சட்டசபை அறிவிப்புகள்: தயாராகிறார் முதல்வர் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சட்டசபை அறிவிப்புகள்: தயாராகிறார் முதல்வர்

அடுத்தடுத்து தேர்தல்களை சந்திக்க வேண்டி இருப்பதால், இம்மாதம் துவங்க உள்ள, சட்ட சபை கூட்டத் தொடரில், மக்களை கவரும் வகையில், '110' விதியில், முதல்வர் பழனிசாமி, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  சட்டசபை, அறிவிப்புகள்,தயாராகிறார், முதல்வர்


முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசில், அமைச்சர்கள் மற்றும்,எம்.எல்.ஏ.,க் கள், தன்னிச்சையாக செயல்படுகின்றனர். சரியாக செயல்படாத, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களை நீக்க முடிய வில்லை. இதனால், அரசின் செயல்பாடு மந்தமாக உள்ளது.


தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்கள்

வழக்கில், எப்போது வேண்டுமானாலும், தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலை உள்ளது.


'தகுதி நீக்கம் செல்லாது' என தீர்ப்பு வந்தால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும்; ஆட்சி கவிழவும்
வாய்ப்புள்ளது.'தகுதி நீக்கம் செல்லும்' என தீர்ப்பு வந்தால், 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். அதை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.ஜெ., மறைந்த பின் நடந்த, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில்,அ.தி.மு.க., தோல்வியை தழுவியது.


அடுத்த ஆண்டு, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் கூட்டணி எப்படி அமையும் என்பது, புரியாத புதிராக உள்ளது.எனவே, உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் என, அடுத்தடுத்து களத்தில் இறங்க தயாராகும் வகை யில், இம்மாதம் துவங்க உள்ள, சட்டசபை கூட்டத் தொடரில்,ஒவ்வொரு துறையிலும், புதிய அறிவிப்பு களை வெளியிட, முதல்வர் பழனிசாமி திட்டமிட்டு உள்ளார்.


இதற்காக, துறை வாரியாக, முதல்வர் நடத்தி வரும் ஆய்வுக் கூட்டங்களில், முக்கிய அறிவிப்பு களாக, எதை வெளியிடலாம் என ஆலோசிக்கப் படுகிறது. அதே நேரம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட

Advertisement

பல அறிவிப்புகள், இன்னமும் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளன.


கடந்த, 2017ல், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில், திருவள்ளூர் மாவட்டத்தில், 1,295 கோடி ரூபாய் மதிப்பில், பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா. மேலும், சென்னை, எர்ணாவூரில், 676.61 கோடி ரூபாய் மதிப்பில், குடிசைப் பகுதி மக்களுக்கு, 6,874 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட, பல பெரிய திட்டங்கள், இன்னமும் துவக்கப்படா மல் உள்ளன.இது குறித்து,சட்டசபை தொடரில், பிரச்னை எழுப்ப, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudarsanr - Muscat,ஓமன்
17-மே-201818:18:37 IST Report Abuse

Sudarsanrஅறிவிப்புகள் வெளியிட நடவடிக்கை. ஓகே ஜமாய்ச்சிடலாம். நம்ம என்ன செயல் படுத்தவா போறோம்.

Rate this:
POORMAN - ERODE,இந்தியா
17-மே-201818:06:42 IST Report Abuse

POORMAN18 MLA வழக்கில் தீர்ப்பு வராது கருத்து கூறப் பெற்று உச்ச நீதி மன்றத்துக்கு அனுபப்படும். இல்லையெனில் உயர்நீதி மன்றத்தின் புதிய பெஞ்ச் விசாரனைக்கு மாற்றப்படும்.

Rate this:
karthi - MADURAI,இந்தியா
17-மே-201815:23:27 IST Report Abuse

karthiவெறும் அறிவிப்பு ஒன்னத்துக்கும் ஆகாது. அரசாங்கத்திடம் நலத்திட்டங்களை செயல்படுத்த போதுமான பணம் இல்லை.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)