P M Modi has approved a new All India Institute of Medical Sciences inJharkhand | ஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

ஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : மே 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 ஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய  அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
அதே போல் ஆந்திரா மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் ஜந்தலூரு கிராமத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய பல்கலைகழகம் அமைக்கப்பட உள்ளது.மேலும் உ.பி., மாநிலத்தில் காசியாபாத் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ.1,967 கோடி மதிப்பில் நொய்டா வரை நீட்டிக்க ஒப்புதல் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X