எடியூரப்பா பதவியேற்க தடை: உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங்.மனு| Dinamalar

எடியூரப்பா பதவியேற்க தடை: உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங்.மனு

Updated : மே 17, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எடியூரப்பாவுக்கு தடடை: நள்ளிரவில் காங். மனு

புதுடில்லி: கர்நாடகாவில் பா..ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு செய்துள்ளது.

கர்நாடகாவில் தனிபெரும் கட்சியாக பா.ஜ. உள்ளதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இன்று(மே 17) எடியூரப்பா முதல்வராக பதவியேற்கிறார். இதற்கு காங். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கவர்னர் முடிவுக்கு எதிராக நள்ளிரவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கே சென்று முறையிட முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்., சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி சார்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. .

அதில் இன்று நீதிமன்றம் துவங்கும் முன்பே முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். காங்., மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு பெருமபான்மை இருந்தும் கவர்னர் அழைக்கவில்லை. முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு நடந்துவிட்ட பின்னர் வழக்கு தொடர்ந்தால் சட்டசிக்கல்கள் உள்ளன. எனவே இந்த முறையீட்டு மனுவை இரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எடியூரப்பா பதவியேற்புக்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தலைமை நீதிபதியிடம் நேரம் கேட்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் வழக்கறிஞர் உச்சநீதிமன்ற பதிவாளிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Tiruchi,இந்தியா
17-மே-201810:25:50 IST Report Abuse
S.prakash உச்சநீதி மன்றம் கண்ணியமான, கண்டிப்பு மிக்க நீதிபதிகளை இழந்து விட்டது. நாடு குட்டிச்சுவர் நீதி கோழை ஆகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-மே-201809:42:26 IST Report Abuse
Agni Shiva தோற்றவர்கள் ஆடும் இந்த கூத்திற்கு உச்ச நீதிமன்றம் தலையிடாமல் இருப்பதே நல்லது. அதுவும் நள்ளிரவு கூத்து என்பது அவர்களுக்கு கைவந்த கலை. இப்படி தான் ரவுல் சின்சி இருமாதங்களுக்கு முன்பு நள்ளிரவு காட்சியை டெல்லி கண்டோன்மென்டில் மெழுகுவர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் குளுகுளு நள்ளிரவு காட்சியை அரங்கேற்றி பெண்களை மானபங்கப்படுத்தும் சமூகவிரோதிகளுக்கு ஜாலிடேய் ஆக்கி கொடுத்தார். அது போல இந்த நள்ளிரவு காட்சி மறுநாள் பத்திரிகைகள் எடியூரப்பா முதல்வராகும் செய்தி வந்து விடக்கூடாது மாறாக தங்கள் நடத்தும் நள்ளிரவு காட்சி செய்தியாக வேண்டும் என்று ஒரு தீய ஆசையின் காரணமாக நடத்தப்பட்ட நாடகம்.
Rate this:
Share this comment
Cancel
k.sampath - Trichy,இந்தியா
17-மே-201806:51:01 IST Report Abuse
k.sampath சாதாரண குடிமகன் இதுபோல நள்ளிரவில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-மே-201806:03:23 IST Report Abuse
Kasimani Baskaran “நள்ளிரவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கே சென்று” - கர்மா... சில நாட்களுக்கு முன்னர்தான் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று சொன்னார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-மே-201804:20:00 IST Report Abuse
Kasimani Baskaran நள்ளிரவில் மனு - இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... 44 அடுத்த தேர்தலில் ஒற்றை இலக்கத்தை நோக்கி செல்வது உறுதி... கம்மிகள் கூட காங்கிரசை கை கழுவி விட்டது இதற்க்கு ஒரு நல்ல ஆரம்பம்...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-201801:32:53 IST Report Abuse
தமிழ்வேல் கூத்து....
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
17-மே-201801:28:37 IST Report Abuse
சிற்பி ஒரு வழியாக அபிஷேக் சிங்வி வெளியே வந்து விட்டார். நீரவ் மோடியிடம் நீங்கள் வாங்கிய பணம், உங்கள் மனைவி வாங்கி வளைத்த வைர நகைகள் உங்களிடம் இருக்கிறது. நீரவ் மோடி எங்கே? இவ்வளவு நாளாக தலை மறைவாக இருந்தவர் இன்று வெளியே வந்துள்ளார். வாங்க சார்...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201800:58:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கவர்னரின் அதிகாரத்தில் தலையிட முடியாது. சுப்ரீ, கோர்ட்டு கருத்து. நாம பாக்காததா? காவி கட்சி வந்த பிறகு எல்லா கருமத்தையும் பாத்தாச்சு.
Rate this:
Share this comment
சிற்பி - Ahmadabad,இந்தியா
17-மே-201814:47:51 IST Report Abuse
சிற்பி யப்பா.... நல்ல கட்சி காங்கிரஸ். பிஜேபி வந்து தான் காங்கிரஸ் கட்சியை கெடுத்து விட்டது. திட்டுவதற்கு நிறையவே சொற்கள் உள்ளன, அது போல அந்த சொற்களை பயன்படுத்த நிறைய காரணிகளும் காங்கிரஸ்ஸிடம் உள்ளது. உலகத்தில் இல்லாத களவாணித்தனத்தை செய்த கட்சி. சொந்த நாட்டையே அந்நியனிடம் அடகு வைத்த கட்சி, நாட்டை எதிரியிடம் காட்டி கொடுக்கும் கட்சி, தன சொந்த நாட்டு மக்களையே வஞ்சிக்கும் கட்சி, தான் ஆட்சிக்கு வர சொந்த நாட்டு மக்களை ஜாதி, மதம் என்று ஓட்டுக்காக பிளவு படுத்தும் கட்சி... என்று காங்கிரசின் உலக மகா அக்கிரம செயல்களை அடுக்கி கொண்டே போகலாம். கொஞ்சநேரம் அமைதியாக இருங்கள்....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201800:22:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவரு கவர்னரிடம் கேள்வி கேட்பார், மத்திய அரசிடம் கேள்வி கேட்பார். . ஒரு வாரம் "கால அவகாசம்" கொடுப்பார். அதுக்குள் எல்லாம் கதை எல்லாம் முடிந்திருக்கும். இது தானே கோர்ட்டுகளுக்கு வழக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
17-மே-201800:19:56 IST Report Abuse
Kunjumani காங்கிரஸ் செய்யாத ஜனநாயக படுகொலையா? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது பாஜகவை சாட? நம் தானையின் இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்று நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக புகழ்ந்த இந்திராவின் எமெர்ஜென்சியை எதிர்த்து பேசிய வீர வசனம் நியாபகம் வருகிறதா? அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா. அப்பொழுது அவர்கள் முறை இப்பொழுது பாஜகவின் முறை. ஜனநாயகமாவது மண்ணாவது, பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போடுவது ஜனநாயக படுகொலை இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை