காவிரி நீர்பங்கீட்டில் மத்திய அரசிற்கு அதிகாரமில்லை : சுப்ரீம் கோர்ட்| Dinamalar

காவிரி நீர்பங்கீட்டில் மத்திய அரசிற்கு அதிகாரமில்லை : சுப்ரீம் கோர்ட்

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (45)
Advertisement
காவிரி, தமிழகம், கர்நாடகா, உச்சநீதிமன்றம்

புதுடில்லி: காவிரி வழக்கில் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.


நிராகரிப்பு

காவிரி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது.
விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில், காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.
அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவுக்கு பதில் டில்லியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், இரண்டு கோரிக்கைகளையும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நிராகரித்து விட்டது.


கோரிக்கை:


கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலத்தில் நிலையான அரசு இல்லாததால், விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதனை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.


ஆட்சேபனையில்லை:

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி அமைப்பிற்கு வாரியம் என்ற பெயர் வைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்றார். இதற்கு கர்நாடக அரசும் ஒப்பு கொண்டது.


ஒத்திவைப்பு


இதனையடுத்து, இரு மாநில அரசுகளின் கருத்துகள் தொடர்பாக, நாளை பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (மே 17) ஒத்திவைத்தனர். மேலும் வாரியத்தின் அனுமதியின்றி தமிழகமோ, கர்நாடகவோ எந்த அணையும் கட்ட முடியாது. காவிரி அமைப்பின் முடிவே இறுதியானது. நீர் பங்கீடு தொடர்பான அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முடிவே இறுதியானது என்ற அம்சத்தை காவிரி வரைவு அறிக்கையில் இருந்து நீக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமைப்பின் பெயர், அணை கட்டும் அனுமதி, அதிகாரம் ஆகிய 3 அம்சங்களை திருத்திய இறுதி வரைவு அறிக்கையை நாளை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிரச்னை ஏற்பட்டால் இறுதி முடிவை மத்திய அரசை எடுக்கும் என்பதை ஏற்க முடியாது எனவும், காவிரி வாரியம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun - Chennai,இந்தியா
16-மே-201819:51:02 IST Report Abuse
Arun இன்று மட்டும் உச்ச நீதி மன்றமோ, அதன் தலைமை நீதிபதியோ மோடியின் கட்டுப்பாட்டில் இல்லை போராளிகள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே... இப்படி சொல்வோம்.....மோடிக்கு உச்ச நீதி மன்றம் கொட்டு.....
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
16-மே-201819:15:17 IST Report Abuse
elakkumanan சுடலை பாவம், என்னத்த சொல்லி தன்னோட இருப்பை தினமும் மக்களுக்கு தெரியப்படுத்துவார்? எப்பிடியோ இருக்க வேண்டிய கட்சி, ஒரு குடும்ப மற்றும் குறுநில மன்னர்களால் தன் இருப்பை பதிவு செய்யவேண்டிய நிலைக்கு வந்தாச்சு. தமிழ் நாட்டின் விடிவு மிக அருகில். வெளிச்சம் தெரிகிறது. முடியட்டும், விடியட்டும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-மே-201818:42:38 IST Report Abuse
தமிழ்வேல் வரவேற்கவேண்டும். ஆணையத்திற்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பது வரவேற்கத் தக்கது. ஆணைகளை நிறைவேற்ற ராணுவ உதவிக்கும் இப்போதே ஏற்பாடுகளை செய்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
16-மே-201818:39:22 IST Report Abuse
Somiah M மத்திய அரசு ஆணையம் அமைக்காமல் காலம் கடத்த செய்யும் தகிடு தத்தங்களை நிராகரித்தது உச்ச நீதி மன்றத்தின் உறுதியையும் நீதியின் மான்பையும் நிலை நிறுத்தும் செயலாகும்.உச்ச நீதி மன்றத்திற்கு ஒரு ராயல் சல்யூட் .
Rate this:
Share this comment
Cancel
16-மே-201817:40:31 IST Report Abuse
ஆப்பு மத்தியில் உள்ள அரசுக்கு பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே தமிழகத்திற்கு அனுகூலமான முடிவு எடுக்கும் என பொருள் காண்க.... நீங்க அவிங்களுக்கு நோட்டாவை விட குறைஞ்ச ஓட்டு போடுவீங்க...உங்களுக்கு காவிரி தண்ணி வாங்கி அவிங்க குடுப்பாங்களாக்கும்....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-மே-201817:23:01 IST Report Abuse
இந்தியன் kumar நிரந்தர தீர்வு விரைவில் கிடைக்கட்டும் காவேரி விவகாரத்தில் , அரசியல் செய்தது போதும்.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
16-மே-201815:57:58 IST Report Abuse
venkatan காவேரி மட்டும் அல்லாம ல் பாரத நாட்டில் பாயும் எல்லா நதிகளையும் கவனத்தில் கொண்டு "ஆல் ரிவர்ஸ் ஆதோரிட்டி ஆப் இந்தியா" என்ற ஒரு தன்னாட்சி அமைப்பை கொண்டுவரவேண்டும்.இது சுய அதிகார அமைப்பாக எலெக்ஷன் கமிஷன் டிராய்,போல செயல்பட வேண்டும் முதலில் எல்லா நதிகளையம் அரசு உடமை ஆக்கிடவேண்டும் அவ்வப்பொழுது கூடி நீரின் அளவு,மணற்கொள்ளை,ஆக்கிரமிப்பு நதியின் மாசு,அணை கட்டுதல் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
16-மே-201815:24:37 IST Report Abuse
Baskar பாவம் பந்தா தலைவர் எதையோ எதிர் பார்த்தார் எதுவோ நடந்து விட்டது. இனி தமிழகத்தில் எதை வைத்து போராட்டம் செய்வார். இவருக்கு துணை போன வை.கோ. திருமா. வீரமணி முத்தரசன் மற்றும் பலர் முகத்தை எங்கே கொண்டு வைத்து கொள்வார்கள். வெட்கம் கெட்டவர்கள். இவர்களிடம் பேச்சு தான் வீரமாக இருக்கும் .செயலில் பெட்டி பாம்புதான்.
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
16-மே-201814:56:08 IST Report Abuse
Samy Chinnathambi சூப்பர் சூப்பர்.......... இதை தான் எதிர் பார்த்தோம்.......வாரியத்திற்கு தான் மொத்த அதிகாரம் இருக்க வேண்டும்..... மத்திய அரசிடம் அதிகாரம் இருந்தால் அவர்கள் கர்னாடக அரசியல் நெருக்கடிக்கு பணிந்து சமரசம் செய்து கொள்வார்கள்............. சபாஷ் நீதிபதி அவர்களே..........
Rate this:
Share this comment
MANI DELHI - Delhi,இந்தியா
16-மே-201816:10:51 IST Report Abuse
MANI DELHIஎன்னவென்று சொல்வது. சின்னத்தம்பி அவர்களே வெற்றிகரமாக இந்த பிரச்னையை மாநிலங்களுக்கு இடையே தள்ளி விட்டார்கள் உச்ச நீதி மன்றம். அத புரிஞ்சிக்காம கோஷம் போடுறீங்க. இரண்டு மாநிலங்களும் அவில் மற்றும் உமியினை கலந்து ஊதி ஊதி தின்னுங்கன்னு சொல்லாமலே சொல்லிவிட்டார்கள்....
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
16-மே-201819:03:58 IST Report Abuse
madhavan rajanவாரியத்தின் முடிவு இறுதியானது. மத்திய அரசு தலையிட முடியாது என்றால் சுப்ரீம் கோர்ட்டே வாரியத்தை நியமித்துவிட வேண்டியதுதானே. எந்த பொறுப்பும் அதிகாரமும் இல்லாத மத்திய அரசு எதற்கு வாரியத்தை நியமிக்கவேண்டும். உச்ச கோர்ட் ஒரு குழு அமைத்து அதுவே வாரியத்தை நியமித்து, பிரச்சினை வந்தால் சுப்ரீம் கோர்ட்டே பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டும். நதிநீர் என்பது மாநிலப்பிரச்சினை. மாநிலங்களை நிர்வகிக்கவேண்டியது மத்திய அரசின் கடமை. மாநிலங்களுக்கிடையில் பிரச்சினை என்றால் நீதி மன்றமே தீர்த்து வைக்கும் என்றால் மத்திய அரசு எதற்கு இருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
16-மே-201814:19:51 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ///கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலத்தில் நிலையான அரசு இல்லாததால், விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்///இது எதிர்பார்க்கப்பட்ட ஓன்று தான்., இதைத்தான் ஏற்கனவே சொல்லி இருந்தேன், வாழ்த்துக்கள் தலைகள், சின்ன மற்றும் பெரிய.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை