போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.8 கோடி நஷ்டம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போக்குவரத்து கழகங்களுக்கு
தினமும் ரூ.8 கோடி நஷ்டம்

சென்னை: தமிழக அரசு, டீசல் மானியத்தை ரத்து செய்ததால், தினமும், எட்டு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் தள்ளாடுகின்றன.

  போக்குவரத்து, கழகங்களுக்கு, தினமும், ரூ.8 கோடி, நஷ்டம்


ஊழியர்கள் ஊதிய உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால், அரசு போக்குவரத்து கழகங்கள் திண்டாடின. இதற்கு தீர்வு காண, இந்தாண்டு ஜனவரியில், பஸ் கட்டணத்தை, 60 சதவீதம் வரை, தமிழக அரசு உயர்த்தியது.தினமும், இரண்டு கோடி பேர் பயணம் செய்த நிலையில், தற்போது, 30 லட்சம் பேர், பஸ் பயணத்தை தவிர்த்துள்ளனர். பஸ் கட்டண உயர்வால், பெரிதாக வருவாய் உயர்வு ஏற்படவில்லை; 10 சதவீதமே வசூல் கூடியுள்ளது.

எதிர்பார்த்த வருவாய் இல்லாததோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தியதால், 2011 முதல் வழங்கி வந்த டீசல் மானியத்தை, தமிழக அரசு ரத்து செய்து உள்ளது.

இதனால், அரசு போக்கு வரத்து கழகங்கள் தள்ளாடி வருகின்றன. போக்கு வரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசு போக்கு வரத்து கழகத்தில், ஒவ்வொரு நாளும், 30 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. ஐந்து மாதங்களில் டீசல் விலை,லிட்டருக்கு, 15 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.

செலவு அதிகரித்து வரும் நிலையில், டீசல் மானியத்தை அரசு ரத்து செய்ததால், தினமும், எட்டு கோடி ரூபாய் வரை, நஷ்டம் ஏற்படுகிறது. டீசல் மானியத்தை அரசு மீண்டும் தர வேண்டும்; இல்லாவிட்டால், அரசு போக்குவரத்து கழகங்கள், பஸ்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பஸ் ஊழியர்களுக்கு நிலுவை ரூ.7,000 கோடியாக உயர்வுஅரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை, மீண்டும், 7,000 கோடி ரூபாயை எட்டிஉள்ளதால், தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடைக்காக, குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அவற்றை, உரிய வங்கிக்

Advertisement

கணக்கில் செலுத்தாமல், மற்ற நிர்வாக செலவுகளுக்கு செலவிடப்படுகிறது.

இந்த வகையில், 7,000 கோடி ரூபாய் நிலுவை இருந்ததால், அவற்றை அரசு வழங்கக் கோரி, தொழிற்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து,ரூ. 2,054 கோடி தமிழக அரசு வழங்கியது. அதனால், நிலுவை தொகை, 5,000 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. தற்போது, நிலுவைத் தொகை, மீண்டும் பழைய நிலையான, ரூ.7,000 கோடி எட்டியுள்ளது.

இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்பட்ட நிலுவைத் தொகையை, உரிய கணக்கு களில் செலுத்த வேண்டும்; இல்லையேல், மீண்டும் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-201820:16:08 IST Report Abuse

ManiSCorrupted department with foolish administrators never grow. We can add all govt sectors to it.

Rate this:
18-மே-201819:42:09 IST Report Abuse

sethuramanஇவனங்களுக்கு வேற வேலை யே இல்ல போல. எப்ப பாத்தாலும் நஷ்ட கனக்கே காமிக்க வேன்டியது. டிக்கெட் விலை கூட்டுனதுல இருந்து முன்னேற்றம் ஒன்றும் இல்லை. அதுக்குல்ல நஷ்டமா

Rate this:
JANANI - chennai,இந்தியா
18-மே-201817:08:50 IST Report Abuse

JANANINashtathai eedu seiyyum vagaiyil arasu nadavadikkai edukka vendum

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
18-மே-201816:22:59 IST Report Abuse

Endrum Indianஅப்போ 365 x ரூ. 8 கோடி = ரூ. 2 ,920 கோடி . இது ரூ. 4 .2 லட்சம் கோடி டாஸ்மாக் அரசு நஷ்டம் அதிலிருந்து குறையும். அடுத்தது 'இல்லை இலவசம் இனிமேல்" என்றால் ரூ. 32 ,000 கோடி அதில் கிடைக்குமே. பிறகு விவசாயிகளின் கடன் தள்ளுப்படி இல்லையென்றால் அதில் ஒரு ரூ. 65 ,000 கோடி கிடைக்குமே. என்ன அப்படியும் கடன் ரூ. 3 லட்சம் கோடியில் இருக்கும்.

Rate this:
18-மே-201811:49:02 IST Report Abuse

குறிஞ்சி நில கடவுள்ஆனால் போக்குவரத்து அமைச்சர் சொத்து மதிப்பு 200% அதிகரிக்கும். இது எப்படி என்றால் by வடிவேல் mathematics formula 1+1=3. சமீபத்தில ஒரு செய்தி வந்ததே ஒரே நம்பர் ரெண்டு அரசு பஸ். வசூல் ஒன்னு கவர்மெண்டுக்கு இன்னொன்னு அமைச்சருக்கு...எத்தன தரமான அரசு பேருந்து இருக்கு..? ஹைவே ஓரமா இருக்குற ஹோட்டல்களில் இருந்த எவ்வளவு மால் வெட்டுகிறார்கள் அமைச்சருக்கு...?

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
18-மே-201811:48:55 IST Report Abuse

raghavanஆட்டோ காரங்க இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்திக்கிட்டு இருந்ததால், பயணிகள் எல்லோரும் ஷேர் கார்னு போய்ட்டாங்க..அதே போல அரசு மிக அதிகமாக கட்டணத்தை உயர்த்தியதால் பெரும்பாலானோர் ரயிலுக்கு தாவிட்டாங்க.

Rate this:
natarajan s - chennai,இந்தியா
18-மே-201808:56:58 IST Report Abuse

natarajan s100 % கட்டணம் உயர்த்த பட்ட பிறகும் நஷ்டம் என்றால் யாரிடம் குறை. நிர்வாக திறமையின்மைதான் காரணம். எல்லாவற்றிலும் பணம் பார்க்கும் மனநிலையில் மந்திரி முதல் கடைநிலை ஊழியர்வரை உள்ளதால் ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொடுக்காமல் கொள்ளை அடிக்கிறார்கள்.நாட்டில் நல்ல நிர்வாகிகளே இல்லையா? எதற்கெடுத்தாலும் I A S அதிகாரி என்பீர்களே அவர்களை வைத்து நல்லமுறையில் நிர்வாகம் செய்து லாபம் ஈட்ட வேண்டாம் நாத்திடம் இல்லாமல் நடத்தலாம். மேலும் public transport subsidy கொடுத்தால்தான் அதிக மக்கள் பயணம் செய்வார்கள் லாபம் காட்ட முடியும். தற்போது ஏறக்குறைய ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணம். அழுக்கு பேருந்து, மரியாதையை தெரியாத ஊழியர், சரியாக பராமரிக்க படாத ஓட்டை உடைசலான பேருந்து அதிக சம்பளம் பெரும் அதிக ஊழியர் இவற்ற்றை சரி செய்யாமல் இந்த நிறுவனத்தை நடத்தினால் நஷ்டம்தான் வரும். வருமானம் வரும் ரூட்களில் தனியாருக்கு பங்கு. அவன் வருடம் ஒரு பஸ் வாங்குகிறான் இவர்கள் நஷ்ட கணக்கு காட்டுகிறார்கள்.

Rate this:
Thiyagarajan - Bangalore,இந்தியா
18-மே-201808:50:45 IST Report Abuse

Thiyagarajanபோக்குவரத்து துறையில் மொத்த ஊழியர்களும் டிரைவர், கண்டக்டர் தவிர எல்லாம் கொள்ளை அடிப்பதேயே தவறாக கொண்டிருந்தாள் எப்படி துறை லாபத்தில் இயங்கும்.

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201808:39:20 IST Report Abuse

Bhaskaranபொன்முட்டையிடும் வாத்தை அறுத்துப்பார்த்தகதையாகப்போனது கட்டணம் உயர்த்தி இருந்தவருமானத்தையும் குறைத்துவிட்டு மேலும் நஷ்டமடையவைத்த அதிகாரவர்கத்தினரினசேவை மேலும் மேலும் சிறப்பாக செயல்பட்டு மொத்தமாக நஷ்டத்தில் கொண்டுபோய்விட்டு பொதுமக்களின் வரிப்பணத்தில் நன்றாக செயல் பட்டு வந்த போக்குவரத்தை ஒரேயடியாக மூடி தனியார் கையில் ஒப்படைக்கும் முயற்சி வெல்க

Rate this:
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
18-மே-201808:31:12 IST Report Abuse

Vamanan NairOPS & EPS : அப்பாடா பஸ் டிக்கெட் விலையை உயர்த்த காரணம் கிடைத்து விட்டது. அடுத்தவன் மேலே பழி போட்டுவிட்டு நாம் தப்பித்து விடலாம்.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement