இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 இதே நாளில் அன்று

மே 18, 1933
தேவகவுடா: கர்நாடக மாநிலம், ஹரதனஹல்லி என்ற ஊரில்,1933, மே, 18ல் பிறந்தார். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், தீவிர அரசியல்வாதி ஆனார். 1962ல், கர்நாடக மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ., ஆனார். 197௦ல், ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். அப்போது, அக்கட்சி பிளவுபட்டு, ஜனதா தளம் என்ற கட்சி உருவாவதற்கு காரணமாக இருந்தவர்.கர்நாடக மாநில முதல்வராக, ௧௯௯௪ல், பொறுப்பேற்றார். 1996ல், நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தோல்வியுற்றது. எதிர்க்கட்சியான, பா.ஜ.,வும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அப்போது, புதிதாக உருவான ஐக்கிய முன்னணியின் சார்பில், நாட்டின் பிரதமராக தேவகவுடா தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர், 1996 - -97 -வரை, அப்பதவி வகித்தார். 1999ல், ஜனதா தளத்திலிருந்து வெளியேறினார். மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கி, அதன் தலைவராக செயல்படுகிறார். அவர் பிறந்த தினம் இன்று!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை