கவர்னரின் முடிவு ஜனநாயக விரோதம்: காங்., வாதம்| Dinamalar

கவர்னரின் முடிவு ஜனநாயக விரோதம்: காங்., வாதம்

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 , எடியூரப்பா , சுப்ரீம் கோர்ட், இரவில் காரசார வாதம், ஜனநாயக விரோதம், பாஜக, காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வி , வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, துஷார் மேத்தா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், கர்நாடகா தேர்தல், Karnataka Election 2018, Eudhyarappa, Supreme Court, Democracy,
Senior Congress Advocate Ashok Singhvi, Advocate Mukul Rohatgi, Tushar Mehta, Supreme Court Judges, Karnataka Elections,

புதுடில்லி : '104எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே வைத்துள்ள எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்திருப்பது ஜனநாயக விரோதம்' என காங்., தரப்பு வக்கீல் அசோக் சிங்வி வாதாடினார்.

கர்நாடகாவில் பா..ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்., தாக்கல் செய்த மனு, அவசர வழக்காக எடுக்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணி முதல் வாதம் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வி ஆஜரானார். காங்., மனுவுக்கு எதிராக வாதாட மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தாவும், பா.ஜ., சார்பில் முன்னாள் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கியும் ஆஜராகினர். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சுப்ரீம் கோர்ட் வந்துள்ளார். நீதிமன்ற அறை எண் 6ல் விசாரணை நடக்கிறது.


காரசார விவாதம்:

காங்., மனுவை பா.ஜ., வக்கீல் முகுல் ரோகத்கி கடுமையாக எதிர்த்தார். கவர்னர் யாரை வேண்டுமானாலும் ஆட்சி அமைக்க அழைக்கலாம். கவர்னரின் முடிவில் நீதிமன்றம் தடை விதிக்க முடியாது எனவும் தனது வாதத்தை வைத்தார்.

காங்., தரப்பில் ஆஜராகிய சிங்வியின் வாதம்: பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் தந்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. கோவாவில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை சுப்ரீம் கோர்ட் ஏற்றுள்ளது. கோவா, ஜார்கண்டில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு 48 மணி நேரமே அவகாசம் கொடுக்கப்பட்டது. நாங்கள் கவர்னரை எதிர்க்கவில்லை. கவர்னர் எடுத்த முடிவையே எதிர்க்கிறோம். குறுகிய காலத்தில் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தது முன் எப்போதும் இல்லாதது.

நீதிபதிகள்: கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது எப்படி தெரியும்? எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை கவர்னரிடம் எடியூரப்பா கொடுத்தாரா என்பது தெரியுமா? எடியூரப்பாவை கவர்னர் அழைத்தது எப்படி தெரியும்?

சிங்வி: எடியூரப்பாவுக்கு 104 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். பா.ஜ., அரசு அமைக்க எதிராக 116 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

நீதிபதிகள்: ம.ஜ.த., காங்., கவர்னருக்கு அனுப்பிய ஆதரவு கடிதம் எங்கே?

சிங்வி: கடிதத்தின் நகல் என்னிடம் இல்லை.

நீதிபதி பாப்டே: கவர்னரின் முடிவுக்கு தடை விதித்தால் மாநிலத்தில் வெற்றிடம் உருவாகாதா?

சிங்வி: கர்நாடகாவில் காபந்து அரசு நடைபெற்று வருகிறது. எனவே பதவியேற்பை தள்ளி வைத்தால் மாநிலத்தில் வெற்றிடம் ஏற்படாது.

நீதிபதிகள்: சட்டசபை தேர்தலுக்கு முன்பே காங்., கூட்டணி அமைக்கவில்லை ஏன்?

சிங்வி: டில்லியில் பா.ஜ., அதிக இடங்களை கைபற்றிய போதும், ஆம் ஆத்மி-காங்., கூட்டணி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. சமீப காலத்தில் 7 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியே ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது.

நீதிபதிகள்: கடந்த காலங்களில் கவர்னரின் முடிவை எதிர்ப்பதில்லை என்பதே நீதிமன்ற மரபு. கவர்னரின் முடிவில் சட்டரீதியான அம்சங்கள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம்.

சிங்வி: அரசியலமைப்பு பிரிவு 356ன் படி ஜனாதிபதியின் முடிவில் கூட நீதிமன்றம் தலையிடலாம். ஜனாதிபதியின் முடிவில் தலையிடும் போது கவர்னரின் முடிவிலும் நீதிமன்றம் தலையிடலாம். கவர்னரின் முடிவை சட்ட பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். இங்கும் உட்படுத்தலாம். எடியூரப்பாவின் பதவி ஏற்பை தற்காலிகமாக தள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு வாதம் நடைபெற்றது. காங்., சார்பில் சிங்வி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாதங்களை முன் வைத்தார். தொடர்ந்து பா.ஜ., தரப்பு வக்கீல் முகுல் ரோகத்கி தனது வாதத்தை தொடர்ந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
sankar - Nellai,இந்தியா
17-மே-201811:41:31 IST Report Abuse
sankar என்னது - காங்கிரசுக்கு பக்கவாதமா
Rate this:
Share this comment
Cancel
Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா
17-மே-201811:27:22 IST Report Abuse
Madhavarao Neelamegam முற்பகல் செய்தது (காங்கிரஸ்) பிற்பகல் விளையும். பிஜேபிக்கு கற்றுக்கொடுத்தது காங்கிரஸ்... காங்கிரஸ் செய்தால் நியாயம் பிஜேபி செய்தால் அநியாயம். இதுதான் காங்கிரஸ் 60 வருடம் நமக்கு கற்றுக்கொடுத்த தர்மம்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201809:02:27 IST Report Abuse
Pugazh V பிஜேபி வாசகர்கள் தூங்கவே மாட்டீங்களா.. அதிகாலை 4 மணிக்கு கருத்து போடறீங்க.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201809:00:58 IST Report Abuse
Pugazh V @கு.கேசவன்/ தேர்தல் முடிவுகளில், முதல் ரேங்க் எடுத்த கட்சிக்கு, தக்க நியாயம் அளிப்பது / முதல் ரேங்க் 38% வாக்குகளை பெற்ற காங்கிரஸ். 36% பெற்ற பிஜேபி அல்ல
Rate this:
Share this comment
17-மே-201812:03:26 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அதிக தொகுதிகளில் வெல்வதுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒட்டு விகிதம் அல்ல. அந்த அறிவு கூட இல்லாததால் தான் நீங்கள் காங்கிரெஸ்ஸை ஆதரிக்கிறீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
17-மே-201808:54:11 IST Report Abuse
Ashanmugam Supreme court should not unnecessarily poke his nose into karnataka governor's vested power of judgement. Governor has got its own duties and responsibilities which are bound by democratic principles and ethics. So governor's judgement is final and abide by constitutional powers otherwise no need for Governor to any state let supreme court take over entire governorship for all states under his guidance and direction.
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
17-மே-201808:45:05 IST Report Abuse
Ashanmugam Supreme should not interfere in the affairs of the Karnataka governor veto power which is bound by democratic principles and constitutional rights. As per democratic norms, the governor of Karnataka should first call sole majority of yediyurrappa faction who secured 104 seats indepently and give time frame for proving required majority for forming government. If at all possible, the governor should call upon next minority JDS & Congress for formation of government brushing aside supreme court pronouncement which is lopsided judgement.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
17-மே-201808:08:12 IST Report Abuse
rajan காங்கிரசின் சந்தர்ப்ப வாத அரசியலுக்கு கோர்ட் வைத்து குட்டு. பாவம் பப்பு. சீக்கிரமா இத்தாலி பாட்டி வீட்டுக்கு போயி இளைப்பாறி விட்டு வாப்பா.
Rate this:
Share this comment
Cancel
குண்டலகேசி - chennai,இந்தியா
17-மே-201807:49:31 IST Report Abuse
குண்டலகேசி // நீதிபதிகள்: சட்டசபை தேர்தலுக்கு முன்பே காங்., கூட்டணி அமைக்கவில்லை ஏன்?// அங்கவி சிங்கவி: அப்படி செய்தால் எங்களுடன் கூட்டணி வைத்த பாவத்திற்கு மஜதவும் மண்ணை கவ்வி விடாதா....எப்படி இருந்தாலும் தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை....எனவே கான்+கிராஸ் ஆட்சி அமைக்க தகுந்த சட்டம் எதுவோ அதை கூறி எங்களை பாதுகாக்க வேண்டும் ஐயா. ..
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-மே-201806:29:53 IST Report Abuse
Kuppuswamykesavan ////தங்கை ராஜா - tcmtnland,இந்தியா 17-மே-2018 04:47.......//// - 4ஜி 5ஜிக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வரலியேன்னு ஃபீல் பண்ணுறீங்க போல?.
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
17-மே-201806:05:37 IST Report Abuse
grg காங்கிரஸ் க்கும் ஜன நாயகத்துக்கு என்ன சம்மந்தம் உள்ளது? ஒரு குடும்ப கட்சி ஆக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை