Once Jailed for Contempt, Justice Karnan Launches Political Party to Contest 2019 Polls | பெண் வேட்பாளர்களுடன் புதுக்கட்சி துவங்குகிறார் நீதிபதி கர்ணன்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெண் வேட்பாளர்களுடன் புதுக்கட்சி துவங்குகிறார் நீதிபதி கர்ணன்!

Added : மே 17, 2018 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி, நீதிபதி கர்ணன், புதுக்கட்சி, 2019 பொதுத்தேர்தல், கோர்ட் அவமதிப்பு, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் ,  புதிய அரசியல் கட்சி,முன்னாள்  கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் ,  Anti-Corruption Dynamic Party,Judge Karnan,  2019 General Election, Court Disappointment,chennai high court former Judge CS CKanan, New Political Party, Former kolkata Judge Karnan,

புதுடில்லி : சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் தலைமையிலான புதுக்கட்சி, 2019ம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் களமிறங்க உள்ளது.

டில்லியில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, "ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி (Anti-Corruption Dynamic Party)" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை, ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணன் துவக்கியுள்ளார்.


பின்னர் பத்திரிகையாளர்களிடம் கர்ணன் கூறியதாவது:


ஊழலால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல்களின் மூலம், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய கொடுமைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பணியில், தனது தலைமையிலான ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி ஈடுபடும்.

கட்சி பெயர் , பதிவு மற்றும் சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்துடன் தொடர்பில் உள்ளோம். தமது கட்சியில் விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், தேர்தலில் போட்டியிட பெண் வேட்பாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் கூறினார்.

முன்னாள் நீதிபதி கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு, கோர்ட் அவமதிப்பு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டால் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவான அவரை, மேற்குவங்க போலீசார், கோவையில் வைத்து கர்ணனை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyaga Rajan - erode,இந்தியா
17-மே-201819:11:19 IST Report Abuse
Thiyaga Rajan பெண் வேட்பாளர்கள் ?புரியுது
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
17-மே-201818:39:36 IST Report Abuse
Subramanian Arunachalam திரு கர்ணன் அவர்களின் முடிவை வரவேர்கிறேன் . ஆனால் இது பிஜேபி மற்றும் அ இ அ தி மு க வின் கூட்டு சதியே . திரு கமல் மற்றும் ரஜினிக்கு போட்டியாக திரு கர்ணன் அவர்களை தூண்டி அரசியல் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார்
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-மே-201817:39:28 IST Report Abuse
J.V. Iyer திமுக வுக்கு கூட்டு வைக்க ஒரு கட்சி உருவாகிவிட்டது. ஜமாயுங்க கர்ணன்
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
17-மே-201816:28:15 IST Report Abuse
anand இந்தாளு வைகோ போலவே ..தினம் ஒன்னு பேசுவார்..ஜாதியை இங்கு கொண்டு வராதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
17-மே-201815:13:35 IST Report Abuse
Varun Ramesh ஊழலால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் நீதிபதிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதும் தண்டனைக்கு பயந்த நீதிபதிகள் தலைமறைவாவதும், நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கான பிற காரணங்கள் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
17-மே-201814:48:19 IST Report Abuse
Ramaswamy Sundaram இந்தாளு நீதிபதியா இருந்து அந்த பதவியை கேவலப்படுத்தினார்...இப்போ பொண்ணுங்களை கூட்டி வச்சிக்கிட்டு தலித் கட்சி ஆரம்பிக்க போறாராராமா? ஜாதியின் பெயரால் கட்சி இருந்தால் காரி துப்புவார்கள் என்று ஊழல் எதிர்ப்பு என்று சும்மானாச்சுக்கும் ஒரு பெரு வச்சி செய்யப்போறாராம்....தலித்துக்குங்களை முன்னேத்துறோம் அப்படின்னு சொல்லிகிட்டே அவனுங்க தலையை தடவி தங்களை முன்னெத்த்ஹிக்கபோறானுங்க இந்த கபோதிங்க நடக்கட்டும்...
Rate this:
Share this comment
மீசநேசன் - chennai,இந்தியா
17-மே-201815:01:09 IST Report Abuse
மீசநேசன்ஏய் ராமசாமி, உங்க ஆளுங்களுக்கு ஏன் அரிக்குது? கர்ணன் எதுக்காக தண்டிக்கப்பட்டார்னு தெரியுமா? வசூல் ராஜாவுக்கும் வட்டிக்கும் சோம்பு தூக்கி இருந்தால் இந்நேரத்துக்கு கவர்னர் ஆகியிருப்பார். அவர் சொன்னா ஊழலின் ஊற்றுக்கண் நீதித்துறையில் இன்னும் இருக்கு....
Rate this:
Share this comment
ஜெயந்தன் - Chennai,இந்தியா
17-மே-201817:51:48 IST Report Abuse
ஜெயந்தன்இன்னொருத்தனை " சொம்புதூக்கி" என்று சொம்புதூக்கி யான நீ சொல்வதுதான் உலக மகா காமெடி.. பிஜேபி க்கு நீ தூக்கிய சொம்புகளின் எண்ணிக்கை உனக்கே தெரியாது.....
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
17-மே-201814:21:50 IST Report Abuse
BoochiMarunthu இவர் ஒன்னும் பிஜேபியை எதிக்கவில்லையே ? காவிகள் இவரை கடித்து குதற காரணம் என்ன ? இவர் எல்லாம் மனுதர்மத்தை பின்பற்றாமல் , சாணி தட்டாமல் படித்து உச்ச கோர்ட் நீதிபதி ஆகி , இப்போ ஊழலை எதிர்க்கிறேன் என்று சொன்னதாலா ?
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
17-மே-201818:03:25 IST Report Abuse
வல்வில் ஓரிநல்லா யோசி... அங்க தான் பிஜேபி யை ஆதரிக்கும் மக்கள் நிக்கிறாங்க... இவரு உண்மையான நோக்கம் ஊழல் கிடையாது ன்னு உலகத்துக்கே தெரியும்.. இவரு பண்ணின கூத்துக்கு இவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்கே இழுக்கு ஏற்படுத்தினாரு....சிறுபான்மையினருக்கு இவரால் என்ன நன்மை விளைந்தது?...இனிமேல் என்ன நன்மை விளையமுடியும்? இவரால் இட ஒதுக்கீடுக்கும் கெட்ட பேரு.. இப்போ உன்னை மாதிரி பாவிகள் இவரை ஆதரிப்பதில் தவறொன்டும் இல்லை........
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
17-மே-201814:04:56 IST Report Abuse
a natanasabapathy Ayokkiyarkalin pugalidam arasiyal yenpathai nirupithu vittaar
Rate this:
Share this comment
Cancel
17-மே-201814:04:18 IST Report Abuse
ஆப்பு கூத்தாடிகள் பண்ணுற காமெடிக்கு இது எவ்வளவோ மேல்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-மே-201813:55:03 IST Report Abuse
Malick Raja பூட்ட கேஸ் ... இதெல்லாம் கானல் நீரல்ல .. கழிவுநீர் ஓடை என்றே சொல்லி முடித்துவிடலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை