அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவெடுப்பாரா வஜுபாய் Dinamalar
பதிவு செய்த நாள் :
அரசியலுக்கு அப்பாற்பட்டு
முடிவெடுப்பாரா வஜுபாய்

புதுடில்லி : கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மாநிலத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்ற முக்கிய முடிவை எடுப்பது தொடர்பாக, கவர்னர் வஜுபாய் வாலா, 79, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அரசியல்,அப்பாற்பட்டு,முடிவெடுப்பாரா,வஜுபாய்

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த, குஜராத் மாநிலத்தில், 1985ல், பா.ஜ., தலைமையிலான ஆட்சி மலர்ந்தது. குறிப்பாக, ராஜ்கோட் சட்டசபை தொகுதியில், 1984 வரை, காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கூட தோல்வி அடையாத நிலையில், பா.ஜ., சார்பில் அங்கு போட்டியிட்ட, வஜுபாய் வாலா, அமோக வெற்றி பெற்றார்.

அப்போது முதல், 2002 வரை, அந்த தொகுதியில், வஜுபாய் வாலாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. அங்கு நடந்த அனைத்து தேர்தல்களிலும், அவரே வெற்றி பெற்றார். மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்தார். 2002ல் நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி

போட்டியிடுவதற்காக, வஜுபாய், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அந்த தேர்தலில், நரேந்திர மோடி வெற்றி பெற்றார்.

அதன் பின் நடந்த பொது தேர்தலில், நரேந்திர மோடி மணிநகர் தொகுதியில் போட்டியிட்டதை தொடர்ந்து, ராஜ்கோட்டில், வஜுபாய் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2007 மற்றும் 2012 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, மோடி தலைமையிலான மாநில அமைச்சரவையில், முக்கிய இலாகாவான, நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார்.

குஜராத் சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்து உள்ள வஜுபாய், 2014ல், மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்ததும், கர்நாடகா மாநில கவர்னராக பொறுப்பேற்றார். குஜராத் மாநில பா.ஜ., தலைவர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக அவர் திகழ்ந்தார்.

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரியுள்ளது.

அதே சமயம், இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ள, காங்., - மதசார்பற்ற

Advertisement

ஜனதாதளம் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், சட்ட விதிகளின் படி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ள, பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், காங்., - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு வாய்ப்பு வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோடிக்கு மிக நெருக்கமாக இருந்தவரும், பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமாக திகழ்ந்த, வஜுபாய், தற்போது, கவர்னர் பதவி வகிப்பதால், அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ளார். வஜுபாய் எந்த மாதிரியான முடிவை எடுக்கவுள்ளார் என, அரசியல் தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (36+ 53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-201820:22:19 IST Report Abuse

ManiSIf there is a situation like this, At that time only you people were recalling the word Democracy?

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-மே-201819:59:16 IST Report Abuse

Rafi ஒரு சுக்கும் கிடையாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவு எடுக்கமாட்டார் என்பதை இந்த கட்டுரை மிக விரிவாக புலப்படுத்துகின்றது .

Rate this:
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
16-மே-201819:49:02 IST Report Abuse

மஸ்தான் கனிவோட்டு மெஷின் கைகொடுக்கும்போது வஜுபாய் கைகொடுக்க மாட்டாரா? தேர்தல் முடிவு வருவதற்கு முன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க., பணநாயகத்தை காக்க அவகாச நாடகம்., அப்பாவுக்கு முதல்வர் பதவி - சாமி அய்யா கணக்கு போட்டு என்னப்பயன்?

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
16-மே-201817:02:26 IST Report Abuse

விருமாண்டிவாழ்க பாஜக

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201801:17:47 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்சைன் சக்கா.....

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
16-மே-201813:52:10 IST Report Abuse

pradeesh parthasarathyஇவரிடம் நீதியை எதிர்பார்ப்பதா..? பிஜேபி யை தான் ஆட்சி அமைக்க அழைக்க போகிறார் ... இது அனைவருக்கும் தெரிந்த ஓன்று ... குதிரை பேரம் துவங்கட்டும் ...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
16-மே-201812:58:26 IST Report Abuse

balakrishnanஅரசியலுக்கு அப்பாற்பட்டு நாகபூரில் இருந்து உத்தரவு வரும்

Rate this:
kundalakesi - VANCOUVER,கனடா
16-மே-201816:13:46 IST Report Abuse

kundalakesiவாட்டிகன் ஜித்தாவில் இருந்து வராது. தூக்கி எறிய படும்....

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
16-மே-201818:41:54 IST Report Abuse

Sitaramen Varadarajanகுண்டலகேசி அவர்களே...அருமையான நெற்றியடி. எப்படியாவது வாடிகன் அடிமை ஒழிந்தால் நிம்மதி....

Rate this:
suresh - covai,இந்தியா
16-மே-201812:06:24 IST Report Abuse

sureshஜனநாயக மரபுப்படி கவர்னர் முதலில் பெரும்பான்மை 112 + உள்ள கட்சியையோ அல்லது கூட்டணி கட்சிகளையோ பதவியேற்க அழைக்க வேண்டும். எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையும் இல்லாமல் கூட்டணியாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவும் விருப்பம் இல்லாமலும் இருந்தால் மட்டும் தான் இரண்டாவது வழியாக தனிப் பெரும் கட்சியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இப்படி ஜனநாயகப்படி பார்த்தால் முதல் வாய்ப்பு காங் + மஜத. இரண்டாவது வாய்ப்பு தான் BJP க்கு கவர்னர் தர வேண்டும். ஆனால் இந்த BJP கவர்னரிடம் ஜனநாயகத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. மக்கள் எல்லாம் முட்டாள்கள் என நினைத்து ஒரு ஜனநாயக விரோத முடிவை தான் எடுப்பார்கள் பாருங்கள்.

Rate this:
Krishnan - Coimbatore,இந்தியா
16-மே-201814:50:00 IST Report Abuse

Krishnanசுரேசு... என்னமோ கான்ஸ்டிடியூஷனை கரைச்சுக் குடிச்ச புண்ணாக்கு மாதிரி பேசுற பாரு......

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
17-மே-201817:10:19 IST Report Abuse

Sitaramen Varadarajanதிரு சுரேஷ்ஷ் அவர்களே.......மக்கள் முட்டாள்கள் என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா...?...."எது ஜனநாயக விரோதம்? ஊழல் மலிந்த குமாரசாமியுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவின் B டீம் என்று கர்நாடக தேர்தலில் பிரச்சாரம் செய்த சித்தராமையாவும், செத்தாலும் காங்கிரஸீடன் கூட்டணி கிடையாது என்று கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் சத்தியம் செய்து வாக்காளர்களிடம் உறுதிமொழி அளித்த குமாரசாமியும் பாஜக ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக தேர்தல் முடிந்த உடன் கூட்டணி என்கிற பெயரில் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோருவது மக்கள் விரோதமில்லையா? ஜனநாயகப் படுகொலை இல்லையா? கர்நாடகாவில் சித்தராமையாவும் குமாரசாமியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் அது பேயும் பிசாசும் சேர்ந்து குடும்பம் நடத்துவது போலத்தான் இருக்கும்...."...

Rate this:
suresh - covai,இந்தியா
16-மே-201811:49:32 IST Report Abuse

sureshஎன்ன இந்த கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவடுப்பாரா? அப்படின்னு நாம நானச் சா நாம தான் முட்டாள் .அவரு எப்பேரு பட்ட தந்தரவாதின்னு இந்த வாரத்துல தெரிஞ்சிடும். இவரே ஒரு BJP - ன் கைக்கூலி. அப்புறம் ஜனநாயக மாவது மக்கள் நலனாவது.

Rate this:
s t rajan - chennai,இந்தியா
16-மே-201810:34:52 IST Report Abuse

s t rajanகாலம் எவ்வளவு விசித்திரமானது என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. இப்பொழுது கர்நாடகா கவர்னராக இருக்கும் வாஜூபாய் ரூதாபாய் வாலா குஜராத் மாநில பிஜேபி தலைவ ராக இருந்த பொழுது இதே தேவகவுடா பிரதமராக இருந்தார். அப்பொழுது குஜராத் முதல்வராக பிஜேபி யின் சுரேஸ் மேத்தா இருந்தார். . அப்பொழுது 121 எம்எல்ஏக்களுடன் பிஜேபி மெஜார ரிட்டியுடன் தான் இருந்தது.வகேலாவை தூண்டிவிட்ட காங்கிரஸ் பிஜேபி யை உடைத்து அவருடன் 28 பிஜேபி எம்எல்ஏக்களை இழுத்து சட்டசபையில் மெஜாரிட்டியுடன் இருந்த பிஜேபி ஆட்சியை தேவகவுடா வை வைத்து கலைத்தது. மெஜாரிட்டி யுடன் இருக்கும் ஆட்சியை கலைக்க வேண்டாம் என்று அப்போதைய கவர்னர் கிருஷ்ண பால்சிங்கி டம் நடையாய் நடந்தவர் இப்போதைய கர்நாடக கவர்னர் அப்பொழுது பிஜேபி ஆட்சியை கலைத்த தேவகவுடா இப்பொழுது தன் மகனை முதல்வராக்க அப்பொழுது குஜராத் மாநில பிஜேபி தலைவரும் இப்போதைய கவர்னருமான வாஜூபாய் வாலாவின் உதவி கேட்டு காங்கிரஸ் துணையுடன் வருகிறார்..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201801:24:56 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இந்திய அரசியலில் காலங்கள் மாறலாம், கட்சிகள் மாறலாம். ஆனால் ஜனநாயகத்தை மிதித்து மக்களை ஏமாற்றும் கருமம் பிடிச்ச கட்சிகள் என்றைக்கும் மாறாது....

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
17-மே-201817:12:02 IST Report Abuse

Sitaramen Varadarajanஅதாவது உம்மால் ஜால்றா அடிக்கப்பட்ட கட்சிகள்....வந்தேறிகளிடம் பாரதத்தை அடகு வைத்த கும்பல். உம்மை தத்துவம் எல்லோருக்கும் நன்றாகவே புரிந்து விட்டது. கம்முனு கடக்கலாம்....

Rate this:
Subramanian - chennai,இந்தியா
16-மே-201810:26:21 IST Report Abuse

Subramanianஇந்தியாவில் தர்மம் நியாயம் பேசும் கவர்னர் யார் இருக்கா ?

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
17-மே-201817:13:41 IST Report Abuse

Sitaramen Varadarajanவந்தேறிகளிடம் வாங்கிக்கொண்டு ......அவர்களுக்கு பாரதத்தை அடகு வைத்த கும்பல் .... பற்றி பேச என்ன உள்ளது....

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement