ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, 'ரிசல்ட்' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆரவாரம், கொண்டாட்டமின்றி
வீடு தேடி வந்த, 'ரிசல்ட்'

பொது தேர்வு முடிவுகளில், பாராட்டு, வாழ்த்து, கேக் ஊட்டுவது என்ற ஆரவாரத்துக்கு, அறவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.

 ஆரவாரம், கொண்டாட்டமின்றி ,வீடு, தேடி வந்த, 'ரிசல்ட்'


பரபரப்பான பொது தேர்வு முடிவுகள், மிகவும் அமைதியாக வெளியிடப்பட்டதால், ஆசிரியர் களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

பாராட்டு மழை


தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பிற்கு, தமிழக அளவிலான நுழைவு தேர்வு ரத்தான பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்பு களுக்கு சேர்க்கை நடந்தது. இதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கும், அதன், 'கட் ஆப்' மதிப் பெண்ணுக்கும், அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.

மாநில அளவில், எந்த பள்ளி, 'டாப்' மதிப்பெண் பெறுகிறது; பள்ளி அளவில், முதல் மதிப்பெண் பெறும் மாணவ - மாணவியர் யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. தேர்வு முடிவை வெளியிடும் போது, மாநில அளவில், 'டாப்பர்' ஆக வரும் மாணவர்கள், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் களும், அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.

அவர்கள், 'டாப்பர்' ஆக வர, என்ன முயற்சி எடுத்தனர் என, ஊடகங்களில் பேட்டி எடுக்கப்படும். பெரும்பாலானவர்கள், 'டாக்டர் ஆக வேண்டும்; கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம்' என, தெரிவிப்பர்.இப்படி கூறிய பல மாணவர்கள், உயர்கல்வியை முடித்ததும், முதல் ஆளாக, வெளிநாடுகளிலும், பெருநகரங்களிலும்

பணியில் சேர்வதோடு, கிராமங்களை கண்டுகொள்வதில்லை. பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவர்களை, மற்ற மாணவர்கள், தோளில் துாக்கி வைத்து கொண்டாடுவர். அவர்களின், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், கேக் ஊட்டி, போட்டோவுக்கு, 'போஸ் கொடுப்பர்.

இரண்டு ஆண்டுகளாக, 'டாப்பர்' என்ற, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆரோக்கிய மற்ற கொண்டாட்டங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இதே போல, தேர்வு முடிவை, தனியார் இணைய தளங் களில்வெளியிடும் நிலையும் படிப்படியாக மாற்றப் பட்டு, தேர்வுத் துறையே தங்கள் இணைய தளத்தில், நேரடியாக தேர்வு முடிவுகளை வெளியிட துவங்கியது.

புதுமைகள்


இந்த முறை, மாணவர்களுக்கு எளிதாக இருந்தா லும், கிராமப்புற மாணவர்கள் அல்லது கோடை விடுமுறையில், வெளியூர்களில் உள்ள மாணவர் கள், இணையதள இணைப்பு உள்ள பகுதியை தேடி வந்து, தேர்வு முடிவை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர் களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக, தேர்வு முடிவை வெளியிடும் முறை, 2017 முதல் அறிமுகம் ஆகியுள்ளது.

இதனால், மாணவர்கள் இருக்கும் இடத்திலேயே, தேர்வு முடிவை, மதிப்பெண்ணுடன் அறியும் வசதி கிடைத்துள்ளது. மொத்தத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன உளைச்சல் மற்றும் அலைச்சலுக்கு கல்வி துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வெறிச்சோடிய தேர்வுத்துறை வளாகம்


மாநில, மாவட்ட அளவில், மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேடிப்பிடித்து, அவர்களிடம் ஊடகத்தினர் பேட்டி எடுப்பர். இதற்கு, இரண்டு ஆண்டுகளாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்வுமுடிவுகள், தேர்வுத் துறை அலுவலகத்தில் ஊடகத்தினருக்கு வழங்கப்படும். இந்த தகவல்களை பெற, செய்தியாளர்கள், கேமரா, மைக் சகிதமாக, காலை முதல் தேர்வுத்துறை வாயிலில் காத்திருப்பர்.

Advertisement

தேர்வு முடிவு வெளியிடும் நேரத்தில், பட்டியலை பெற்று, முதலில் யார், 'பிரேக்கிங் நியூஸ்' வழங்குவது என, போட்டி ஏற்படும். அதனால், பட்டியல் வினியோகத்தின் போது, தள்ளு முள்ளு ஏற்படும். இதற்கும், இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொது தேர்வு முடிவின் போது, கேமராக்கள் குவிந்திருக்கும், தேர்வுத்துறை அலுவலக வளாகம் நேற்று, ஆள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்


பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வேண்டும் என, கருதுவோர், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீடு தேவைப்படுவோர், முதலில், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப் பட்ட நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். மேலும்,www.dge.tn.nic.in என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

விருதுநகர், 'டாப்' - விழுப்புரம் கடைசி

பிளஸ் 2 தேர்ச்சி பட்டியலில், மாவட்ட அளவில், விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. சென்னை மாவட்டம், 14ம் இடம் பெற்றுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palaniyur S Radhakrishnan - Dar es salaam,தான்சானியா
23-மே-201812:20:04 IST Report Abuse

Palaniyur S Radhakrishnanதமிழக அரசும் முக்கியமாக திரு செங்கோட்டையன் மற்றும் அவரது அமைச்சக அதிகாரிகள் எடுத்த இந்த முடிவு மிக மிக நன்று. வாழ்த்துகள் மாணவ செல்வங்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் இந்த சமயங்களில் ஏற்படும் எவ்வளவோ மனச்சுமையும், சிரமங்களும் நீக்கப்பட்டுவிட்டன. தவிர விரைவாக மறுமதிப்பீடுக்கும் மறு தேர்வுக்கும் ஏற்படு செய்துள்ளதை எல்லோரும் வரவேற்கின்றனர் . இதையே முன் உதாரணமாக கொண்டு கல்லூரி படிப்புகளும் , மற்ற அமைச்சகங்களும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு சீர்திருத்தங்கள் செய்யலாம்.

Rate this:
Kavi - Karur,இந்தியா
17-மே-201820:19:12 IST Report Abuse

KaviVery good news. Thank you.

Rate this:
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
17-மே-201816:33:09 IST Report Abuse

Sankar Ramuகேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. மேலும் நிறைய எதிர் பார்ப்பு இருக்கு மக்களிடையே.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-201816:19:36 IST Report Abuse

Endrum Indianஅந்த காலத்தில் (1960 /70 களில் )வெகு ஆர்வமாக பள்ளிக்கூடம் சென்று ரிசல்ட் தெரிந்து வந்து வீட்டில் சொல்லும் போது என்ன ஒரு குதூகலம். பிறகு 11 ஆவது S.S.L.C. யில் நம்பர் பேப்பரில் வந்து எல்லோருக்கும் காட்டுவதில் என்ன ஒரு குதூகலம். அனால் இப்போது இன்டர்நெட்டில் பயங்கர டென்க்ஷனோடு அதை பார்த்து, எஸ்.எம்.எஸ். வந்து அதை தடவிப்பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல்??? அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே ??????

Rate this:
samy - chennai,இந்தியா
17-மே-201813:02:03 IST Report Abuse

samyசர்வர் வேலை செய்யவில்லை .பதிவிறக்கம் செய்ய முடியவில்லை

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-மே-201812:17:40 IST Report Abuse

Cheran Perumalசெங்கோட்டையனுக்கு ஒரு சல்யூட். தேவையற்ற பல கொண்டாட்டங்களும் அதன் பின்னணியில் பல விபரீதங்களும் தவிர்க்கப்பட்டு உள்ளன. எனது சித்தப்பா இந்த சமயத்தில் ஒரு செய்தி சொன்னார். அவர் பள்ளி இறுதியில் படித்த காலத்தில்தான் இந்த மாநில அளவில் முதலிடம் என்ற கிறுக்குத்தனம் ஆரம்பிக்கப்பட்டதாம். அப்படி முதலிடம் பெற்ற ஒருவரை சமீபத்தில் சந்தித்தபோது " அதன் பிறகு எல்லா இடத்திலும் நானே முதலிடம் பெறவேண்டும் என்று குடும்பத்தினரால் எதிர்பார்க்கப்பட்டேன். அதனால் தேவையில்லாமல் எனக்குள் ஒரு மன அழுத்தம் ஏற்பட்டு உயர் படிப்புகளின்போது சரிவர படிக்கமுடியாமல் வழக்கையே வீணாகிப்போனது" என்று வருத்தப்பட்டாராம். அதிக மதிப்பெண் பெற்றவர் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றிபெற்றவராக ஆவதில்லை. வாழ்க்கை என்பது மதிப்பெண்ணுக்கு வெளியேதான் இருக்கிறது.

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
17-மே-201807:14:16 IST Report Abuse

siriyaarSengottian and palanisamy doing better than what seen last 50 years. Hope they can continue for next 3 years. At least now they are not under gopalapuram or mannargudi mafia.

Rate this:
17-மே-201807:01:03 IST Report Abuse

a.thirumalaiசிப்பிக்குள் முத்து

Rate this:
17-மே-201806:09:34 IST Report Abuse

SSRINIVASANWELL DONE MR SENGOTTIYAN, AND EDUCATION MINISTRY OFFICIALS PL CONTINUE NO STRESS FOR UNFORTUNATE PEOPLE AND NO ADVT FOR FORTUNATE PEOPLE

Rate this:
Giridharan S - Kancheepuram,இந்தியா
17-மே-201805:11:18 IST Report Abuse

Giridharan SA good move by theTamilnadu Honble Chief Minister, TN Honble Education Minister, The Principal Secretary (Edn), Directors concerned. ஊடகங்களில் நீயா நானா என்ற நிலை இல்லாமல் முன்னுக்கு முரணான செய்திகள் இல்லாமல் வெளியே வந்துள்ள தேர்வு முடிவுகள். வாழ்த்துக்கள் இது போன்ற செயல்களால் மாணவர்களிடேயே ஏற்படும் போட்டி பொறாமைகள் அதனால் ஏற்படும் விபரீதங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடரட்டும் இது போன்ற கல்வித்துறையின் செயல்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். தோல்வி அடைந்தவர்கள் மனம் தளர விடாமல் முயற்சி செய்து வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement