பா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி| Dinamalar

பா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (167)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குமாரசாமி, பா.ஜ., பேரம், மஜத

பெங்களூரு : பா.ஜ., சார்பில் தன்னிடம் 100 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசியதாக மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.


மகிழ்ச்சியில்லை


மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டசபை கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, என்னை சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்த கட்சியினருக்கு நன்றி. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எங்கள் கட்சியின் ஓட்டுக்கள் பிரிந்ததாலேயே பா.ஜ.,வால் 104 இடங்களில் வெற்றி பெற முடிந்தது.


அவசியமான ஒன்று

மஜத கட்சியை உடைக்க பா.ஜ., தீவிர முயற்சி செய்து வருகிறது. போதிய எண்ணிக்கை இல்லாததால் எடியூரப்பாவால் ஆட்சி அமைக்க முடியாது. மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அவசியமான ஒன்று. இந்த கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்காக இல்லை. நாட்டு நலனுக்காக பிரதமர் பதவியை உதறி விட்டு வந்தது எங்கள் குடும்பம். மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாமல் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது.


குதிரை பேரம்


ரூ.100 கோடி தருகிறேன். அமைச்சர் பதவி தருகிறேன் என எங்கள் எம்எல்ஏ.,க்களுக்கு பா.ஜ., ஆசை காட்டி, பேரம் பேசி வருகிறது. இந்த கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது? குதிரை பேரத்தில் பா.ஜ., ஈடுபட்டு வரும் நிலையில் வருமான வரித்துறை என்ன செய்கிறது. பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்தி வருகிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. காங்., உடன் மட்டும் தான் கூட்டணி. மஜத எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பார்க்கிறது. எங்கள் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவை தூக்கினால், பா.ஜ., எம்எல்ஏக்கள் 4 மடங்கு பேரை நாங்கள் இழுப்போம். கவர்னர் எங்களுக்கு சாதகமாக முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (167)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nanbaenda - chennai,இந்தியா
17-மே-201801:00:27 IST Report Abuse
nanbaenda ஏன் காங்கிரஸ் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தும் உனக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்து உன் ஆட்சியின் கீழ் இருப்பதற்கு ஒப்புக்கொண்டது 100 கோடிக்கு சமம் இல்லையா. இது குதிரை பேரம் அல்லாமல் வேறு என்ன சொல்லுவது. கர்நாடகத்து மக்களை முட்டாள் ஆக்குகிறாயே. அதற்கு சந்தர்ப்பவாத காங்கிரசும் துணை போகிறது. ஆட்சி கலைந்து மீண்டும் தேர்தல் நடந்தால் பி ஜே பி தனி மெஜாரிட்டி பெறுவது நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
16-மே-201820:41:18 IST Report Abuse
மணிமாறன் யாரோ ஒரு மகானுபாவர் கருப்புபணத்தை ஒழித்துவிட்டேன் என்று மேடைக்கு மேடை கூவினாரே.. அவர் எங்கே?? எல்லா கருப்பு பணமும் எங்கே இருக்கிறது என்று இப்போது தெரிகிறது...
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
16-மே-201820:36:15 IST Report Abuse
ramanathan பொய்யன் உளறுகிறான் .இவன் கடந்த காலங்களில் பாஜக விடம் முதல் 30 மாதங்கள் முதல்வராக இருந்து கொள்வதாகவம். அடுத்த 30 மாதங்கள் முதல்வர் பதவியை பாஜக விற்க்கு விட்டுகொடுப்பதாக வாக்களித்துவிட்டு பதவிஆசையில் பதவியை விட்டுக்கொடுக்காத நிலையில் ஆட்சியை இழந்தார். MLC பதவி கோடிகளுக்கு விலைபேசி விற்றவர். மஜதகட்சியம் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் நீடிக்காது
Rate this:
Share this comment
Cancel
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
16-மே-201820:00:38 IST Report Abuse
tamilvanan ivar எத்தனை கோடிக்கு பேரம் பேசி கொண்டிருக்கிறாரே, கூவத்தூர் முறையில்.
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
17-மே-201800:54:02 IST Report Abuse
madhavan rajanஇவர்தான் கர்நாடகா எம் எல் ஏ விலேயே பணக்காரர். இவர் அந்த எம் எல் ஏ க்களுக்கு 150 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்க வேண்டியதுதானே? வியாபாரம் என்று வந்த பிறகு கணக்கு பார்த்தால் எப்படி?...
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201819:53:09 IST Report Abuse
கைப்புள்ள அதென்ன அவ்வளவு ஒரு அஹங்காரம் இந்த திமிர் புடிச்ச காங்கிரசுக்கு. இவனுங்களுக்கு கூட ஒன்னும் வேண்டாமாம், எவனோ முதல்வர் ஆனாலும் பரவா இல்லையாம், ஆனா பி.ஜே.பி வர கூடாதாம். என்ன ஒரு நெஞ்சழுத்தம், வன்மம், தீவிரவாதம் இருக்கணும் இவனுக மனசுல. இவ்வளவு வெறி கொண்ட காங்கிரசை அழித்தே ஆக வேண்டும். இந்த ஒப்புக்கு சப்பாணி குமாரசாமி கட்சியை மொத்தமா அழிக்கணும். காலைல எந்திரிச்சு பாக்குறப்போ போஸ்ட்டர் ஒட்டுறதுக்கு கூட ஒரு ஆள் இருக்க கூடாது. எல்லாரையும் ஒரு விலை போட்டு வாங்கு.
Rate this:
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
17-மே-201800:23:56 IST Report Abuse
Kunjumaniகைப்புள்ள சார், விலை போட்டு வாங்கலாம் இல்லை விலை கொடுத்து ஒரேடியாக தூக்கலாம். இரண்டாவது ரொம்ப சல்லிசாக முடித்துத்தர லாலு மாநிலத்தில் இருந்து ஆள் கிடைப்பார்கள்....
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201819:48:51 IST Report Abuse
கைப்புள்ள என்னைக்கு இந்த கேடு கெட்ட காங்கிரஸ் எங்களுக்கு ஒன்னும் கெடைக்காட்டி கூட பரவாயில்லை, நீ முதல்வர் ஆனா போதும், ஆனா இந்த பி.ஜே.பி காரனுக ஆக கூடாதுன்னு இவ்வளவு வெறியோட இருக்கானுகளோ, அன்னைக்கே நீதி செத்து போச்சு. இவ்வளவு வெறி கொண்டு திரியும் காங்கிரசை அழிக்க குதிரை பேரம், கழுதை பேரம், ஆள் கடத்தல், மிரட்டல், ரெய்டு விடுவது ன்னு என்ன வேணா செஞ்சு ஆட்சியை கை பற்றினாலும் தப்பே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
16-மே-201819:21:43 IST Report Abuse
Ramakrishnan Natesan பாவம் மோடி இன்னும் நிறைய விஷயங்கள் யாருக்கும் தெரியவில்லை பண்டாரங்கள் 30 தொகுதியில் டெபொசிட் இழந்துள்ளது சில தொகுதிகளில் 5000 க்கு குறைவா வோட்டு வாங்கியுள்ளது இவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்றால் நம்ம தினகரன் பார்முலா படிதான் இவர்களுக்கு சாதகமா உள்ள தொகுதிகளில் 10 முதல் 15 தொகுதிகளில் வெளியூர் பண்டார MP க்களை இறக்கி கண்டபடி செலவு செய்து சித்தா ராமையா வெட்க படும் அளவுக்கு பணம் கொடுத்து பெற்ற வெற்றி யாகும் உண்மையில் நேர்மை நேர்மை என்று கதறும் பண்டாரங்கள் செய்த அட்டுழியம் கொஞ்சம் நஞ்சம் அல்ல,
Rate this:
Share this comment
Cancel
Msr - Tiruppur,இந்தியா
16-மே-201819:05:58 IST Report Abuse
Msr நல்லவங்கள கண்டுபிடிச்சு காட்டுங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
16-மே-201819:01:02 IST Report Abuse
raghavan ஆஹா, ஒரு எம்.எல்.ஏ ரேட்டு இதானா? இப்பவே, ரஜினி, கமலை நாக்கை சப்பு கொட்ட வைச்சுட்டீங்களே..அங்க இங்கன்னு ஒரு பத்து, பதினஞ்சு இடத்துல ஜெயிச்சா கூட, எம்.எல்.ஏ க்கு கொஞ்சம் வெட்டிட்டு மீதியை சுருட்டிக்கலாம்னு மண்டைக்குள்ள கணக்கு ஓடுமே...
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
16-மே-201818:47:17 IST Report Abuse
Gopi சொன்ன நீங்களே காங்கிரேசிடம் விலை போயிட்டிங்களே ஐயா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை