Governor is encouraging horse-trading by BJP leaders, this is unconstitutiona | குதிரை பேரத்தை கவர்னர் ஊக்குவிக்கிறார்: குமாரசாமி புகார்| Dinamalar

குதிரை பேரத்தை கவர்னர் ஊக்குவிக்கிறார்: குமாரசாமி புகார்

Added : மே 16, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 குதிரை பேரத்தை கவர்னர் ஊக்குவிக்கிறார்: குமாரசாமி புகார்

பெங்களூரு: குதிரை பேரத்திற்கு வழி ஏற்படுத்திவிட்டார் என கவர்னர் முடிவு குறித்து குமாரசாமி கூறினார். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை கவர்னர் வஜூபாய்வாலா அழைத்தது குறித்து மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி பேட்டி,, எடியூரப்பாவிற்கு பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் அளித்தது சட்டவிரோதம். கவர்னரின் முடிவு ஜனநாயகத்தை நசுக்கிவிட்டது. குதிரை பேரத்தை கவர்னர் ஊக்கவிக்க வழிவகுத்துவிட்டார். போதிய பெரும்பான்மை இல்லாத பா.ஜ. சட்டசபையில் எப்படி நிரூபிக்க போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X