சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் : மதுரையில் வருவாய் ஆய்வாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் : மதுரையில் வருவாய் ஆய்வாளர் கைது

Added : மே 17, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் : மதுரையில் வருவாய் ஆய்வாளர் கைது

மதுரை: மதுரையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க, 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரகுராமன்,35, கைது செய்யப்பட்டார். மதுரை ஜவஹர்புரம் நீதி மகன் ரகுராமன், மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். பைபாஸ் ரோடு செங்கோல் நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு, வருவாய் துறையின் மதிப்பு சான்றிதழ் வாங்க, நேற்று முன்தினம் விண்ணப்பித்தார். அவரிடம் ரகுராமன், உடனடியாக சான்று கிடைக்க வேண்டுமானால் 12 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றார்.இதனால் ஆத்திரமுற்ற முருகேசன், நேராக லஞ்சஒழிப்பு அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தார். போலீசார் அறிவுரைபடி நேற்று மதியம் 2:00 மணிக்கு, ரகுராமனிடம் முருகேசன் பணத்தை கொடுத்தார். இதைதொடர்ந்து வெளியே காத்திருந்த டி.எஸ்.பி., பாண்டியராஜன் தலைமையிலான போலீசார், ரகுராமனை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரது வீட்டில் சோதனையிட்டனர்.தொடரும் லஞ்ச ஒழிப்பு சோதனைகடந்த 3 ஆண்டுகளாக மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் லஞ்சஒழிப்பு போலீசாரின் சோதனை நடந்து வருகிறது.* 2015 பிப்.,9ல் பரமசிவம் என்பவரிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய முதுநிலை வரைவாளர் அந்தோணிசாமி,56, கைது.* 2015 மார்ச் 27 ல் அடகு கடை உரிமத்திற்காக 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உதவியாளர் கண்ணகி கைதானார்.* 2016 அக்.,20ல் மாவட்ட வருவாய் அலுவலர் உதவியாளர் அன்புசெல்வன், 30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

* தற்போது ரகுராமன் கைதாகி உள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201800:54:18 IST Report Abuse
Mani . V தமிழக அரசியல்வாதிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் லட்சம், கோடி என்று வாங்காமல் வெறும் பன்னிரெண்டாயிரம் ரூபாய் மட்டும் லஞ்சம் பெற்ற இவரை போன்ற அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-மே-201816:31:43 IST Report Abuse
g.s,rajan In India Politicians can never be trapped red Handed.It is quite Amazing . g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
17-மே-201816:20:48 IST Report Abuse
kalyanasundaram WHY TO PUNISH SUCH PERSONS WHEN MINISTERS WHO HAVE AMASSED WEALTH BEYOND KNOWN SOURCE OF INCOME ARE LEFT UNTOUCHED.THIS IS NOT REAL JUSTICE. PUNISH OTHERS KNOWN FOR ACCEPTED BRIBE.
Rate this:
Share this comment
Cancel
UshaDevan -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-201813:43:56 IST Report Abuse
UshaDevan உங்கள் சொத்து மதிப்பை நீங்கள் ஏற்ற வேண்டாமா? Dont worry.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-மே-201810:54:03 IST Report Abuse
Bhaskaran அடங்கவேமாட்டாங்களோ கண்ணுக்குநிறவாய் கிளிபோல மனைவியிருந்தும் குரங்குபோல வைப்பாட்டித்தேடும் கூட்டம் போல் லட்சரூபாய் சம்பளம் வாங்கினாலும் நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினால்தான் திருப்தியடையும் ஜென்மங்கள் இதுகள்
Rate this:
Share this comment
Cancel
Vijay_USA - Philadelphia,யூ.எஸ்.ஏ
17-மே-201805:54:12 IST Report Abuse
Vijay_USA அப்படியே அந்த பத்திர பதிவு துறையில் இருக்குற, நெறைய நகையுடன் மங்களகரமாக ஜொலிக்கும் அந்த பெண்ணையும் புடியுங்க...
Rate this:
Share this comment
Cancel
Santhosh -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-201805:47:57 IST Report Abuse
Santhosh கைதாகி 15 நாளில் திரும்புவர்.. மீண்டும் லஞ்சம் வாங்குவர்.. என்னே பிழைப்பு இது?
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
17-மே-201804:45:05 IST Report Abuse
.Dr.A.Joseph "முழுக்க நனைந்த பின்னர் முக்காடு எதர்கு?" நிறைந்த அன்புடன்....................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை