தலையில் சிலிண்டரை போட்டு மனைவி கொலை: கணவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலையில் சிலிண்டரை போட்டு மனைவி கொலை: கணவன் கைது

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்: கும்பகோணத்தில், குடும்ப தகராறு காரணமாக மனைவி தலையில், 'காஸ்' சிலிண்டரை போட்டு கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பஷீர் அகமது, 42. இவர், இரண்டு முறை திருமணம் செய்து, குடும்ப பிரச்னை காரணமாக மனைவியர் பிரிந்து சென்று விட்டனர். இதையடுத்து, இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி, விவாகரத்தாகியிருந்த சென்னையைச் சேர்ந்த சாந்தி என்ற பாத்திமாவை, பஷீர் அகமது மூன்றாவதாக, 2015ல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு முன், பஷீர்அகமது வேலைக்காக வெளிநாடு சென்றார். அன்று முதல் போன் மூலமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 10 நாட்களுக்கு முன், ஊர் திரும்பிய பஷீர்அகமதுவுடன் தகராறு ஏற்பட்டதால், சாந்தி தன் அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். உறவினர்கள் சமாதானம் பேசி, இரண்டு நாட்களுக்கு முன் இருவரையும் சேர்த்து வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாந்தி தலையில் காஸ் சிலிண்டரை தூக்கிப் போட்டு பஷீர் அகமது கொலை செய்தார். பின் நாச்சியார் கோவில் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை