கொடை ரோட்டில் பாஸ்போர்ட் சேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடை ரோட்டில் பாஸ்போர்ட் சேவை

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு துணை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் நாளை (மே 18) திறக்கப்படுகிறது,'' என, மதுரையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண் பிரசாத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பாஸ்போர்ட் பெறும் நடைமுறையை எளிதாக்கவும், தேவையில்லாத அலைச்சலை தவிர்க்கவும் வெளியுறவு துறை அமைச்சகம் நாடு முழுவதும் 231 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரை மண்டலத்தில் மதுரை, திருநெல்வேலி சேவை மையங்களுடன், விருதுநகர், நாகர் கோவில், தேவகோட்டை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளன. கொடைரோட்டில் நாளை மையம் திறக்கப்படுகிறது. முதற்கட்டமாக 50 விண்ணப்பங்கள் வரை பெறப்பட்டு வழக்கமான பரிசீலனைக்கு பின் பாஸ்போர்ட் வழங்கப்படும். வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,

என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை