கவர்னர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட காங். முடிவு| Dinamalar

கவர்னர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட காங். முடிவு

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கவர்னர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட காங். முடிவு

புதுடில்லி: கர்நாடகாவில் கவர்னர் முடிவுக்கு எதிராக நள்ளிரவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட காங்.முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் கவர்னர் வஜூபாய் வாலா , பா.ஜ.தனி பெரும் கட்சியாக உள்ளதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் முடிவை எடுத்துள்ளார். இதையடுத்து நாளை முதல்வராக பவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கவர்னரின் இந்த முடிவுக்கு காங். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ப.சிதம்பரம் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.இந்நிலையில் கவர்னரின் முடிவை எதிர்த்து நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீட்டிற்கே சென்று முறையிட காங். முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு தயார்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து காங்.,செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறுகையில் தனிப்பெரும் கட்சி என பா.ஜ.,வை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். இதே போல் முன்னர் கோவா மற்றும் மணிப்பூரில் நடந்த தேர்தலில் காங்,, தனி்ப்பெரும் கட்சியாக இருந்தது. அப்போது கவர்னர் எங்களை ஏன் அழைக்க வில்லை. கர்நாடகாவில் கவர்னர் எடுத்த முடிவு அரவது பதவிக்கே அவமானம் என்றார். இதற்கிடையே இன்று நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட காங்., முடிவு செய்துள்ளது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
17-மே-201812:29:05 IST Report Abuse
Rajhoo Venkatesh உச்ச நீதி மன்றம் யாருக்காக வேலை செய்கிறது என்று உலகுக்கே தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா
17-மே-201810:17:09 IST Report Abuse
Madhavarao Neelamegam முற்பகல் செய்தது (காங்கிரஸ்) பிற்பகல் விளையும். பிஜேபிக்கு கற்றுக்கொடுத்தது காங்கிரஸ்... காங்கிரஸ் செய்தால் நியாயம் பிஜேபி செய்தால் அநியாயம். இதுதான் காங்கிரஸின் தர்மம்
Rate this:
Share this comment
Cancel
raman - Madurai,இந்தியா
17-மே-201806:06:44 IST Report Abuse
raman இதே தலைமை நீதிபதியை பதவியிறக்க வேண்டும் என்று காங்கிரஸ் வழக்குத் தொடுத்தது. இன்று அவர் காலில் விழுகிறது. 222 தொகுதிகளில் 144 தொகுதிகள் காங்கிரசை வேண்டாம் என்று ,மந்திரிகளும் தோற்கடிக்கப் பட்டனர். பிஜேபி வாக்கெடுப்பில் தோற்றதும் மஜத வுடன் சேர்ந்து பதவிக்கு வாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை