எடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு| Dinamalar

எடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (163+ 101)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 ,எடியூரப்பா பதவியேற்பு, சுப்ரீம் கோர்ட் மறுப்பு , சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு, வழக்கறிஞர் ரோஹத்கி ,சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், எடியூரப்பா பதவியேற்க தடையில்லை, எடியூரப்பா , கர்நாடகா தேர்தல், 
Karnataka Elections 2018, Yeddyurappa , Supreme Court refusal, Advocate Rohatgi, Supreme Court judges, Karnataka election,

புதுடில்லி : எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று(மே-17) காலை கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கிறார்.

இதுதொடர்பாக, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்ற வாதத்தின் போது மத்திய அரசின் வழக்கறிஞர் ரோஹத்கி தெரிவிக்கையில், 'காங்., மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். கவர்னரை அவரது பணியை செய்ய விடுங்கள். அவர் வேலைகளில் தலையிட வேண்டாம். ஆட்சியமைக்க அழைப்பது கவர்னரின் கடமை. கவர்னரும், ஜனாதிபதியும் எந்த நீதிமன்றத்துக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. கவர்னர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால் எந்த சட்டமும் இயற்றப்பட்டது' என்றார்.


தடையில்லை:

இதனை தொடர்ந்து, நீதிபதிகள் நீண்ட ஆலோசனைக்கு பின், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அளித்து, முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு கர்நாடகாவில் எடியூரப்பா பதவியேற்க உள்ளார்.


எடியூரப்பாவுக்கு நோட்டீஸ்:

விடிய விடிய நடந்த வாதங்களை கேட்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க தடையில்லை. நாளை(மே 18) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை நாளை காலை 10 மணிக்குள் எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும். மே 15ம் தேதி கவர்னருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும். பதவியேற்பு வழக்கு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (163+ 101)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
17-மே-201818:30:24 IST Report Abuse
Darmavan நம் நாட்டை அரசு ஆள்கிறதா அல்லது நீதிமன்றம் ஆள்கிறதா என்று சந்தேகம் எழுகிறது.நீதி மன்றம் வரம்பு மீறி நடப்பது போல் தெரிகிறது. ..எதெற்கெடுத்தாலும் நீதிமன்ற அனுமதி வேண்டும் என்றால் அரசு தேவையில்லை .நீதிபதிகள் சொல்வதெல்லாம் எந்த சட்டத்தின்படி சரி என்று யாரும் கேட்க முடிவதில்லை..சட்டம் இயற்றும் உரிமை மத்திய மாநில அரசுகளுக்கே தவிர நீதிமன்றத்துக்கு இல்லை.அதன் வேலை வழக்கு சட்டப்படி சரியா இல்லையா என்பதே தவிர தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நடப்பதன்று ..ஆனால் இப்பத்து நடப்பதெல்லாம் பார்த்தால்.WHIMS AND FANCY என்று சொல்வார்கள் அது போல் உள்ளது.எனவே நம் சட்டமே நேர்மையான சட்டமாக தெரியவில்லை.யார் அதிகாரம் எவ்வளவு என்று சரியாக வரையறை செய்திருப்பதாக தெரியவில்லை... இதுவே ஒரு கேவலம்...குற்றவாளிகளான சல்மான் கானும் /சர்தார்ஜி சிததுவும் நீதியை தனக்கு சாதகமாக திருப்ப முடிகிறதென்றால். நாட்டில் நீதி செத்து விட்டதென்றே தோன்றுகிறது.. கவர்னர்களும் /துணை ஜனாதிபதிகள் செய்வதை நீதிமன்றம் திருத்தமுடியுமென்றால். நீதிமன்ற தவறுகளை யார் திருத்துவது.. இந்த உயர் பதவிகளுக்கு நீதிமன்றம் தரும் மரியாதை என்ன.. ஆனால் இந்த கோளாறுகளை சரி செய்யபோகிறவர்கள் யார் என்றுதான் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
17-மே-201817:58:34 IST Report Abuse
Divahar வியாபாரம் நன்றாக நடக்க வேண்டாமா? இதில் கருப்பு பணம் இல்லையே? அதை ஒழித்துவிட்டார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Abdul rahim - Thanjavur,இந்தியா
17-மே-201814:54:56 IST Report Abuse
Abdul rahim சரியான அரசியல் சட்டத்தை வகுக்க நேரமில்லை மாநிலத்துக்கு ஒரு சட்டமா ? கர்நாடக பதவியேற்பு விஷயத்தில் இரவு என்று கூட பாராமல் உச்ச நீதிமன்றம் செயல் பட என்ன அவசியம் சாமானிய மக்களுக்கு பிரச்சனை வரும்போது இரவு நேரத்தில் உச்ச நீதிமன்றம் செயல்படுமா ? சட்டம் பணபலம் அதிகாரபலம் படைத்தவர்களுக்கு மட்டும் தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. நம் இந்திய நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
17-மே-201814:29:51 IST Report Abuse
Vijay D.Ratnam பாவம் குமாரசாமி,கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல, கர்நாடக மக்கள் காங்கிரஸ் வேண்டாமென்று தான் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்தார்கள். அதேமாதிரி மதசார்பற்ற ஜனதாதளம் வேண்டாமென்றுதான் காங்கிரசுக்கு வாக்களித்தார்கள். இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஆட்சியமைக்க போறாங்களாம். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டும் குடும்ப அரசியல், பரம்பரை அரசியல், வாரிசு அரசியல் செய்து அரசியலை சாக்கடையாக்கிய கட்சிகள். இரண்டும் கர்நாடகாவில் லஞ்சம், கமிஷன், ஊழலில் வரலாறு படைத்த கட்சிகள். தேர்தலுக்கு முன் கூட்டணியமைத்திருந்தால் பாஜக 150 இடங்களை பிடித்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Velayudham - Chennai ,இந்தியா
17-மே-201814:07:38 IST Report Abuse
Velayudham BJP is talking on corruption . Reddy Brothers and Yedi are too clean people Like OPS and EPS...Made people fool. They are not original RSS people. Frauds. Original RSS people will not do anything against Taruma.
Rate this:
Share this comment
Cancel
Velayudham - Chennai ,இந்தியா
17-மே-201814:00:15 IST Report Abuse
Velayudham Judiciary and Election commission are major believe of People. Both have now under BJP govt. How we can expect good jundgement from them,. Modi told all black money wiped out from India. Now how he paid 2k to3K per vote. Is it white money? How he is going to pay to buy MLA . With invoice? with GST invoice ? Payment bt rtgs or cheque? Each and every people has to understand...
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
17-மே-201813:55:15 IST Report Abuse
Ramaswamy Sundaram அடப்பாவிகளா....அன்றைக்கே சொன்னார் பேரறிஞர் அண்ணா...ஆட்டுக்கு தாடியும்... நாட்டுக்கு கோவெர்னரும் தேவையே இல்லாத ஒன்று.// மக்களால் வழங்கப்பட்ட ஒரு ஜனநாயக தீர்ப்பை காலில் போட்டு ஒரு ஜுன்ஜுன்வலா மிதிப்பார் என்றால் இது என்ன கேடுகெட்ட ஜனநாயகம்? ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி கழனிபானையில் விழுமாம் துள்ளி... மோடிஜி முழங்கும் நியாயம் நேர்மை நீதி எல்லாம் வெறும் டுபாக்கூர் கோஷங்கள்தானா? போங்கடா நீங்களும் உங்க கேடிப்பசங்க கட்சியும்... காங்கிரஸ் மற்றும் ஜனதா தல் யோக்கியர்கள் என்று சொல்லவரவில்லை. ஆனால் நாட்டுல இந்த மூணு பேர விட்டால் ஆள்வதற்கு வேற நாதி இல்லியே? அதனால்தான் மக்கள் அடிச்சாங்க ஆப்பு..ஒரு பயலுக்கும் மஜோரிட்டி கொடுக்காம... அதனால எலியும் தவளையும் கூட்டணி அமைச்சிச்சு இழு இழு என்று இழுத்து ஒரு அரசாங்கம் தான் கர்நாடகாவுக்கு வாச்சுது விதியை நொந்துக்கிட்டு ஓடறவரைக்கும் ஓடட்டும் அப்படின்னு பொறுத்துக்க வேண்டியதுதான்...இதே தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் இந்த மாதிரி மினாரிட்டி வச்சுக்கிட்டு காங்கிரசுக்கு புளிப்பு காட்டிக்கிட்டீ ஐஞ்சு வருஷம் ஒட்டினானுங்களே? அதை ஏண்டா கர்நாடகத்தில் செய்யக்கூடாது?
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
17-மே-201813:36:28 IST Report Abuse
tamilselvan எடியூரப்பா பதவியேற்க தடையில்லை சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு உச்ச நீதி மன்றம் இருக்கும் நீதிபதி அவர்கள் எடியூரப்பா இருக்கம் எம் எல் ஏ க்கள் 104மற்றும் வைத்துயிருக்கும் அவர் எப்படி முதல்வரா ஆகமுடியும் எதிர் கட்சி கூட்டனியில் 115எம் எல் ஏ க்கள் இருக்கிறார்கள் அவர்களை தான் கவர்னர் அழைத்து பதவி ஏற்பு விழா செய்துயிருக்கார் ஆனால் கவர்னர் & நீதிபதிகள் சோந்து ஜனநாயகம் படுகொலை செய்து விட்டார்கள் இது போல் இந்தியாவில் இனிமேல் எங்கே இது போல் நடக்கூடாது
Rate this:
Share this comment
Divahar - tirunelveli,இந்தியா
18-மே-201810:30:00 IST Report Abuse
Divaharஎல்லாம் பழைய குமாரசாமி கணக்குதான்?...
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
17-மே-201813:32:16 IST Report Abuse
N.Kaliraj நீதி..நேர்மை...நியாயம்....இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டது... இதிலெல்லாம் நீதிமன்றம் தலையிட்டு நேரத்தை வீணடிக்காது...காலம் பொன் போன்றது...
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
17-மே-201812:55:33 IST Report Abuse
Ganesan எங்கே நீதி இல்லையோ அங்கே அழிவு ஆரம்பமாகிறது கர்நாடகாவிற்கும் சரி, இந்தியாவிற்கும் சரி இதுவரை நடந்தது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை