BJP Invited To Form Karnataka Government, Yeddyurappa Oath Tomorrow | ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு: முதல்வராக பொறுப்பேற்கிறார் எடியூரப்பா| Dinamalar

ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு: முதல்வராக பொறுப்பேற்கிறார் எடியூரப்பா

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (23)
Advertisement

பெங்களூரு: எடியூரப்பா நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ. எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் இன்று கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.சுரேஷ்குமார் டுவிட்டடரில் பதிவிட்டிருப்பதாவது: பா.ஜ.தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் கவர்னர் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் , இதனையடுத்து நாளை காலை9.30 மணி அளவில் முதல்வராக எடியூரப்பா கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் பதவியேற்க உள்ளதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.கவர்னர் மாளிகை வட்டாரங்கள் இரவு தெரிிவித்தாவது: தனிப்பெரும் கட்சி என்ற முறையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். எடியூரப்பா 15 நாட்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


பதிவு நீக்கம்

எடியூரப்பா பதவியேற்பு குறித்த டுவிட்டரை நீக்கினார். பா.ஜ., எம்எல்ஏ., சுரே்ஷ்குமார். இதனையடுத்து பா.ஜ., கட்சியும் அதே கருத்தைகொண்டிருந்த டுவிட்டர் பக்கத்தை நீ்க்கி உள்ளது.


11 நாள் அவகாசம்

இதற்கிடையே எடியூரப்பாவிற்கு 11 நாட்கள் அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


ஜனநாயகம் குழி தோண்டி புதைப்பு


கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201808:08:17 IST Report Abuse
Pugazh V @மதுரை கோபி:: ஜனநாயக படுகொலை எது தெரியுமா - வெறும்36% வாக்குகளுடன் பிஜேபி ஆட்சி அமைக்க முயல்வதும் 38% வாக்குகள் பெற்றும் போதிய இடங்கள் கைவசம் இல்லாமல் போனதால் காங்கிரஸ் ஒதுக்கப்படுவதும் தான் விந்தையான ஜனநாயகப் படுகொலை.
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
17-மே-201809:02:03 IST Report Abuse
sethuஅப்படியாங்க பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடணும் ,இல்லையேல் வாய் கிழிந்து ரத்தம் வரும்...
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
17-மே-201807:04:58 IST Report Abuse
Matt P எடியூரப்பா முதலவர் பதிவியேற்றால்,தமிழ்நாட்டிலிருந்து சுடலை முதல் ஆளாக வாழ்த்து சொல்வார் என்று நம்பலாம் . அவர் அப்பாவின் பாசமிகு தம்பி எடியூரப்பா பதவி ஏற்பதால் ...கொள்ளையில் 2 பேரும் ஒருமித்த கொள்கை உள்ளவர்கள் என்பதால்... ..
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-மே-201804:18:49 IST Report Abuse
J.V. Iyer பழைய கான்-கிரேஸ் செய்த லீலைகளை பாருங்கள். எப்படி மெஜாரிட்டியை நிரூபிக்கலாம் என்று கற்றுக்கொள்ளலாம். கெட்டவர்களை ஒழிக்க, கெட்டவர்களுக்கு கெட்டவனாக இருப்பதால் தவறில்லை. நடத்துங்கள்..
Rate this:
Share this comment
Cancel
17-மே-201803:04:43 IST Report Abuse
Gokul,Madurai இவர்கள் மட்டும் தேர்தலுக்கு முன் தனியாக நிற்பார்களாம். ஒருவருக்கொருவர் எதிராக பிரச்சாரம் செய்வார்களாம். தேர்தலுக்கு பின் உறுப்பினர் எண்ணிக்கைக்காக கூட்டணி அமைப்பார்கள். மிககுறைந்த சீட்டு வாங்கி பெரும்பாலான இடங்களை கோட்டை விட்ட கட்சியின் தலைவரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்களாம். ஓட்டு போட்ட மக்களை இவர்கள் ஏமாற்றவில்லையா? இது ஜனநாயக படுகொலை இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
17-மே-201802:44:54 IST Report Abuse
PR Makudeswaran ஒட்டு பொறுக்கிகள் பதவி வெறி பிடித்தவர்கள் இதெல்லாம் இன்று நேற்றல்ல காங்கிரஸ் காலத்தில் இருந்தே நடைமுறை யார் உத்தமர் வெள்ளைக்காரனே உத்தமன் . அன்று ஆங்கிலேயனுக்கு அடிமை இன்று அரசியல்வாதிக்கு அடிமை.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-மே-201800:40:00 IST Report Abuse
Mani . V கேப்டன் பாணியில் சொல்வதென்றால் "இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?". மிகப் பெரிய ஜனநாயக படுகொலை. கேப்டன் செய்தது மாதிரி த, தா, தி, தீ........ வரிசையில் செய்யலாம். ஆனால் தினமலர் அதை பிரசுரம் செய்யாது.
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
17-மே-201809:07:18 IST Report Abuse
sethuசிங்கப்பூர் போனோமா நாலு காசு சம்பாரிச்சு சுகமாக வாழறோமான்னு பாருங்க ,இந்த குசும்பு வேலையெல்லாம் விடுங்க ,கேப்டனாம் கேப்புடன் ,28 எம் எல் எ இருந்தும் எதிர்கட்சிக்கு கூட லாயக்கற்றவன் ,எல்லாம் சினிமா வில்லனுக்குத்தான் சரிப்படுவான் ,கடைசில தான் போட்டி இடட டெபாசிட் கூட வாங்க முடியாதவன்....
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
17-மே-201800:24:45 IST Report Abuse
Sami Next target tamilnadu, no one votes for bjp, but they will become to power. What a dictatorship rule in India by bjp. We people are idiots and stupids to watch and die. Definitely, India is going to loss it's prestigious because of bjp. Very shame to be Indian under this govt.
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
16-மே-201820:53:19 IST Report Abuse
suresh மெஜாரிட்டி இல்லாத பாஜக,,,,, ஆட்சியமைக்கும் என தமிழிசை சொல்லி வருகிறார்,,,, எதன் அடிப்படையில் ஆட்சியமைப்போம் என சொல்கிறார் ?
Rate this:
Share this comment
Cancel
sham - riyadh,சவுதி அரேபியா
16-மே-201820:49:47 IST Report Abuse
sham எதுக்குயா வீண் தேர்தல் செலவு, சீட் கம்மியா இருந்தாலும் பிஜேபி ஆட்சி அமைக்கிறாங்க ஜாஸ்தியா இருந்தாலும் அதான் நடக்குது .. பேசாம மாநில ஆட்சியெல்லாம் கலைச்சிட்டு ஒரே ஆட்சி பிஜேபி ஆட்சி நடத்துங்க யார் கேட்க போறா ...
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
16-மே-201820:48:12 IST Report Abuse
Siva சரியான முடிவு... வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை