நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா; குஷ்பு காட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா; குஷ்பு காட்டம்

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (40)
Advertisement
குஷ்பு, காங்கிரஸ், திருநாவுகரசர்

சென்னை:அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இருவரும் வசை மாரி பொழிந்து கொண்டு இருக்கின்றனர். தமிழக காங்., தலைவர் விரைவில் மாறப்போகிறார் என சில நாட்களுக்கு முன் குஷ்பு கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக, 'நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இருந்தபோது, அவர் மீது முட்டை மற்றும் செருப்பு வீசி, விரட்டி அடித்தனர். அங்கும் சும்மா இருக்காமல், வீண் வம்பு செய்ததாலேயே இதெல்லாம் நடந்தது. காங்கிரசிலும் அதே நிலையை மேற்கொண்டிருக்கிறார். இங்கும் அவருக்கு அதே நிலை விரைவில் ஏற்படும். அவர் சினிமா நடிகை என்பதால், அரசியலில் நடிக்கத் தேவையில்லை' என, திருநாவுக்கரசர் சாடி இருந்தார்.
இதையடுத்து, லண்டனில் இருந்த நடிகை குஷ்பு போன் மூலம் அளித்த பேட்டி:

நான், தமிழக காங்கிரசுக்குள் நடப்பதைத் தான் வெளிப்படையாக தெரிவித்தேன். அரசியலில், ஒளிவு மறைவு இல்லாமல் செயல்படும் சிலரில் நானும் ஒருத்தி. டில்லியில் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை வைத்து தான், தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என தெரிவித்தேன். அது நடக்கப் போவதில்லை என்றால், தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர், நாகரிகமாக பேசலாம். அதை விடுத்து, என்னை நடிகை என்பதால், தாறுமாறாக விமர்சிப்பது தவறு.


திருநாவுக்கரசர் ஒரு கட்சிமாறி:

அவரும், பல கட்சிகளுக்கும் சென்று வந்தவர் தான் என்பதை மறந்து விட்டு, நடக்காதவைகளையெல்லாம், இட்டுகட்டிப் பேசுகிறார். தி.மு.க.,வில் நடந்த சம்பவம் குறித்தெல்லாம், அவர் ஏன் இப்போது பேச வேண்டும். அவருடைய கடந்த காலங்களை பற்றி நான் பேசவில்லையே.


கட்சியின் நலன்:

எந்தக் கட்சியில் இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைமைக்கு விசுவாசமாகவும், கட்சி நலனுக்கு உகந்த வகையிலும், தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். கடந்த காலங்களில் எந்தளவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அதற்காக நான் பட்ட கஷ்டங்கள்; உழைப்பையெல்லாம் துச்சமாக மதித்து, விமர்சனம் செய்யும் தலைவருக்கு, சரிக்கு சமமாக லாவணி பாட விரும்பவில்லை. நான் சொன்ன கருத்துக்கள், தனிப்பட்ட விமர்சனங்கள் அல்ல. கட்சியின் நலனில் அலட்சியம் காட்டப்படுவது குறித்தும், செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள் குறித்தும் தான் பேசினேன்.

மற்றபடி, அவரது விமர்சனங்கள் குறித்து, தலைவர்களிடம் எடுத்துச் செல்லப்படும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அவரது பேச்சுக்கு வரிக்கு வரி பதில் சொல்லி, சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை. இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
18-மே-201809:49:26 IST Report Abuse
rajan வேணாம்மா குசுபு இப்படியே நீ போனால் விட்டு கலாய்ச்சுடுவாங்க நம்ம ஆளுங்க பத்திரம்மா தாயி.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201801:34:25 IST Report Abuse
Mani . V விடுங்க குஷ்பு மேடம். திருநாவுக்கரசர் காங்கிரஸில் இருக்கப் போவது இன்னும் சில மாதங்கள்தான். அவர் இப்பொழுதே வேறு கட்சியில் துண்டு போட்டு வைத்திருப்பார். (முப்பத்தி ஒன்பதாவது தடவையாக கட்சி தாவ/மாற தயாராக இருக்கும் தானை தலைவர் வாழ்க).
Rate this:
Share this comment
Cancel
Prakash - Chennai,இந்தியா
17-மே-201823:33:02 IST Report Abuse
Prakash neengal nadigarae illai . varungaala inthiya pirathamar.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201823:26:29 IST Report Abuse
Pugazh V புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பேசுகிறார்கள் / எழுதுகிறார்கள்/ வாதிடுகின்றனர் ஆனால் யாராவது புதிதாக வந்தால், "இத்தனை நாள் எங்கே இருந்தே?" "இப்போது ஏன் வர்றே? இப்போது செய்கிற தொழில் புட்டுகிச்சு அதனால் வரியா?" "வரக்கூடாது ஓடிப்போ" என்கிறார்களே? பழைய இபிஎஸ், ஓபிஎஸ் மாதிரி ஆட்களே போதுமா? இப்படி பேசுபவர்கள் ஐடியா / எதிர்பார்ப்பு என்ன?
Rate this:
Share this comment
Cancel
kuruvi - chennai,இந்தியா
17-மே-201822:29:27 IST Report Abuse
kuruvi ஜெயலலிதா பத்தி பேசும்போது புத்தி எங்க போச்சு?
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
18-மே-201801:07:39 IST Report Abuse
Milirvanஅது மட்டுமல்ல.. நடிகையா வந்திராவிட்டால் இந்த அம்மணியையே யாருக்கும் தெரிந்திராது,, பிரபலமாக மட்டும் நடிகை என்கிற பேனர் வேண்டுமாம்.. ஆனால் அதை வைத்து விமர்சனம் மட்டும் கூடாதாம்.. கொள்ளுக்கு வாய் பிளக்கும் குதிரை கடிவாளத்துக்கு 'கப்'பென்று மூடிக்கொள்ளுகிறது.....
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
17-மே-201821:48:26 IST Report Abuse
s t rajan "எந்தக் கட்சியில் இருந்தாலும்" .... அப்போ அடுத்து எந்த கட்சியில் செயல்படுவதாக உத்தேசம்.... மேடம்.
Rate this:
Share this comment
Cancel
karthi - chennai,இந்தியா
17-மே-201820:57:20 IST Report Abuse
karthi It's better for Thirunaavukkarasar to Join Dinakaran party as கொள்கை பரப்பு செயலாளர். Because, Everybody is suspecting him that he is not loyal to the Congress party but attached to Dinakaran on e basis. If he joins so, they may get their community votes in melur, madurai, Theni area. But, they will not win in any constituency. It's better for Congress to change the leader of Tamilnadu Congress committee immediately.
Rate this:
Share this comment
Cancel
kurinjikilan - Madurai,இந்தியா
17-மே-201820:51:50 IST Report Abuse
kurinjikilan படு கேவலம்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
17-மே-201820:51:25 IST Report Abuse
rajan அளவுக்கு மீறி ஆட்டம் போட்டா அப்புறம் எவன் விட்டு பார்ப்பான். விட்டு கலக்கிடுவாங்கல்ல. புரிஞ்சு பதமா நடந்துக்கணும்னு தெரியாத என்ன உனக்கு.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-மே-201820:50:45 IST Report Abuse
mindum vasantham Guys like chidambaram thangabaalu are making moves against thirunavukkarasu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை