எல்லை மீறி சவுடு மண் அள்ளிய 9 லாரி, ஒரு ஜே.சி.பி., பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்லை மீறி சவுடு மண் அள்ளிய 9 லாரி, ஒரு ஜே.சி.பி., பறிமுதல்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மப்பேடு: மப்பேடு அருகே உள்ள கூவம் ஏரியில், எல்லையை மீறி சவுடு மண் அள்ளிய, ஒன்பது லாரி மற்றும் ஒரு ஜே.சி.பி.,யை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டூர் பகுதியில் உள்ள கூவம் ஏரியில், 17ம் தேதி முதல், அரசு உத்தரவுப்படி சவுடு மண் அள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த கூவம் ஏரியின் மற்றொரு பகுதியில், திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட இருளஞ்சேரி, குமாரசேரி, கூவம் ஆகிய பகுதிகள் உள்ளடங்கியுள்ளன.இதனால், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் அனுமதி பெற்று, திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதிகளில் சவுடு மண் அள்ளப்படுவதாக, வருவாய்த் துறையினருக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வன், வருவாய் ஆய்வாளர் செல்வபாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் விஸ்வநாத், ரமேஷ் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், கூவம் ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அனுமதியில்லாத ஏரிப்பகுதிகளில் சவுடு மண் அள்ளி கொண்டிருந்த ஒரு, ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் ஒன்பது லாரிகளை பறிமுதல் செய்து, மப்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து, மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை