எடியூரப்பா... சோதனை கடந்து சாதனை! Dinamalar
பதிவு செய்த நாள் :
எடியூரப்பா...சோதனை கடந்து சாதனை!

அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் கண்ட எடியூரப்பா, 75, பல்வேறு சோதனைகளை சந்தித்தவர். தென் இந்தியாவில் பா.ஜ., வின் முதல் முதல்வர் என்ற பெருமைக்குரியவர். தற்போது மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

 எடியூரப்பா, சோதனை கடந்து,சாதனை


இவரது அரசியல் பின்னணி


பிப்., 27, 1943 : கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள புக்கனகரே கிராமத்தில் பிறந்தார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்.

1970: ஷிகரிபுரா பகுதியின் ஆர்.எஸ்.எஸ்., செயலராக நியமிக்கப்பட்டார்.

1972: பாரதிய ஜன சங் அமைப்பின் தாலுகா தலைவராக பதவியேற்றார்.

1975: ஷிகரிபுரா நகராட்சி தலைவராக தேர்வானார்.

1975, 1977: நாட்டின் நெருக்கடி நிலை இருந்த போது, சிறையில் அடைக்கப்பட்டார்.

1983: முதல்முறை யாக எம்.எல்.ஏ., வாக பதவியேற்றார்.

1988: பா.ஜ., மாநில தலைவராக பதவியேற்றார்.

1994: சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார்.

நவ. 12, 2007 : மாநில முதல்வரானார்.நவ., 19: பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் பதவியில் இருந்து விலகல்.

மே 30, 2008: சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மை பெற்றது. எடியூரப்பா முதல்வரானார். 2008: அமெரிக்க பல்கலைக் கழகம்,கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

2010: அடுத்தடுத்து இரண்டு முறை இவரது அரசு, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உள்ளானது.

2010 நவ.: அரசு நிலத்தை மகனுக்கு ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2011 பிப். 5: சொத்துக்கணக்கை வெளியிட்டார்.

ஜூலை 28: சட்ட விரோதமாக கட்சியினருக்கு நிலக்கரி உரிமம் வழங்கியதாக இவர் மீது 'லோக் ஆயுக்தா' அறிக்கை குற்றம்சாட்டியது.

ஜூலை 31: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அக்., 15: கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

மே 8: ஜாமினில் வெளியே வந்தார்.

டிச., 9, 2012 : பா.ஜ.,வில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா பக் ஷா கட்சியை துவக்கினார்.

மே 2013: சட்டசபை தேர்தலில் இவரது கட்சி 6 இடங்களில் வென்றது.

ஜன., 2 2014: பா.ஜ., வுடன் கட்சியை இணைத்தார்.

2016: கர்நாடக பா.ஜ., தலைவராக நியமனம்.

மே 15, 2018: சட்டசபை தேர்தலில் ஷிகரிபுரா தொகுதியில் வெற்றி.

மே 17: முதல்வராக பதவியேற்கிறார்.

ஓட்டு அதிகம் 'சீட்' குறைவு


கர்நாடக சட்டசபை தேர்தலில் 38 சதவீத ஓட்டுக்களை பெற்ற காங்., 78 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் 36.2 சதவீத ஓட்டுகளை பெற்ற பா.ஜ., 104 தொகுதிகளை கைப்பற்றியது. காங்., 78 இடங்களில் முதலிடம், 112 இடங்களில் இரண்டாவது இடம் என 190 தொகுதிகளில் முதல்

Advertisement

இரண்டு இடங்களுக்குள் வந்தது.ஆனால் பா.ஜ, 104 தொகுதிகளில் முதலிடம், 67இடங்களில் இரண்டாவது இடம் என 171 இடங்களில் மட்டும் தான் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்தது. பா.ஜ., வேட்பாளர்கள் பலர் 3, 4வது இடங்களுக்கு தள்ளப்பட்டனர். இதனால் தான் ஓட்டு சதவீதத்தில் பா.ஜ., பின்தங்கியது.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!


கடந்த 1995ல் 121 இடங்களில் வெற்றி பெற்று குஜராத்தில் பா.ஜ., ஆட்சி அமைத்தது. முதல்வ ராக கேசுபாய் படேல் இருந்தார். இந்நிலையில் 1995 அக்டோபரில் பா.ஜ., வில் இருந்த சங்கர்சிங் வகேலா, காங்., துாண்டுதலின்படி 47 எம்.எல்.ஏ.,க்களுடன் தனி அணியை உருவாக் கினார். இதனால் கேசுபாய் படேல் பதவி விலக நேரிட்டது. பின், வகேலா ஆதரவாளரான பா.ஜ., வின் சுரேஷ் மேத்தா முதல்வராக்கப்பட்டார். ஆனால் வகேலா, பா.ஜ.,வில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.

அப்போது காங்., ஆதரவுடன் மைனாரிட்டி பிரதமராக இருந்தவர் தேவகவுடா. அப்போதைய குஜராத் மாநில பா.ஜ., தலைவ ராக இருந்தவர் வஜூபாய் வாலா (தற்போது கர்நாடகா கவர்னர்). 'பா.ஜ., ஆட்சியை கலைக்கக் கூடாது' என கவர்னரை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், 1996 செப்., 19ல் சுரேஷ் மேத்தாவின் ஆட்சி கலைக்கப் பட்டுஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.ஒருமாதத்திற்கு பின் காங்., ஆதரவுடன் வகேலா முதல்வரானார்.

தற்போது 22 ஆண்டுகளுக்குப்பின் நிலை தலைகீழாக மாறியுள்ளது. தேவகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வர் ஆவாரா என்பதை தீர்மானிப்பவராக உள்ளார் கவர்னர் வஜூபாய் வாலா.'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற சாமானியனின் குரல் எப்போதும் கேட்கத்தான் செய்கிறது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-மே-201815:08:11 IST Report Abuse

Malick Rajaவினை விதைத்த எடியூரப்பா வினையை அறுவடை செய்வதே சரியாகும் .. 75 வயதிலும் பதவி வெறி .. மண்ணுக்கு போகும் வரை தீய மனிதனுக்கு ஆசை விடாதோ

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-201814:59:07 IST Report Abuse

Endrum Indianஇதைத்தான் நான் அப்போவே சொல்லிட்டேனே ஆகவே ராவுல் வின்சிக்கு தலையாய Iron Leg பட்டம் ஜனாதிபதி வழங்க முடிவு. கால் வைத்த இடம் விளங்காது.

Rate this:
JIVAN - Cuddalore District,இந்தியா
17-மே-201814:08:10 IST Report Abuse

JIVANபுரியலையா அங்கெல்லாம் அவங்களுக்கு அவசர அரிப்பு, பதவி பேராசை அதனாலதான்

Rate this:
Mohan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-201813:36:17 IST Report Abuse

MohanTHIS IS WORST SCENARIO AND BJP WILL FALL DOWN ... THIS IS THE FIRST STEP ... MOST OF THE MEDIAS UNDER CONTROL BY BJP... VERY MUCH VISIBLE... JAIHIND

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-மே-201810:33:10 IST Report Abuse

pradeesh parthasarathyகர்நாடகாவில் 29 தொகுதிகளில் பிஜேபி டெபாசிட் இழந்து இரண்டாயிரம் ,ஐந்தாயிரம், பத்தாயிரம் , வோட்டுகளுக்கு கீழே பிடித்துள்ளது ... இப்படிப்பட்ட ஒரு கட்சி எப்படி 104 தொகுதிகளில் வென்றது ..? செய்தியின் தலைப்பை மாற்றுங்கள் ... சோதனை அல்ல .. இது ஊழல் பணத்தால் சாதனை ...கடந்த ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற ஊழல் இல்லாத ஒரு நேர்மையான அரசை பார்த்த மக்கள் இனி எடியூரப்பா தலைமையில் ரெட்டி சகோதரர்களின் ஊழல் சாம்ராஜ்யத்தை பார்க்கப்போகிறார்கள் ...

Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
17-மே-201809:28:23 IST Report Abuse

Nallappan Kannan Nallappanஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா-நீ அங்கெல்லாம் என்ன நடந்ததுன்னு நியூஸ் பேப்பர திரும்ப தேடிபுடிச்சி ஒழுங்கா படி

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201808:13:57 IST Report Abuse

Pugazh V@கு.கேசவன்:: எடியூரப்பாவின் ஆட்சி அமைக்க கோரும் கடிதத்துடன் பெரும்பான்மை உறப்பினர்களின் ஆதரவும் எழுத்து மூலம் இருக்கிறதா என்று பார்ப்பது தான் கவர்னரின் ஸிஸ்டமேடிக் செயல்பாடு. இதை சரிபார்க்காமல் அழைப்பு விடுத்தால் அது இந்திய ஆட்சி முறைகளுக்கு எதிரான ஸிஸ்டமேடிக். புரிந்து கொள்ளவும்.

Rate this:
raj - London,யுனைடெட் கிங்டம்
17-மே-201806:38:56 IST Report Abuse

rajஜால்ரா சத்தம் காதை கிழிக்கிறது, குதிரை போறதுக்கு வழிவகுக்கும் என்று தெரிந்தும் இது போல் செய்வது அந்த மாநிலத்துக்கு நல்லது அல்ல.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-மே-201800:04:18 IST Report Abuse

Kuppuswamykesavanஐயா, கவர்னரை பொருத்தவரை, முறையாக, சிஸ்டமேடிக்காக செயல்படுவதாகவே தெரிகிறது(ஃபிரீ எலக்சன் கன்டீசன் & போஸ்ட் எலக்சன் கன்டீசன்). சிலரின் அவசர அரிப்புக்கு, பதவி பேராசைக்கு, கவர்னர் தன் இயல்பான அலுவல் நடைமுறைகளை மாற்ற முடியுங்களா?.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201808:16:21 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்கோவா, மணிப்பூர், மேகாலயா, திரிபுராவில் நடந்தது எல்லாம் "சிஸ்டமேடிக்கா" தெரியல்லியா?...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-201819:06:12 IST Report Abuse

தமிழ்வேல் கஷ்டமேடிக்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement