காங்கிரசை கழற்றி விட தயாராகும் தி.மு.க.,; கர்நாடகா தேர்தல் முடிவுகளால் தமிழகத்திலும் பரபரப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காங்கிரசை கழற்றி விட தயாராகும் தி.மு.க.,
தேர்தல் முடிவுகளால் தமிழகத்திலும் பரபரப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் அமையவுள்ள கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, தகவல் வெளியாகியுள்ளது.

 காங்கிரசை, கழற்றி விட, தயாராகும், தி.மு.க.,  கர்நாடகா தேர்தல் ,முடிவுகளால், தமிழகத்திலும், பரபரப்பு


'அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகள் கேட்டால், தங்கள் தலைமையில் அமையவுள்ள கூட்டணியிலிருந்து, காங்கிரசை கழற்றி விட, தி.மு.க., தயங்காது' என, அரசியல் வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.தேசிய அரசியலில் பல்வேறு தாக்கங்களை, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மதச் சார்பற்ற ஜனதா தளம் பெற்ற வெற்றி தான், இதற்கு காரணம்.


முட்டுக்கட்டைபா.ஜ., காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள், தங்கள் வெற்றி இலக்கை பெரும்பாலான வேளைகளில் கோட்டை விடுவது, மாநில கட்சிகளால் தான். இரு கட்சிகளின் வெற்றிப் பாதையில் பெரும் முட்டுக்கட்டையாக ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில கட்சிகள் நிற்கின்றன.மதச் சார்பற்ற ஜனதா தள வெற்றி, கர்நாடக உள்ளது.கர்நாடக தோல்விக்கு பின், கட்சிஅரசியலையே புரட்டிப் போட்டுள்ளது.

இக்கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டுமென, மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் வலியுறுத்தியும், காங்கிரஸ் அதை கேட்கவில்லை.


மோடி,- அமித் ஷா தலைமையில் வலுவாக உள்ள, பா.ஜ.,வை, ஒற்றை ஆளாக எதிர்த்து நிற்க கூடிய அளவுக்கு, போதிய பலம் இல்லை என்ற நடை முறை கூட புரியாமல், இன்னமும் பழைய நினைப் பிலேயே, காங்கிரஸ் இருப்பதாக விமர்சனம் தலைமை மீது, மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.


குலாம்நபி ஆசாத், அகமது படேல் போன்ற அனுபவம் மிக்கவர்களை விட்டு, கேரள, எம்.பி., வேணுகோபால் போன்றவர்களை, ராகுல், முன் நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடகாவில், காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியால், மாநில கட்சிகளின் கை ஓங்கப் போகிறது. தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணியில் நிச்சயம் சிக்கல் வரும்.


பெரும்பான்மை'கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு பெரும் பான்மை கிடைக்காமல் போனதற்கு, காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதே காரணம்' என்ற, குற்றச்சாட்டு உள்ளது.அதற்கு முன், மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்தும், 2011 சட்டசபை தேர்தலில், 63 தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு, உருட்டல், மிரட்டல்களை எல்லாம் காங்கிரஸ் செய்யவேண்டியிருந்ததை பலரும் அறிவர்.


'எக்ட்ரா லக்கேஜ் எதற்கு' என்ற முணுமுணுப்பு, தி.மு.க.,வின் பல மட்டங்களில் கேட்கிறது. இதனால் தான், மாற்று ஏற்பாடாக,வேறு சில

Advertisement

கட்சிகளு டன், தமிழக காங்கிரஸ் தலைமை, பேச்சு நடத்தி வருவதாக கூறப் படுகிறது. இந்நிலையில் தான், கர்நாடகாவில் காங்கிரசுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. தானாக கையில் வந்து விழுந்துள்ள இந்த வாய்ப்பை, தி.மு.க., நிச்சயம் நழுவ விடாது. அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தி.மு.க., வின் வேலை தெரிய வரும்.


தடைகளை தாண்டி, கூட்டணிக்கு, தி.மு.க., சம்மதிக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.
தொகுதி பங்கீடு குறித்த பேச்சில், எடுத்த எடுப்பிலேயே, ஒற்றை இலக்கத்தில், தி.மு.க., ஆரம்பிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்த விஷயத்தில், காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தால், கூட்டணியிலிருந்து, அந்த கட்சியை கழற்றி விடவும், தி.மு.க., தயங்காது என, அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


தமிழகத்தில் மட்டுமில்லை; மஹாராஷ்டிரா வில் தேசியவாத காங்., மேற்கு வங்கத்தில் திரிணமுல் அல்லது இடதுசாரிகள், உ.பி.,யில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என, பல கட்சிகள், வரிசை கட்டி, காங்கிரசுக்கு நெருக்கடி தரப்போவது நிச்சயம்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
18-மே-201806:12:23 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>கூட்டணிக்கூட்டணி என்ருகொடிலே சேர்த்தாச்சு மறுக்கமுடியுமா அல்லது மறையாக்கமுடியுமா அல்லது டோட்டலா மறக்கமுடியுமா இதெல்லாம் முகாவுக்கு கைவந்த கலையாச்சுதே அவரின் வாரிசு எப்படியிருக்கும் விதை ஒன்றுபோட்டால் வேரறுஏதாச்சும் முளைக்குமா காங்கிரேஸ்லேயும் என்றுமே ஒத்துமையே இல்லாதகாட்ச்சி நேரு ஒரு SELFISH MAN ஆனால் கபடநாடக வேஷதாரி இதுபலர்க்கும் தெரியும் இப்போ என்னாச்சு அவர்பொண்னு பேரன்கொள்ளுப்பேரன் பேரான்மனைவி கொள்ளுப்பேத்தி என்று நாட்டையே சூறை ஆடைகாத்துண்டுருக்கா சோனியா வும் பிராடு ராகுல் அசடுபோல பேசினு தெரியுது பிரியங்கா புருசனோ மலைமுழுங்கி (சசிக்கு தாயாதியா இருக்கும்போல ) அவ்ளோ இடங்களை வாங்கி குவிச்சுருக்கான் அடுத்து அவா பொன்னும் பிள்ளைகளும் தயாராகிண்டுருக்கா

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
17-மே-201820:02:25 IST Report Abuse

Aarkayசென்ற தேர்தலிலேயே செய்திருக்க வேண்டியது. அப்படி செய்திருந்தால், ஆட்சியில் அமர்ந்திருக்கலாம் கொடுத்த 40 இல், 8 மட்டுமே வென்று, திமுக ஆட்சிக்கு ஆப்பு வைத்தது காங்கிரஸ். அப்படியே, குருமா, கிச்சடியையும் அண்டவிடாமல் இருந்தால், தைரியமாய் ஓட்டளிப்போம் உங்கள் வலதும், இடமும் நிற்பவர்களை பார்த்தாலே, உங்களுக்கு ஓட்டளிக்க பயமாய் இருக்கின்றது.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-மே-201816:16:10 IST Report Abuse

Malick Rajaஒரு சம்பவம் நடக்காத நிலையில் நடந்தது போல சித்தரிப்பது மனிதமாண்புதானே ? உணர்வற்ற ஜடங்களாக வாழ்வது மனிதவாழ்க்கைதானா ? மனித நேயம் தழைக்க மனிதவாழ்வு மேம்பட உதவுவதுதான் மனிதமாண்பே தவிர ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்குவது கோட்பாடு சாலையோர கயவர்களுக்கு மட்டுமே உகந்தது

Rate this:

ஸ்ரீநிவாசன்,COIMBATOREஇந்த நியூஸ் போட்டது, ஸ்டாலினை கலாய்க்கிறதுக்குத் தானே..?

Rate this:
Vijaya Raghav - chennai,இந்தியா
17-மே-201814:13:32 IST Report Abuse

Vijaya Raghavஇவர்கள் கடைசியில் மோடியின் காலில் விழுந்து ஆட்சியை கைப்பற்ற போகிறார்கள் தி மு க வுக்கு சூடு சுரணை ஏதும் இல்லை. பதவிதான் முக்கியம். இவர் தந்தையை மறுபடியும் முதல்வராக பார்க்க ஆசை இவருக்கு. ஆகையால் எந்த முடிவுக்கும் தயங்க மாட்டார்

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-மே-201812:15:03 IST Report Abuse

pradeesh parthasarathy... கர்நாடகாவில் இன்றும் அதிக வாக்குகள் வங்கி 38 சதவிகிதம் பெற்றிருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சியே .... தேர்தலுக்கு முன்பு ஜனதாதளம் சிறிது செல்வாக்குடன் இருந்த இடங்களில் எல்லாம் பிஜேபி தனது டம்மி வேட்பாளர்களை நிறுத்தி இலைமறை காயாக ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்ததினால் தான் அங்கு ஜனதா தளம் இந்தளவிற்கு தொகுதிகளை பெற்றுள்ளது ... ஜனதாதளம் வெற்றி பெற்ற தொகுதிகளில் பிஜேபி கிடைத்தது 2000 முதல் 5000 வாக்குகள் வாங்கி டெபாசிட் இழந்துள்ளது .. இதிலிருந்தே நாம் அதை தெரிந்துகொள்ளலாம் ... அதனால் இன்றும் காங்கிரஸ் கட்சியே அங்கு மிக பெரிய சக்தி .... திமுக தவறாக கணக்கு போடுமென்றால் தமழகத்தில் அது திமுக விற்கு தான் இழப்பு ... காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அதற்க்கு தமிழகத்தில் இழப்பதற்கென்று ஒன்றும் இல்லை ...

Rate this:
17-மே-201812:08:44 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்கூடா நட்பு என்று வெளியுலகத்திற்கு வேண்டுமானால் சொல்வார்கள், ஆனால் கூட்டணி தொடரும். குறைந்த எண்ணிக்கை தொகுதிகளை ஒதுக்குவார்கள் , ஜெயித்தால் அதிக மத்திய மந்திரி பதவிகள் கேட்டுப்பெறலாம் என்பதே குறிக்கோள். கழற்றிவிட வாய்ப்புகள் குறைவு. தனியாக நிற்க காங்கிரஸில் ஆளும் இல்லை , ஓட்டும் விழாது. இன்னொரு நிலைப்பாடும் எடுக்கலாம் கூட்டுகளவாணிகள் ஒன்று கூடி ஆலோசித்து மக்கள் உங்களுக்கு எதிராக உள்ளார்கள் ஆகவே எங்களுக்கும் ஒட்டு விழாது ஆகவே தனித்தனியாக நிற்போம் , ஜெயித்த பின் MP எண்ணிக்கைக்கேற்ப மந்திரி பதவிகள் கொடுங்கள் , மத்தியில் ஆதரவு உங்களுக்குத்தான் என்று.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
17-மே-201811:44:35 IST Report Abuse

Indhuindianஉன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய். உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணா

Rate this:
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
17-மே-201811:18:50 IST Report Abuse

கருப்பட்டி சுப்பையா மதச்சார்புள்ள ஆட்சியை அகற்றிட தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்: அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் செயல் தலைவர் வலியுறுத்தல் இன்னும் இந்த பழைய டயருக்கு பஞ்சர் போட்டு கிட்டே இருங்க. அதென்ன மதச்சார்பற்ற இந்து மதச்சார்பற்றன்னு பளிச்சின்னு சொல்ல வேண்டியது தானே

Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
17-மே-201810:55:05 IST Report Abuse

Milirvanஇனிமேல் கான்கிராஸ் தமிழகத்தில் நாம் தமிழர், முசுலீமு லீகு, பாசறை, போன்ற பிரிவினையை ஓதும் கட்சிகளுடன் சேர்ந்து, நாங்க தேசத்துக்காக போராடுவோம் என்று பேனர் புடிக்க வேண்டியதுதான்..

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement