கொலை, தற்கொலை, பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சாலை விபத்தில் இளைஞர் பலி
கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஆஷிக், 24; சென்னை, பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலையில், எம்.பி.ஏ., படித்து வந்தார். அவர், நேற்று முன்தினம், தாம்பரத்தில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக, இருசக்கர வாகனத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தார். இரும்புலியூர் மேம்பாலம் அருகே, லாரி மோதியதில், ஆஷிக் சம்பவ இடத்திலேயே பலியானார்.
78 வயது முதியவர் தீ குளிப்பு
சென்னை, விருகம்பாக்கம், எல்.டி. காலனியைச் சேர்ந்தவர், வெங்கடேசன், 78. நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினரிடம் ஏற்பட்ட சண்டையால், மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தார். காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பலியானார். விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி
சென்னை, தியாகராய நகரைச் சேர்ந்தவர், செல்வம் மகன் ராஜேஷ், 17; ஒன்பதாம் வகுப்பு மாணவர்.விடுமுறைக்காக, தாம்பரம், சானடோரியம்,மவுலானா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ராஜேஸ் வந்திருந்தார். நேற்று முன்தினம், நண்பர்கள் சிலருடன், சானடோரியம், 'மெப்ஸ்' வளாகத்தின் அருகே, ராஜேஷ் விளையாடி கொண்டிருந்தார். சுற்றுச்சுவர் மீது ஏற முயன்ற போது, மேலே இருந்த மின்கம்பியை உரசியதால், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ராஜேஷ் உயிரிழந்தார். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் சிக்கிய மூதாட்டி பலி
திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் கருடாத்ரி விரைவு ரயில், நேற்று காலை, 45 நிமிடங்கள் தாமதமாக, ஆவடி ரயில் நிலையம் வந்தது. மீண்டும் ரயில் புறப்பட்ட போது, 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஏற முயன்று, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தார். அதில் ரயில் சிக்கிய அவர், 1.5 கி.மீ., இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
வாகன விபத்தில் பெண் பலி
சென்னை, வேளச்சேரி, ராதா நகரைச் சேர்ந்தவர், வேல்மணி, 49. அவரது மனைவி கவிதா, 42. இருவரும், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை நோக்கிச் சென்றனர். வேளச்சேரி மேம்பாலம் கீழ் வளைவில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர தடுப்பில் மோதியது. காயமடைந்த கவிதா, பலியானார். வேல்மணி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் பாய்ந்து பெயின்டர்கள் பலி
திருப்பூரை சேர்ந்தவர் பழனிசாமி, 40. இவர், இரண்டு மாடி கட்டடம் கட்டி வருகிறார். கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்க, 45 - 55 வயதுள்ள இரு பெயின்டர்கள் கட்டடத்தின் மேல்பகுதியில், அளவீடு செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதற்காக, ஸ்டீல், 'டேப்'பால் அளவீடு செய்த போது, கட்டடத்துக்கு மிக அருகில் செல்லும், உயரழுத்த மின் கம்பியில், 'டேப்' உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் உடல் கருகி இறந்தனர். வேலம்பாளையம் போலீசார், இருவரின் உடலை மீட்டு திருப்பூர், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிற்றார் அணையில் விழுந்தவர் பலி
குமரி மாவட்டம், மருதம்பாறையைச் சேர்ந்தவர் தேவராஜ்,59. இவர், நேற்று முன் தினம் சிற்றார் அணையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது, கால் இடறி அணையில் விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுகாணி போலீசார் தேவராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை