இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இதே நாளில் அன்று

மே 17, 1961
கர்நாடக இசை கலைஞர், மைசூர் வாசுதேவாச்சாரியார்: கோவை மாவட்டம், செவ்வூர் எனும் கிராமத்தில், 1865, மே28 ல் பிறந்தார். சமஸ்கிருதம் பயின்ற இவர், பட்டிணம் சுப்பிரமணிய ஐயரிடம் முறையாக, கர்நாடக இசை பயின்றார்.இவரது குரல், அனுமந்த்ர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து, தாரஸ்தாயி காந்தாரம் வரை, சுலபமாக பாடும் திறன் உடையது. தியாகராஜர் எழுதிய, 'ப்ரோச்சேவா ரெவருரா' என்ற கமாஸ் ராக கீர்த்தனையைப் பாடுவதில், மிகவும் வல்லவர் இவர்.இவர், சென்னை, அடையாறு கலாேஷத்ராவின் துணை தலைவரானார். அப்போது, 'சீதா கல்யாணம்' என்ற நாட்டிய நாடகத்திற்கு இசைஅமைத்தார். இவர், கவிஞர்கள் வாழ்க்கை வரலாறு, கீர்த்தனைகள், ராக மாலிகைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.மைசூர் ஆஸ்தான சங்கீத சாஸ்திர ரத்தினம், சங்கீத சாஸ்திர விசாரத, சங்கீத கலாநிதி உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். இவர், 1961, மே 17ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X