நாளை பதவியேற்கிறோம் : எடியூரப்பா| Dinamalar

நாளை பதவியேற்கிறோம் : எடியூரப்பா

Added : மே 16, 2018 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எடியூரப்பா, கர்நாடக

பெங்களூரு : கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழலில் நடந்த பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டசபை தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

கவர்னரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, சட்டசபை தலைவராக கட்சி என்னை ஒரு மனதாக தேர்வு செய்தது. ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரி உள்ளோம். ஆட்சி அமைக்க எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தையும் கவர்னரிடம் அளித்துள்ளோம். அதனால் கவர்னர் எங்களின் கோரிக்கையை பரிசீலித்து ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

உரிய நேரத்தில் சரியான முடிவு எடுப்பதாக அவர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார். கவர்னரிடம் கடிதம் வந்த பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன். கவர்னரிடம் இருந்து அழைப்பு வந்த உடன் நாளை நாங்கள் பதவியேற்க உள்ளோம் என்றார்.
இதற்கிடையில் சுயேட்சை எம்எல்ஏ.,க்கள் சிலர் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மஜத மற்றும் காங்., கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் சிலரும் எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமாறன் - trichy,இந்தியா
16-மே-201820:46:30 IST Report Abuse
மணிமாறன் பிஜேபி 29 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது..தமிழ் நாட்டை போலவே அங்கேயும் 12 தொகுதிகளில் நோட்டாவை விட கீழே போய் இருக்கிறது.. இவர்கள் தான் ஆட்சி அமைக்க போகிறார்கள்..வெட்கம் கெட்டவர்கள்..
Rate this:
Share this comment
Cancel
16-மே-201820:12:26 IST Report Abuse
ஆப்பு வுட்டா நடுராத்திரியிலும் பதவியேற்பாரு...
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
16-மே-201818:45:02 IST Report Abuse
Somiah M காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் கொண்டு போன கதையாகிவிடும் போல் இருக்கிறதே .
Rate this:
Share this comment
Cancel
Vijay Kumar - Chennai,இந்தியா
16-மே-201818:37:57 IST Report Abuse
Vijay Kumar காங்கிரஸ் நடத்திய ஜனநாயக படுகொலைகள் 2005 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 30 இடங்களை கைபற்றி இருந்தது அன் கூட்டணி கட்சியான JDU 6 இடங்களை கைபற்றி இருந்தது எதிரணியில் காங்கிரஸ் 9 இடங்களையும் கூட்டணிகட்சியான JMM 17 இடங்களையும் கைபற்றியது மீதமிருந்த சுயேட்சைகளில் 5 பாஜகவை ஆதரித்தனர் 36+5 = 41 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அனைவரிடமும் ஒப்புதல் கையொப்பம் பெற்று ஆளுனரிடம் அளித்தது பாஜக அனைவரையும் ஆச்சர்யபடுத்தும் வகையில் ஆளுனர் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் Sr பொம்மை வழக்கினௌ தீர்ப்பின் படி 1. தனி பெரும்பான்மையான கட்சி - பாஜக 2. தனி பெரும் Pre Poll கூட்டணி பாஜக - JDU 3. தனிப்பெரும் Post Poll கூட்டணி பாஜக + JDU+ Independents இந்த மூன்றுமே பாஜகவிற்கு சாதகமாகியிருந்தும் இந்த ஜனநாயக கொலையை அரங்கேற்றியது காங்கிரஸ் அதன் பின்னர் நடந்தது தான் இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்பு பக்கங்கள் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி முன்னர் MLA க்களை அணிவகுப்பு நடத்த பாஜக திட்டமிடுகிறது ஜார்கண்ட் ரான்சி விமானநிலையத்தில் இருந்து டெல்லி செல்லயிருந்த விமானத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் இருந்தன இதையறிந்த JMM - Congress குண்டர்படை துணைமுதல்வர் தலைமையில் விமானநிலைய்த்திற்கு வந்து கிளம்ப தயாரான விமானத்தை நிறுத்தி பாஜக- JDS கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த 5 யேட்சை MLA க்களை களவாட முயன்றனர் ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த தரங்கெட்ட அரசியலை முன்னரே யூகித்த பாஜக அந்த 5 எம்எல்ஏ க்களையும் ஜார்க்கண்ட் அண்டை மாநிலமான மேற்கு வங்த்துக்கு அனுப்பியிருந்தனர் அப்பொழுது மேற்கு வங்கத்தில் Communist ஆட்சி அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்கமுடியுமா?? மேற்குவங்க போலீஸ் காங்கிரஸ் குண்டர்களுக்கு சாதகமாகிவிட்டது என்பதை உணர்ந்த பாஜக அந்த 5 பேரையும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் ஒரிசாவிற்கு சாலைமார்க்கமாக அழைத்து சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி அழைத்துச் சென்று ஜனாதிபதி முன்னிலையில் அணிவகுப்பு நடத்தி முறைகேடாக அமைக்கபட்ட காங்கிரஸ் ஆட்சியை கலைத்து பாஜக ஆட்சி நிலைநாட்டப்பட்டது இந்த ஜனநாயக அசிகங்களை நடத்தி கொண்டிருந்த அன்னைறைய மைனாரிட்டி மத்திய காங்கிரஸ் அரசை தாங்கிபிடித்துக் கொண்டிருந்த கம்னுயிஸ்ட் களும் நம்ம தமிழக கட்சிகளான மதிமுக விசிக பாமக போன்ற கட்சிகள் நமக்கு இன்று ஜனநாயத்தை பற்றி பாடமெடுப்பதுதான் காலக் கொடுமை
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
16-மே-201817:48:52 IST Report Abuse
J.Isaac பிச்சைகாரகங்ளை விட மோசமான பிழைப்பாப்போச்சு நம் அரசியல்
Rate this:
Share this comment
Cancel
16-மே-201817:29:07 IST Report Abuse
ஆப்பு சுயேச்சைகள் காட்டுல பண மழை...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-மே-201815:46:39 IST Report Abuse
Pasupathi Subbian இந்த பதிவு செய்யும் நேரம் மாலை மூன்று மணி நாற்பத்து ஐந்து நிமிடம். இப்போது வரை காங்கிரசில் ஆறுபேர், குமாரசாமியிடம் இருந்து இரண்டுபேரை காணவில்லை . கவர்னரும் இன்னமும் முடிவு செய்யவில்லை. வாறவங்க , பொறவுங்க எல்லாம் அடங்கின பின் , ஒருவழியா கூப்பிடலாம் என்று நினைக்கின்றாரோ.
Rate this:
Share this comment
Cancel
Imayan - Madurai,இந்தியா
16-மே-201815:29:26 IST Report Abuse
Imayan எது எப்படியோ, தாமரை மலர்ந்தே தீரும்.
Rate this:
Share this comment
Cancel
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
16-மே-201814:47:41 IST Report Abuse
ngopalsami மத்தியில் உள்ள பிஜேபி, காவிரி விஷயத்தை தமிழகத்திற்கு வஞ்சனையில்லாமல் தீர்வு செய்திருந்தால் கண்டிப்பாக இவர்களுக்கு முழு மெஜாரிட்டி கிடைத்திருக்கும்.
Rate this:
Share this comment
Rams - ,
16-மே-201816:19:34 IST Report Abuse
Ramsஇது சரி. ஶ்ரீரங்க நாதருக்கு செல்லும் காவிரியை தடுக்க நினைத்த பாவ வினை....
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
16-மே-201816:47:35 IST Report Abuse
kundalakesiஅமிர்தமுன்னு விஷத்தை குடிக்க சொல்லுறாப்போல....
Rate this:
Share this comment
Cancel
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
16-மே-201813:50:48 IST Report Abuse
Kansami Ponsami மக்களை ஏமாற்றி பிழைப்பது தான் பிஜேபி காங்கிரசின் வரலாற்று சரித்திரம் என்பது மீண்டும் உறுதியாகிறது.... மக்களே உங்களுக்காக அரசும் ஆட்சியும் கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் இல்லை..கட்சிகளுக்காவும் அவர்களது மனித நேயமற்ற அடாவடி கொள்கைகளுக்காவும் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்..அரசியல் கட்சியின் தலைவர்கள் வாயால் வடை சுட்டு நாட்டையும் உங்களையும் ஏமாற்றி அண்டி பிழைக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை