காவிரி விவகாரம்: முதல்வர் ஆலோசனை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காவிரி விவகாரம்:
முதல்வர் ஆலோசனை

சென்னை: காவிரி விவகாரம் குறித்து, முதல்வர் பழனிசாமி நேற்று, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

காவிரி விவகாரம்,முதல்வர்,ஆலோசனை

மத்திய அரசு நேற்று முன்தினம், உச்ச நீதிமன்றத்தில், காவிரி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி நேற்று, தலைமை செயலகத்தில், முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார்,

செங்கோட்டையன், அன்பழகன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பல்வேறு துறை அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

மோடிக்கு வாழ்த்து:


இதற்கிடையில், கர்நாடக தேர்தலில், தனி பெரும் கட்சியாக, பா.ஜ., வெற்றி பெற்றதால், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷாவிற்கு, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கர்நாடக, பா.ஜ., முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் வெற்றிக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Advertisement

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில், ''தென்மாநிலங்களில், பா.ஜ.,வின் வெற்றி வாசல் கதவு, கர்நாடகத்தில் திறந்துள்ளது. தென் மாநிலங்களில் வெற்றி தொடரும்,'' என, தெரிவித்தார்.

''கர்நாடகாவில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என, அவர்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
16-மே-201820:06:16 IST Report Abuse

PR Makudeswaranஎடப்பாடிக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் என்ன தெரியும் என்ன புரியும் இதில் ஆற்று மணல் சம்பந்தம் இல்லையே ரஜினி ஒரு கோடி தருவதாகத்தான் சொன்னார் சினிமாக்காரன் புகழ் பாட ஒரு அளவு இல்லையா எந்த தி மு க வும் காவேரியை கொண்டு வரவில்லை காலம் தான் கொன்டு வந்தது நதி நீர் திட்டம் என்று பேசியே பணம் பார்த்த கட்சிகள் இங்கு தமிழினத்தை கெடுத்த மு க இனியும் நூறு ஆண்டுகள் இதே நிலைமையில் தொடர வேண்டும். பணம் சேர்த்த அளவு பாவத்தையும் சேர்த்த புண்ணியவான்.

Rate this:
JANANI - chennai,இந்தியா
16-மே-201817:11:57 IST Report Abuse

JANANIVivasaayigal thevaiyai poorthi seiyya ADMK eppavum thavariyathu illai

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
16-மே-201817:05:51 IST Report Abuse

Sundaramகாவிரியை அதிமுக ஆட்சியினால் மட்டும் கொண்டுவர முடியும்

Rate this:
ram - chennai,இந்தியா
16-மே-201816:54:32 IST Report Abuse

ramமேலாண்மை வாரியத்தோட தலைமையகம் டெல்லியில் அமைய வாதம் செய்திருக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு நன்றி

Rate this:
R chandar - chennai,இந்தியா
16-மே-201814:24:03 IST Report Abuse

R chandarThis cauvery issue is getting prolonged for another months or year now tamilnadu government should act fast to sort out this issue with its own resources of installing more diesalination plants and increase the capacity of existing plants by stop and avoid unnecessary freebies like pongal dhoty ,saree ,mixie ,grinder. All delta regions should be installed with diesalination plants and make the water supply through pipeline, and dig out more bores and wells to augment water during rainy season. This should be done in three months time by announcing this through assembly with the support of opposition party. .

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-மே-201809:48:05 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மீட்டிங்குக்கு பக்கோடாவா, இல்லை மிக்சரா?

Rate this:
16-மே-201807:41:24 IST Report Abuse

ஆப்புஇங்கிதமே தெரியாத முதல்வர்..எடியூரப்பா வுக்கு வாழ்த்து சொல்ல வேணாமா? இங்கே மணல் கொள்ளை மாதிரி அங்கே கிரானைட்லே கொடிகட்டிப் பறந்தவராச்சே....

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201800:23:21 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மணல் கிரானைட் இரண்டுக்குமே துணை முதல்வர், மிக்ஸர் நாயகன் தான் .....

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
16-மே-201802:30:16 IST Report Abuse

அன்புபழனி அதிமுகவில் இருக்கிறாரா? அல்லது பிஜேபியில் இருக்கிறாரா? காவேரிக்காக கூட்டமா? அல்லது பிரதமருக்கு வெற்றி வாழ்த்து தெரிவிப்பதற்காக கூட்டமா?

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
16-மே-201801:54:00 IST Report Abuse

ramasamy naickenமுதலில் எடப்பாடி தாமிரபரணி - நம்பியாறு இணைப்பு திட்டத்தை பற்றி ஆலோசிக்க வேண்டும். பத்து வருடம்களாக பாதியில் விடப்பட்டு அனாதையாக நிற்கின்றது. ஆனால் ஒவொரு வருடமும் பட்ஜெட்டில் மட்டும் பணம் "ஒதுக்க" படுகின்றது. அப்படி ஒதுக்கிய பணத்தை அமுக்கிய களவாணி யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இல்லை இதெற்கும் உச்ச நிதிமன்றம் சென்றுதான் நிதி மற்றும் நீதி பெறவேண்டுமா? ரஜினி கொடுத்த ஒரு கோடி ரூபாயை வைத்தாவது வேலையை துவக்குங்கள்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement