ஐ.பி.எல்.,: பஞ்சாபை வீழ்த்தி மும்பை ‛திரில்' வெற்றி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.பி.எல்.,: பஞ்சாபை வீழ்த்தி மும்பை ‛திரில்' வெற்றி

Added : மே 17, 2018
Advertisement
Indian Premier League 2018,MI vs KXIP, Mumbai Indians win,இந்திய பிரீமியர் லீக் 2018,  விவோ ஐபிஎல் கிரிக்கெட், ஐபிஎல் 2018, ஐபிஎல் கிரிக்கெட் 2018, மும்பை இந்தியன்ஸ்,  கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை வெற்றி, Mumbai win,
 Vivo IPL Cricket, IPL 2018, IPL Cricket 2018, Mumbai Indians, Kings XI Punjab,

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாபை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை ‛திரில்' வெற்றி பெற்றது.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், கருண் நாயர் நீக்கப்பட்டு யுவராஜ் சிங், மனோஜ் திவாரி சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் டுமினிக்கு பதிலாக போலார்டு இடம் பிடித்தார். 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


போலார்டு அரை சதம்:

மும்பை அணிக்கு லீவிஸ் (9), இஷான் கிஷான் (20) விரைவில் திரும்பினர். ஆன்ட்ரூ டை 'வேகத்தில்' சூர்யகுமார் (27) சிக்கினார். கேப்டன் ரோகித் (6) ஒற்றை இலக்கில் திரும்பினார். குர்னால் 32 ரன் எடுத்தார்.சிறப்பாக விளையாடிய போலார்டு (50) அரை சதம் அடித்தார். முடிவில், மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. மெக்லீனகன் (11), மார்க்கண்டே (7) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஆன்ட்ரூ டை 4 விக்கெட் வீழ்த்தினார்.


ராகுல் அசத்தல்:

பின், களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல், கெய்ல் ஜோடி துவக்கம் தந்தது. கெய்ல் 18 ரன்களில் அவுட்டானார். பின், இணைந்த ராகுல், பின்ச் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஹர்திக் பாண்ட்யா பந்தை பின்ச் சிக்சருக்கு பறக்கவிட்டார். குர்னால் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி அடித்த ராகுல் அரை சதம் எட்டினார். பின்ச்(46), பும்ரா வேகத்தில் வெளியேர ஆட்டம் மும்பை பக்கம் திரும்பியது. ஸ்டோய்னிஸ்(1), யுவராஜ்சிங்(1) ஏமாற்றினர்.

20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து, 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பும்ரா 3 விக்கெட், மெக்லீனகன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X