பாரதிராஜா முன்ஜாமின் மனு : போலீஸ் பதில் தர உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாரதிராஜா முன்ஜாமின் மனு : போலீஸ் பதில் தர உத்தரவு

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: இயக்குனர் பாரதிராஜா தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி, போலீசாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் நடந்த திரைப்பட விழாவில், பேசிய இயக்குனர் பாரதிராஜா, 'ஹிந்து கடவுள் விவகாரம் தொடர்பாக, கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால், தலையை எடுக்க தயங்க மாட்டோம்' என்றார்.இதையடுத்து, இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை துாண்டும் வகையில் பாரதிராஜா பேசியதாக, இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் நாராயணன், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாரதிராஜா மீது, வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில், முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாரதிராஜா மனு தாக்கல் செய்தார். அதில், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற என்னை, துன்புறுத்தும் நோக்கில், நான்கு மாதங்களுக்கு முன் அளித்த புகார் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.மனு, நீதிபதி, பி.ராஜமாணிக்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, முன்ஜாமின் வழங்க, புகார்தாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பை, மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, முன் ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்க, வடபழனி இன்ஸ்பெக்டருக்கு உத்தர

விட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijaya Raghav - chennai,இந்தியா
17-மே-201814:07:59 IST Report Abuse
Vijaya Raghav இவனுகளை முதலில் உள்ளே தள்ளுங்கள் இன்னும் திருந்தாத ஜாதி. என்ன தான் படிப்பு அறிவு இருந்தாலும் இவனுகளை திருத்த முடியாது. அருவாளை தூக்காதே மூளையை உபயோகி. இவனுக்கு யார் பாரதி என்ற நல்ல பெயரை வைத்தார்கள் இவனுக்கும் பெயருக்கும் சம்மந்தம் இல்லை. இவனுக்கு அருவாள் ராஜா என்ற பெயர் மிக பொருத்தமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை