்னு எந்த ஒரு உண்மையும் இல்லாத கருத்துக்களை சொல்லி சொல்லி மாஞ்சு போவதை பார்க்கும் போது, அடடா இவனுகளுக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது, இப்புடி வீணா போறானுகளேன்னு நினைக்கிறப்போ கொஞ்சம் வேதனையாவும் இருக்கத்தான் செய்யுது. ஆனா என்ன பண்றது? உலகத்துல எல்லோரையும் நாம திருத்த முடியாதே. ஒரு நாலு முட்டாள், நாலு வயித்தெரிச்ச புடிச்சவன் இருக்கத்தானே செய்வான்? அதுக்கு நாம என்ன பண்றது? என்ன நான் சொல்றது?

Rate this:
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-201820:29:20 IST Report Abuse

ManiSThe big mistake by Congress is Lingayat. They should also see others mind.

Rate this:
Ramanathan Balakrishnan - chennai,இந்தியா
16-மே-201819:48:10 IST Report Abuse

Ramanathan Balakrishnanபுகழேந்தி நின்றாரா ? எவ்வளவு ஓட்டு வாங்கினார் ?

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
16-மே-201817:21:47 IST Report Abuse

விருமாண்டிசோனியா குடும்பத்திடம் கூட்டணி வைப்போருக்கு இது மீண்டும் ஒரு எச்சரிக்கை

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
16-மே-201816:19:37 IST Report Abuse

விருமாண்டிநாலா பக்கமும் காங்கிரசை மக்கள் விரட்டி அடிக்கிறார்கள் . ஐயோ பாவம்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
16-மே-201814:58:44 IST Report Abuse

Endrum Indianசித்தம் கலங்கிய ராமைய்யா?????

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
16-மே-201813:59:55 IST Report Abuse

pradeesh parthasarathyசிந்துவை அரசியலிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று பிஜேபி மட்டும் இல்லை ரெட்டி சகோதரர்களின் லட்சியம் அதுவே .. அதனால் தான் ஸ்ரீ ராமுலுவை பதமியில் கொண்டு நிறுத்தத்தில் பிஜேபி சார்பில் பணத்தை வாரி இறைத்தனர் ... ரெட்டி சகோதரர்களின் சட்ட விரோத கனிம கொள்ளையை எதிர்த்து சிடடரமைய மிக பெரிய போராட்டம் பேரணிகள் நடத்தினார் ... அதனால் அவரை ஒழிப்பது என்பது பிஜேபி , ரெட்டி சகோதரரகளின் தீராத லட்சியம் ...

Rate this:
Sanjay - Chennai,இந்தியா
16-மே-201813:19:28 IST Report Abuse

Sanjayராம் என் பெயரியிலே இருக்கிறார் என்று கூவிய போலி சித்துவிற்கு மக்கள் சாட்டையடி கொடுத்துள்ளனர்.

Rate this:
Seenu Cp - Chennai (Madras),இந்தியா
16-மே-201811:55:04 IST Report Abuse

Seenu Cpகர்நாடகாவுல அஇஅதிமுக நோட்டாவை விட குறைவு...அழுத்தமாக பதிய வைக்கும் தினமலர். அப்படியே கொஞ்சம் தமிழகத்தில் திரும்பி பார்க்கவும்...

Rate this:
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
16-மே-201811:11:45 IST Report Abuse

Vmmoorthy Moorthyமோடி பேச்சில் நம்பிக்கை இல்லை காங்கிரசுக்கு தலைமை இல்லை மக்களுக்கு மாநிலத்தலைவர்களை சார்த்திருப்பதை தவிர வேறு வழி இல்லை.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement