நிர்மலாதேவி வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற மறுப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிர்மலாதேவி வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற மறுப்பு

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: நிர்மலாதேவி வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மாணவியரை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக, அருப்புக்கோட்டை, தேவாங்கர் கல்லுாரி கணிதவியல் பேராசிரியை நிர்மலாதேவி மீது புகார் எழுந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.வழக்கறிஞர் மணி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், 'நிர்மலாதேவி மீது, ஆள் கடத்தல் பிரிவில் மட்டுமே, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மற்றவர்களின் பெயர் சேர்க்கப்படவில்லை.'இதனால், பலரை தப்ப வைக்க, மாநில அரசு முயற்சி செய்கிறதோ என்ற, சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த வழக்கை, நீதிமன்ற கண்காணிப்பில், சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.மனு, நீதிபதிகள், ஆர்.சுப்ரமணியன், எம்.தண்டபாணி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், 'உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்த வழக்கு, சி.பி.ஐ., விசாரிக்க உகந்தது அல்ல.'இந்த விவகாரம் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கோரிய மனு, நிலுவையில் உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என, உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X