தடை விதிக்க வேண்டும்!| Dinamalar

தடை விதிக்க வேண்டும்!

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேர்தல் முடிவுகளுக்கு பின், அணி மாறும், எம்.எல்.ஏ.,க்களை, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்வது மட்டும் போதாது. குறைந்தபட்சம், அடுத்து வரும் ஒரு தேர்தலிலாவது போட்டியிட முடியாதபடி தடை விதிக்க வேண்டும்; அப்போது தான் குதிரை பேரத்தை தடுக்க முடியும்.
ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
லாபம் கிடையாது!
ஹரியானாவில், இலக்கை விட, கோதுமை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக, மாநிலத்தை ஆளும், பா.ஜ., அரசு தெரிவித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடையாது. உற்பத்தியை மட்டும் அதிகரித்துவிட்டு, விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடிக்கும் செயலே நடக்கிறது.
யோகேந்திர யாதவ், தலைவர், சுவராஜ் அபியான் அமைப்பு
முடிவெடுப்பது நல்லது!கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள், அரசியல் அரங்கில் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளன. எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாததால், கூடிய விரைவில், கவர்னர் முடிவெடுக்க வேண்டும். காலம் தாழ்த்தினால், அது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும்.சந்தோஷ் ஹெக்டே

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை