எந்திரனே... காபி தரும் மந்திரனே!| Dinamalar

எந்திரனே... காபி தரும் மந்திரனே!

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
அமெரிக்கா ரோபோ, காபி ஷாப்,  இன்ஜினியர் ஹென்றி கியூ , கேப் எக்ஸ், வாடிக்கையாளர்கள்,காபி தரும் எந்திரன், அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ ,
USA Robot, Coffee Shop, USA San Francisco, Engineer Henry Kue, Cape X, Customers,

அமெரிக்காவில் ரோபோ நடத்தும் 'காபி ஷாப்' அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.உலகளவில் தினமும் காலை எழுந்தவுடன், 'காபி' குடிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. சில நேரங்களில் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் கால தாமதம் ஏற்படும். இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், ரோபோ நடத்தும் காபி ஷாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பெயர் 'கேப் எக்ஸ்'. கை போன்ற வடிவில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. பேப்பர் கப்பை எடுப்பது, காபியை நிரப்புதல், வாடிக்கை யாளர்களுக்கு வழங்குதல் போன்ற வேலைகளை தானாகவே செய்யும் வகையில் ரோபோ புரோகிராமிங் செய்யப் பட்டுள்ளது.

இந்த ரோபோ இயந்திரம், ஒரு நபருக்கு காபி வழங்குவதற்கு, ஒரு நிமிடத்துக்கு குறைவான நேரமே போதும். ஒரு மணி நேரத்தில் 100 - 120 கப், காபி வழங்குகிறது. இதில் காபி கொட்டை களை நிரப்புதல் மற்றும் கிளீன் செய்வது மட்டுமே மனிதரது வேலை. 2019ல் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் இதனை விரிவுபடுத்துவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள், காபி ஆர்டர் செய்வதற்கு, டச் ஸ்கிரீன் அல்லது அலைபேசி ஆப் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
ஆர்டர் செய்த ஒரு நிமிடத்துக் குள்ளாகவே காபியை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முன்னதாக, வழங்கப்பட்ட நான்கு இலக்க ரகசிய எண்ணை அழுத்த வேண்டும். இதன்மூலம் அவரவர் ஆர்டர் செய்தவை, அவர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. கட்டணத்தை கிரடிட் கார்டு அல்லது ஆப் மூலம் செலுத்தலாம். 236 மில்லி லிட்டர் காபியின் விலை
ரூ. 150 ரூபாய். இது அங்குள்ள கடைகளின் விலையை விட குறைவு.
இதனை வடிவமைத்த இன்ஜினியர் ஹென்றி கியூ கூறுகையில், ''இது வழக்கமான காபி ஷாப்களுக்கு மாற்று அல்ல. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். தரம் மற்றும் விரைவாக வழங்குவதே இதன் நோக்கம்'' என்றார்.

இந்த ரோபோவின் விலை ரூ. 16.8 லட்சம்.

ஒரு மணி நேரத்தில், 100 முதல் 120 பேருக்கு காபி வழங்குகிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
17-மே-201808:53:41 IST Report Abuse
Amirthalingam Sinniah மக்களின் வேலையை பறித்த இதை வாழ்த்துவதா? அல்லது திட்டுவதா ? தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X