கர்நாடகாவில் காங்., - ம.ஜ.த., கட்சிகள் உடையும்! தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையில்லை Dinamalar
பதிவு செய்த நாள் :
கர்நாடகா,காங்கிரஸ்,ம.ஜ.த., கட்சிகள்,உடையும்,தேர்தல்,எந்த கட்சிக்கும்,பெரும்பான்மையில்லை

பெங்களூரு : கர்நாடகா சட்டசபை தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ.,வின், எடியூரப்பா, ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார். அந்த கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க, எட்டு இடங்களே தேவைப்படும் நிலையில், காங்., - ம.ஜ.த., கட்சிகள் உடையும் என, தெரிகிறது. இதனால், ம.ஜ.த., தலைவர், குமாரசாமியை பகடை காயாக்கி, குளிர்காய நினைக்கும், காங்., எண்ணம் தவிடுபொடியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா,காங்கிரஸ்,ம.ஜ.த., கட்சிகள்,உடையும்,தேர்தல்,எந்த கட்சிக்கும்,பெரும்பான்மையில்லை

கர்நாடகாவில், மொத்தமுள்ள, 224 சட்டசபை தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை, மாநிலத்தின், 38 மையங்களில் நேற்று நடந்தது. 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்ததால், 112 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, அரியணை ஏறத் தகுதி பெறும்.

நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். பா.ஜ., 112 முதல், 115 இடங்கள் வரை முன்னிலை வகிப்பதாக, தகவல்கள் வெளியாகின. ஆளும், காங்., 70க்கும் குறைவான தொகுதிகளிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மதச்சார்பற்ற ஜனதா தளம் எனப்படும், ம.ஜ.த., 40க்கும் குறைவான தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

தலைகீழ் :


'தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து விடுவோம்' என, பா.ஜ.,வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சமயத்தில், நிலைமை தலைகீழாக மாறியது. நேற்று இரவு நிலவரப்படி, பா.ஜ., 104; காங்., 78; ம.ஜ.த., 37; பகுஜன் சமாஜ், 1; சுயேச்சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகா அரசியலில் பரபரப்பு தொற்றியது. ஆட்சியை இழப்பது உறுதி என்ற நிலையில், காங்., தடாலென கீழே இறங்கியது. ஆட்சியை, ம.ஜ.த.,விடம் தாரைவார்க்க தயாரானது. இதன்பின், கர்நாடக அரசியலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.
பெங்களூரில், சித்தராமையா, காங்., தலைவர்கள், குலாம்நபி ஆசாத், வேணுகோபால், மாநில தலைவர், பரமேஸ்வர் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி, காங்., தலைவர், ராகுலிடம் தொலைபேசியில் பேசினர். 'ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து, குமாரசாமியை முதல்வராக்குங்கள்...' என, ராகுல் கூறினார்.

காங்., முன்னாள் தலைவர், சோனியா, தேவ கவுடாவுடன் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தார். நிபந்தனை இன்றி, ம.ஜ.த.,வுக்கு ஆதரவு தருவதாக, முதல்வர், சித்தராமையா அதிகாரபூர்வமாக அறிவித்தார்; தன் ராஜினாமா கடிதத்தை, மாலை, 4:00 மணிக்கு, கவர்னர், வஜுபாய் வாலாவை சந்தித்து கொடுத்தார். இதன்பின், காங்கிரசின் ஆதரவை ஏற்பதாக, குமாரசாமி அறிவித்தார்.

சந்திப்பு :


இதற்கிடையே, முன்னாள் பிரதமர், தேவ கவுடாவை, பா.ஜ., தரப்பில், மூத்த தலைவர், ஆர்.அசோக் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர், அனந்தகுமார், மாநில மேலிட பொறுப்பாளர், முரளிதர ராவ், எம்.பி., ஷோபா ஆகியோருடன், நேற்று மாலை, 5:00 மணிக்கு, கவர்னரை சந்தித்த, பா.ஜ.,வின் எடியூரப்பா, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக, பா.ஜ., உருவெடுத்துள்ளதால், ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி, கடிதம் கொடுத்தார்.

அக்கடிதத்தில், ஆட்சி அமைத்து, ஏழு நாட்களில் பெரும்பான்மை நிரூபிப்பதாகவும், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதை தொடர்ந்து, ம.ஜ.த., மாநில தலைவர், குமாரசாமி, காங்கிரசின் சித்தராமையா, பரமேஸ்வர், டி.கே.சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல் போன்ற தலைவர்கள் கூட்டாக சென்று, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க தேவையான, 112 இடங்களுக்கு மேலாக, தங்கள் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளதால், ம.ஜ.த., தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

இதையடுத்து, கவர்னரின் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்தே, கர்நாடகாவில் அரசியல் நிகழ்வுகள் அரங்கேறும் சூழல் உருவாகியுள்ளது. மரபுப்படி, தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ.,வை ஆட்சி அமைக்க, கவர்னர், வஜுபாய் வாலா அழைப்பு விடுக்கலாம்.

பா.ஜ.,வின் எடியூரப்பா, முதல்வராக பதவியேற்று ஆட்சி அமைத்தால், அவருக்கு, மேலும், எட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அதற்கு, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறலாம். இல்லாவிடில், காங்., அல்லது, ம.ஜ.த.,வை உடைத்து, அவற்றின், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெறலாம்.

இந்த முயற்சிக்கு, கட்சி தாவல் தடை சட்டம் என்ற ஆபத்தும் உள்ளது. இதிலிருந்து தப்பிக்க, அந்த கட்சிகளின் மூன்றில் ஒரு பங்கு, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற்றாக வேண்டும். மற்றொரு முயற்சியாக, காங்., அல்லது, ம.ஜ.த., கட்சிகளின், எம்.எல்.ஏ.,க்கள் சிலரை ராஜினாமா செய்ய வைத்து, பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை குறைக்கலாம்.

ஆட்சி அமைப்பதற்காக, பா.ஜ., மேலிடம் இந்த முயற்சியில் ஈடுபடுமா அல்லது குமாரசாமிக்கு முதல்வர் பதவி ஆசை காட்டி, குளிர்காய நினைக்கும் காங்கிரசின் தந்திரம் வெற்றி பெறுமா... என்பது, அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.

இப்படியும் நடக்கலாம்!

கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சிகளை ஒதுக்கி, அடுத்த இடத்தை பிடித்த கட்சியை, ஆட்சி அமைக்க அழைத்த வரலாறு உண்டு. அதேபோல, கர்நாடகாவில், ம.ஜ.த.,வை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ம.ஜ.த.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், காங்., ஆதரவுடன் எளிதில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும். ம.ஜ.த.,வுக்கு, பா.ஜ., ஆதரவு அளிக்கும் வாய்ப்பும் உள்ளது. இது, மிக அரிய வாய்ப்பாக கருதப்பட்டாலும், மாறி வரும் அரசியல் உலகில் எதுவும் நிகழ்வது சாத்தியமே. ம.ஜ.த.,வை, பா.ஜ., ஏற்கனவே அணுகியுள்ளது. இருப்பினும், காங்., ஆதரவை ஏற்பதாக, ம.ஜ.த., அறிவித்துள்ளது. 'தற்போதுள்ள சூழ்நிலையில், ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பு பெறும் கட்சி, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்' என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (138+ 171)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201820:48:43 IST Report Abuse

கைப்புள்ளஹாஹாஹா எனக்கு நல்லா செம ஜோக்கா இருக்குது இங்க. டெய்லியும் வந்து இந்த மோடி எதிர்ப்பாளர்கள் வயிறு எரிஞ்சு எரிஞ்சு கத்துவதை பார்க்கும் போது செம ஆனந்தமா இருக்கு. அது, இது, எது ன்னு எந்த ஒரு உண்மையும் இல்லாத கருத்துக்களை சொல்லி சொல்லி மாஞ்சு போவதை பார்க்கும் போது, அடடா இவனுகளுக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது, இப்புடி வீணா போறானுகளேன்னு நினைக்கிறப்போ கொஞ்சம் வேதனையாவும் இருக்கத்தான் செய்யுது. ஆனா என்ன பண்றது? உலகத்துல எல்லோரையும் நாம திருத்த முடியாதே. ஒரு நாலு முட்டாள், நாலு வயித்தெரிச்ச புடிச்சவன் இருக்கத்தானே செய்வான்? அதுக்கு நாம என்ன பண்றது? என்ன நான் சொல்றது?

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
16-மே-201816:58:09 IST Report Abuse

விருமாண்டிஇந்திய நாட்டுக்கு காங்கிரஸ் செய்த பாவங்கள் நீங்க பல யுகங்கள் தேவைப்படும் .

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
16-மே-201816:56:33 IST Report Abuse

விருமாண்டிகாங்கிரசை நாலா பக்கமும் மக்கள் விரட்டி அடிக்கிறார்கள்

Rate this:
rajan - thane,இந்தியா
16-மே-201817:33:37 IST Report Abuse

rajanவாயில சோத்த குடுத்து மூஞ்சில குத்துனது இருக்கே அப்ப்பா...

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
16-மே-201816:10:16 IST Report Abuse

விருமாண்டிஎங்கும் தாமரை மலரட்டும் .வாழ்த்துக்கள் மோடி ஜி

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
16-மே-201816:09:22 IST Report Abuse

விருமாண்டிவாழ்க பாஜக வாழ்க பாரதம்

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
16-மே-201813:21:43 IST Report Abuse

pradeesh parthasarathyதேர்தலில் 38 சதவிகித ஒட்டு வாங்கிய காங்கிரஸ் தான் இந்த சூழ்நிலையில் மிக பெரிய கட்சி ...அதன் கூட 18 .4 சதவிகித வோட்டு மத சார்பற்ற ஜனத்தளம் சேரும்போது அதன் வலிமை 56 . 4 சதவிகிதமாக மாறுகிறது ... அந்த அடிப்படையில் காங்கிரஸ் அமைக்கும் கூட்டணிக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ... 36 சதவிகிதம் வாங்கிய பிஜேபி யை கவர்னர் அழைத்தால் அது ஜனநாயக கொலை , மட்டுமன்றி மற்ற கட்சிகளை உடைத்து விலை பேசி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ரெட்டி சகோதர்களின் ஊழல் சாம்ராஜ்யம் மேலும் விரிவடைய தான் வழி வகுக்கும் ...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-மே-201814:37:27 IST Report Abuse

ஆரூர் ரங்இத்தாலி காங்கிரசுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? உங்கள் அபிமான சீன வால்பிடி கம்யூனிஸ்ட் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 81,191 சூப்பர் இது 322,381 ஓட்டுவங்கிய நோட்டாவை மிஞ்சிவிட்டதே...

Rate this:
Gopi - Chennai,இந்தியா
16-மே-201819:04:59 IST Report Abuse

Gopiஎன்னே மாதிரியான மீடியா மயக்கத்தில் உள்ளீர்கள். 38 பெருசா 36 .5 பெருசா என்று கேட்கும் நீங்கள் அடிப்படையில் என்ன நேர்ந்தது என்று விவரிக்கவில்லையே. demography (population ) மக்கள் தொகை சார்ந்த தொகுதிகளில் அதுவும் தென் கர்நாடகா (மாண்டியா மைசூரு ) பகுதியில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளத்திற்கும் காங்கிரசிற்கு கடும் போட்டி நிலவியது தெரியலாம். அங்கெல்லாம் பிஜேபியால் ஒன்று செய்ய முடியவில்லை என்பது புள்ளியியல் வல்லுநர்கள் கருத்து. நீங்கள் பிரான்ஸ் நாடு மாதிரி பிரதமர் அதிபரை மக்கள் நேரிடையாக தேர்வு செய்வது போல கொண்டுவந்திருக்க வேண்டும் என்று விரும்பினால் அப்பொழுது முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் ஊர் வட்டம் மாவட்டம் என்று நில அவையில் அந்தந்த தொகுதிக்கு தேர்தல் வரும்போது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒட்டு செலுத்தியவர்கள் எண்ணிக்கை மாறுபடும். இங்கு சென்னையில் எழும்பூர் தொகுதி உள்ளது (இது போன்ற தொகுத்து வரையறை தேவையா என்று தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யவேண்டும் ) மிக சிறியது . உங்கள் கூற்றுப்படி பார்த்தால் உலகத்தில் அதிகமாக காலணிகள் அணியும் நாடு சீனா என்றும் அதற்கடுத்தவர்கள் இந்தியர்கள் என்றும் கூறுவீர்கள் போல. ஒன்றே ஒன்று நிச்சயம் இங்கு எலியும் பூனையுமாக இருக்கும் திமுக அண்ணா திமுக போல பிஹாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் நிதிஷின் ஒருங்கிணைந்த ஜனதாதளம் ஒன்றிணைந்து பிஜேபியை எதிர்த்ததாலேயே ஆட்சிக்கு வரமுடிந்தது. இதை போன்ற பார்முலாவை 2019 எதிர் கட்சிகள் கொண்டுவந்தால் மட்டுமே மோடியை (பிஜேபியை அல்ல ) வெல்ல முடியும். நம்ம ஊரிலும் ஒருத்தர் இருந்தார் அவர் ஜெ ஜெயலலிதா , எல்லாம் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, கூட்டணி இல்லாமலேயே மத்திய மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றார்....

Rate this:
Ashanmugam - kuppamma,இந்தியா
16-மே-201812:29:30 IST Report Abuse

AshanmugamBJP can grab eight MLAs by throwing crores of money but not to allow minority party SDs who secured just one third of BJP seats(38) at any cost. Otherwise what is prevailing in Tamil nadu that will happen at Karnataka if minority SDS formed government. For example: a student who secured 1170marks could not get in reputed college but a student who secured 800 marks hot seat in reputed college, how does feel meritorious student who could not get seat in reputed college however he secure 1170marks that is fate of yediyurrappa.

Rate this:
Ashanmugam - kuppamma,இந்தியா
16-மே-201812:17:28 IST Report Abuse

AshanmugamIt is not a great victory for BJP to secure 104 seats indepently but to form government is challengeable task for BJP whose effort should not go to minority king maker rather they should be" kooja maker".

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
16-மே-201812:07:33 IST Report Abuse

balakrishnanகரடியா கத்தி ஓட்டு கேட்ட பிரதமருக்கு மக்கள் அங்கீகரிக்க வில்லை, சில பல தொகுதிகளை தேர்ந்தெடுத்து பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து வெற்றி பெற முடியவில்லை என்கிற ஆத்திரம் பி.ஜெ.பி க்கு., இனி தங்களது திறமையை காட்ட துவங்குவார்கள், என்னென்ன குறுக்கு வழிகள் இருக்கிறதோ அத்தனை குறுக்கு வழிகளிலும் ஜனநாயக முறையில், கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து உள்ளே நுழைந்து அனைத்து முறைகேடான வழிகளிலும் செல்வார்கள், இது தெரிந்த விஷயம் தான், தேவைப்பட்டால் சட்ட விதிமுறைகளையும் மாற்றுவார்கள்

Rate this:
Krishnan - Coimbatore,இந்தியா
16-மே-201814:35:29 IST Report Abuse

Krishnanபாலா பாய், உன்னோட விடியாமூஞ்சியோட நீ என்ன தான் பொலம்பினாலும் பிரதமருக்கு நாடு முழுக்க பெருகி வர்ற ஆதரவு துளி கூட குறைய போறதில்லை....

Rate this:
sethu - Chennai,இந்தியா
16-மே-201815:05:25 IST Report Abuse

sethuபல்கி உனக்கு என்ன வலிக்குதா ,...

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
16-மே-201819:24:46 IST Report Abuse

Rahimஎங்கே பெருகி ஓடுது ஆதரவு ????? தோற்ற இடங்களில் எல்லாம் தில்லாலங்கடி வேலை செய்து ஆதரவு னு நீங்களே பீற்றி கொள்கிறீர்கள் , ஒண்ணுக்கும் உதவாத ஒரு மேடை பேச்சாளனுக்கு இவ்வளவு பில்டப் தேவையா...

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
16-மே-201812:02:27 IST Report Abuse

Appavi Tamilanநாங்க எதுக்கு நேர்மையா அரசியல் செய்யணும்? பெட்டிகளை குடுத்தால் கட்சி மாறி காலில் விழ பலர் உள்ளனர். பொய்களை சொன்னால் நம்பி ஏமாற ஏமாளி மக்கள் ஒரு சாரார் உள்ளனர். பகத்சிங்கை நேரு சந்திக்கவில்லை என்று சொன்னால் அதையும் நம்புவார்கள். ஜெனெரல் திம்மையா நேருவால் அவமதிக்கப்பட்டார் என்றால் அதையும் நம்புவார்கள். உச்சகட்டமாக இந்தியா முழுக்க எல்லா கிராமங்களிலும் மின்வசதி செய்துவிட்டோம் என்று சொன்னால் அதையும் நம்புவார்கள். இப்படிப்பட்ட ஏமாளிகளிடம் வாக்குகளை வாங்குவது கடினம் அல்லவே. போதாக்குறைக்கு நீதித்துறை, ஊடகம் என்று எல்லாவற்றையும் களங்கப்படுத்தி எங்கள்வசம் வளைத்துவிட்டோம். இனி எங்களுக்கு என்ன கவலை??? ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத தமிழகத்தை நாங்கள் ஆளவில்லையா? வெறும் இரண்டு உறுப்பினர்களை மட்டும் வைத்து மேகாலாயாவை நாங்கள் ஆளவில்லையா? அதை மக்கள் வேடிக்கை பார்க்கும்போது, இதற்கு மட்டும் என்ன கேள்வி? தவறு என்றார் தெரிந்தாலும் எங்கள் ஆணைப்படி செய்யும் எங்கள் ஆளுநர் மூலம் கால அவகாசம் வாங்கி, பிறகு எதிர் அணி உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் வாங்கி எப்படியும் ஆட்சி அமைப்போம். வழக்கம்போல் வேடிக்கை பாருங்கள்...

Rate this:
மேலும் 122 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement