சூரியசக்தி மின்சார, 'மோட்டார் பம்ப்' 1,000 விவசாயிகளுக்கு வழங்க முடிவு Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சூரியசக்தி !
சூரியசக்தி மின்சார, 'மோட்டார் பம்ப்'
1,000 விவசாயிகளுக்கு வழங்க முடிவு

சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும், நீர் இறைக்கும் மோட்டார் பம்பை, வேளாண் துறையுடன் இணைந்து, 1,000 விவசாயிகளுக்கு வழங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

 சூரியசக்தி, மின்சார, 'மோட்டார் பம்ப்', 1,000 ,விவசாயிகளுக்கு வழங்க,முடிவு


தமிழ்நாடு மின் வாரியம், விவசாயத்திற்கு, இலவசமாக மின் வினியோகம் செய்கிறது. மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரியசக்தி மின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது.இதனால், சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும், நீர் இறைக்கும் மோட்டார் பம்பு களை, மானிய விலையில் வழங்குவதற்கான அறிவிப்பை, தமிழக அரசு, 2017ல் வெளியிட்டது.


மோட்டார் பம்பின் மொத்த செலவில், தமிழக அரசு, 40 சதவீதம் மானியம் வழங்கும். மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம், 20 சதவீதம் மானியமும், மின் வாரியம், 30

சதவீதம் மானியமும் வழங்கும். விவசாயிகள், 10 சதவீத செலவை ஏற்க வேண்டும்.


இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மானிய விலையில், மோட்டார் பம்ப் வழங்கும் திட்டத்தை, மின் வாரியம், வேளாண் பொறியியல் துறையுடன் இணைந்து செயல்படுத்து கிறது. மின் வாரியத்திடம், விவசாய மின் இணைப்பு கோரி, காத்திருக்கும் விவசாயிகள், தங்கள் பதிவு மூப்பு பட்டியலை ரத்து செய்து, சூரியசக்தி மின் மோட்டாருக்கு விண்ணப்பிக்க லாம். அவர்களின் விபரத்தை, மின் வாரியம் உறுதி
செய்து, வேளாண் துறைக்கு தகவல் தெரிவிக்கும்.


விவசாயிகளுக்கு, 5 குதிரை திறன், 7.50 குதிரை திறன், 10 குதிரை திறன் உள்ள மோட்டார் பம்ப், மானிய விலையில் வழங்கப்படுகிறது. இவற்றின் சந்தை விலை, ஐந்து முதல், 7.50 லட்சம் ரூபாய் என்றளவில் உள்ளன.கடந்த ஆண்டில், 1,000 விவசாயிகளுக்கு, சூரியசக்தி மின்சார மோட்டார் பம்ப்கள் வழங்கப்பட்டன. அதேபோல், நடப்பாண்டி லும்,1,000 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, மின் துறை அமைச்சர், சட்டசபையில் வெளியிடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய் கிடைக்கும்:

மின் வாரியம், 1 யூனிட்,3.22 ரூபாய் என்ற விலை உள்ள மின்சாரத்தை, விவசாயிகளுக்கு இலவசமாக

Advertisement

வழங்குகிறது. இதற்கான செலவை, மின் வாரியத்திற்கு, தமிழக அரசு, மானியமாக வழங்குகிறது. புதிய விவசாயிகளுக்கு, மானிய விலையில் சூரியசக்தி மின் மோட்டார் பம்ப் வழங்குவது போல், ஏற்கனவே, இலவச மின் இணைப்பு பெற்று உள்ள வர்களுக்கும் வழங்கலாம். இதனால், அவர்கள், மின் வாரிய மின்சாரத்தை பயன்படுத்துவது தவிர்க்கப்படும்.


இதனால், மின் வாரியத்திற்கும் செலவு ஏற்படாது. விவசாயிகள் பயன்படுத்தியது போக, உபரி மின்சாரத்தை, மின் வாரியம் வாங்கலாம். இதனால், தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை, வாரியம் தவிர்ப்பதுடன், விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
17-மே-201802:33:07 IST Report Abuse

என்னுயிர்தமிழகமே5 HP மோட்டார் விலை என்னங்க

Rate this:
Sethuraman Kozhiyur - Muscat,ஓமன்
17-மே-201814:03:34 IST Report Abuse

Sethuraman Kozhiyur5hp 26000-/-...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement