சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: குமாரசாமி| Dinamalar

சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: குமாரசாமி

Added : மே 16, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குமாரசாமி, மஜத, கவர்னர், காங்கிரஸ்

பெங்களூரு: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தனது முடிவை அறிவிப்பதாக கவர்னர் தெரிவித்ததாக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி கூறியுள்ளார்.


தடை

மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்தனர். அவர்களுடன் எம்எல்ஏக்கள் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எம்எல்ஏக்கள் அணிவகுப்புக்கு கவர்னர் தடை விதித்தார். இதனையடுத்து 10 எம்எல்ஏக்களுடன் குமாரசாமி மற்றும் காங்., நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.


சட்டப்படி முடிவு

பின்னர் குமாரசாமி கூறுகையில், மாநிலத்தில் நிலையான அரசை அமைக்க தேவையான பெரும்பான்மை எங்களிடம் உள்ளது. ஆட்சியமைப்பது தொடர்பாக நிர்வாகிகள் கவர்னரை சந்தித்து விளக்கம் அளித்தோம். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஆட்சியமைக்க வாய்ப்பு தர வேண்டும். அந்த உத்தரவின்படி, பெரும்பான்மையை பார்க்க வேண்டும் என கூறினோம். எங்களுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆவணங்களை அளித்தோம். சட்டப்படி முடிவெடுப்பதாக கூறினார். சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பதாக கவர்னர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugu - paris,பிரான்ஸ்
17-மே-201813:26:22 IST Report Abuse
murugu வர வர நீதிபதிகளும் கவர்னர்களுக்கும் கணக்கு வரமாட்டேன்கிறது கணக்கில் இவர்களுக்கும் ""நீட்""பரீட்சை வைக்க வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை அது என்ன கர்நாடகாவில் உள்ள நீதிபதி முதல் கவர்னர் வரை (117 பெரிதா ,104 பெரிதா ?)கணக்கு பாடத்தில் மக்காக இருக்கிறார்களே ????????
Rate this:
Share this comment
Cancel
siva india - chennai,இந்தியா
17-மே-201809:01:58 IST Report Abuse
siva india மக்கள் மெஜாட்டியாக ஒரு கட்சிக்கு வோட்டு போட்டால் அந்த கட்சி முழுமையாக நன்மை செய்யும் என நம்பி ஓட்டு போடுகிறார்கள் சிலர் கட்சி தாவினால் கட்சி தாவல் சட்டபடி பதவி இழக்கிறார்கள்.மக்களால் மெஜாட்டி பெற்ற கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைத்த பிறகு சொந்த பிரச்சனைக்கா பிரிந்தால் அந்த கூட்டணி கட்சி தாவல் சட்டம் போல பதவி பறிக்கபடவேண்டும். வெற்றி பெற்ற பின் கூட்டணி வைத்தால், கூட்டணி வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை ,. மக்கள் முடிவு செய்ய சட்டம் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-மே-201805:05:45 IST Report Abuse
meenakshisundaram இந்த ஆளு கர்நாடக ஆளா ,இல்லே வேற ஆளா ?சீமான் கொஞ்சம் ஆராய்ச்சி செயது சொல்லணும்,ஏனென்றால் சுடலை, திருமா போன்றோர் ஆதரவு தராங்க ,ஒரு வேளை இவரின் உருவத்தை பார்த்து உண்மை திராவிடன் என்று நினைக்கிறார்களோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X