சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: குமாரசாமி| Dinamalar

சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: குமாரசாமி

Added : மே 16, 2018 | கருத்துகள் (21)
Advertisement
குமாரசாமி, மஜத, கவர்னர், காங்கிரஸ்

பெங்களூரு: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தனது முடிவை அறிவிப்பதாக கவர்னர் தெரிவித்ததாக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி கூறியுள்ளார்.


தடை

மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்தனர். அவர்களுடன் எம்எல்ஏக்கள் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எம்எல்ஏக்கள் அணிவகுப்புக்கு கவர்னர் தடை விதித்தார். இதனையடுத்து 10 எம்எல்ஏக்களுடன் குமாரசாமி மற்றும் காங்., நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.


சட்டப்படி முடிவு

பின்னர் குமாரசாமி கூறுகையில், மாநிலத்தில் நிலையான அரசை அமைக்க தேவையான பெரும்பான்மை எங்களிடம் உள்ளது. ஆட்சியமைப்பது தொடர்பாக நிர்வாகிகள் கவர்னரை சந்தித்து விளக்கம் அளித்தோம். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஆட்சியமைக்க வாய்ப்பு தர வேண்டும். அந்த உத்தரவின்படி, பெரும்பான்மையை பார்க்க வேண்டும் என கூறினோம். எங்களுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆவணங்களை அளித்தோம். சட்டப்படி முடிவெடுப்பதாக கூறினார். சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பதாக கவர்னர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement