திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் காவல் நிலையங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் காவல் நிலையங்கள்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்பிரிவில், கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட இரு காவல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கவரைப்பேட்டை பகுதியில் வாடகை கட்டடத்தில், கவரைப்பேட்டை காவல் நிலையம் இயங்கி வருகிறது. அதனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தச்சூர் பகுதியில், கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு இடம் ஒதுக்கி, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்து மூன்று மாதங்களாகியும், கவரைப்பேட்டை போலீஸ் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. அதேபோன்று, கும்மிடிப்பூண்டி போலீஸ் குடியிருப்பில் உள்ள, எஸ்.ஐ., குடியிருப்பில், அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. அதனால், கும்மிடிப்பூண்டி, டி.எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகே, 2016ம் ஆண்டு, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. பணிகள் முடிந்து ஓராண்டு ஆகியும், திறக்கப்படாமல் உள்ளது.

கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்பிரிவிற்கு உட்பட்ட மேற்கண்ட இரு காவல் நிலையங்களையும், உடனடியாக திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்ப் பார்க்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை