அடல் பென்சன் திட்டத்திற்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடல் பென்சன் திட்டத்திற்கு வரவேற்பு

Added : மே 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மத்திய அரசின் அடல் பென்சன் திட்டத்திற்கான மவுசு அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியை தாண்டிஉள்ளது.அரசு ஊழியர்களுக்கு இணையாக, அனைத்து பாமர மக்களும் பென்சன் பெற வேண்டி, 2015ல், 'அடல் பென்சன் யோஜனா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய, தனியார் வங்கிகள் மற்றும் தபால்நிலையங்கள் வாயிலாக, செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், 18 முதல், 40 வயதுக்குட்பட்டோர் மட்டுமே இணைய முடியும்.மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை, தங்கள், 60 வயது வரை செலுத்த வேண்டும்.நாடுமுழுவதும், 20 ஆயிரம் தபால் நிலையங்கள் உட்பட, 1.60 லட்சம் கிளைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூன்றாண்டுகளில், 3,950 கோடி ரூபாய் இத்திட்டத்தின் கீழ், 'டிபாசிட்' செய்துள்ளனர்.மார்ச் நிலவரப்படி, 1.10 கோடி பேர், இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். அதிகபட்சமாக, உ.பி.,யில் 14 லட்சம் பேர்; பீஹாரில், 10 லட்சம் பேரும் சேர்ந்துள்ளனர். எட்டு லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழகம் மூன்றாம்இடத்தில் உள்ளது.தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இதன்மூலம், 18 வயதுஉடைய ஒருவர், 42 ஆண்டுகளுக்கு மாதம் 42 ரூபாய் வீதம் செலுத்தி வந்தால், 60 வயதிற்கு பின், மாதந்தோறும், 1,000 ரூபாய் பென்சன் தொகை கிடைக்கும். அரசு ஊழியர்களைப்போல், நமக்கும் பென்சன் தொகை இல்லையே என வருத்தப்படுவோருக்கு, இத்திட்டம் வரப்பிரசாதம். விரும்புவோர் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Elangovan - NewDelhi,இந்தியா
18-மே-201810:48:24 IST Report Abuse
G.Elangovan ஒன்றும் இல்லாததிற்கு ஏதோ கிடைப்பது நல்லதுதான். இதில் சொல்லப்படாத செய்தி என்னவெனில் இத்திட்டத்தில் 5000 ருபாய் வரை பெற அதற்கேற்றார்போல் மாதாமாதம் செலுத்தும் தொகையை இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து மடங்கு என உயர்த்தி செலுத்த வேண்டும். மேலும் வயது உயர உயர செலுத்த வேண்டிய தொகையும் உயரும். மேலும் தவணை தவறாமல் செலுத்துவோருக்கு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். இந்த திட்டமான அட்டல் பென்ஷன் மற்றும் அட்டல் பீமா ( காப்புறுதி) திட்டமும் மிகச்சிறந்த திட்டங்கள். வரும் காலங்களில் இத் திட்டங்களை அரசு மேலும் செம்மை படுத்தகூடும்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201806:40:30 IST Report Abuse
Bhaskaran நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு பின் பணவீக்கம் காரணமாக ஒரு தீப்பெட்டி ஐம்பது ரூபாய் விற்கும் ஆயிரம் ரூபாயினால் என்னப்பயன் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X