காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் ஊடுருவல்?| Dinamalar

காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் ஊடுருவல்?

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஸ்ரீநகர் : பாக்., பயங்கரவாதிகள், ஐந்து பேர், ரகசிய சுரங்கப்பாதை வழியாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில் ஊடுருவியிருப்பதாக, எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சில திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, நாளை மறுநாள், பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு - காஷ்மீர் வருகிறார். அவரது வருகையை சீர்குலைக்கும் வகையிலும், அவர் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்துடனும், பாக்., பயங்கரவாதிகள், நம் நாட்டிற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து, பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கூறியதாவது:பாக்., எல்லையை ஒட்டி அமைந்துள்ள, சம்பா பகுதியில், பி.எஸ்.எப்., வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சில மர்ம நபர்கள், நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். திடீரென அவர்கள் மாயமாகினர். பாக்., பயங்கரவாதிகள், ஐந்து பேர், சுரங்கப்பாதை அமைத்து, நம் நாட்டிற்குள் ஊடுருவியிருக்கலாம் என, சந்தேகிக்கிறோம்.எல்லையில், ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். ராணுவம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.பிரதமர் வருகையையொட்டி, எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
17-மே-201806:46:15 IST Report Abuse
Darmavan ரகசிய சுரங்க பாதையை ஏன் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை