பிளஸ் 2வில், 1,200க்கு, 'குட்பை'; வரும் ஆண்டில் 600, 'மார்க்' தான்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2வில், 1,200க்கு, 'குட்பை'; வரும் ஆண்டில் 600, 'மார்க்' தான்

Updated : மே 18, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பிளஸ் 2 மதிப்பெண் முறை, 600 மதிப்பெண் திட்டம் ,  நுழைவு தேர்வு, பிளஸ் 1  பிளஸ் 2 ஒருங்கிணைந்த சான்றிதழ் , பிளஸ் 1 வகுப்பு பொது தேர்வு, Plus 2 mark sheet, 600 mark scheme, entrance examination, plus 1 plus 2 integrated certification, plus 1 class public examination,

பிளஸ் 2வில், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், 8.60 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்று, 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். வரும், 21ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு அறிமுகமாகி, 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, ஆறு பாடங்களுக்கு, தலா, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.தற்போது, நுழைவு தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டு உள்ளதால், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வுஅறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண் வழங்கப் படும் முறை, 100 மதிப்பெண்ணாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை, நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகமாகி உள்ளது.இதன்படி, பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், 600 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த, 600 மதிப்பெண் முறை, வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2க்கும் அறிமுகம் ஆகிறது. எனவே, இந்த ஆண்டுடன், 1,200 மதிப்பெண் முறை முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், பிளஸ் 2க்கு மட்டும், தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையும் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு ஒரு சான்றிதழ், பிளஸ் 2க்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இறுதியாக, இரண்டு வகுப்புகளுக்கும் ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
18-மே-201815:41:49 IST Report Abuse
raja கருணாநிதி ஜெயலலிதா ஒழிந்ததால் நிறைய நல்ல பலன்கள் கிடைக்க தொடங்கி உள்ளது
Rate this:
Share this comment
Cancel
18-மே-201813:13:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நல்ல செய்தி. என் மகனும் இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பில் படிக்கவுள்ளான். கல்வி துறை சிறப்பாக செயல்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
nataraj - TRICHY,இந்தியா
18-மே-201813:08:47 IST Report Abuse
nataraj arumai
Rate this:
Share this comment
Cancel
Karthik TVR - Tiruvarur,இந்தியா
18-மே-201809:42:50 IST Report Abuse
Karthik TVR அருமை பாராட்டிற்குரியது இந்த மாற்றம்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201808:46:43 IST Report Abuse
Bhaskaran உண்மையிலேயே கல்வி அமைச்சர் சி.சுப்ரமணியம் காலத்துக்குப்பின் நன்றாகசெயல்படும் ஒரு அமைச்சர் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளார் என்று ஒரு பெரியவர் சொன்னார் கல்வித்துறையை ஊழல்மயமாக்கி ஆசிரியர்களை தொழிற்சங்கவாதிகள் ஆக்கி தனியார் பள்ளிகல்லூரிகளை ஊக்குவித்து தாங்களும் கல்வியாளர்கள் ஆகி கோடிகளில் புரளும் அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து கல்வித்துறையை மீட்டெடுத்து உயர்கல்வியில் பிரமாநில மாணவர்களுடன் போட்டியிட்டு அதோட இடங்களைப்பிடிக்கும் வகையில் செயல்படும் அமைச்சரும் துணை நிற்கும் கல்வித்துறைஅதிகாரிகளும் நீடூழிவாழவேண்டும் இந்த ஆரம்பம் எந்த அரசுகள் மாறினாலும் தொடர்ந்து நடைபெற்றால் மிக்க மகிழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel
K.P.Muniyasamy - Tuticorin,இந்தியா
18-மே-201806:47:43 IST Report Abuse
K.P.Muniyasamy பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
18-மே-201805:11:04 IST Report Abuse
சூரிய புத்திரன் பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. இதன் மூலம் தனியார் பள்ளிகளின் கொட்டம் அடக்கப்படும். 11 ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 2 வருடமும் 12 வகுப்பு பாடத்தையே நடத்தி பிராயலா் கோழிகளை போல மானவா்களை உருவாக்கிய திமிர் பிடித்த தனியார் பள்ளிகளுக்கு மரண அடி. மாணவ, மாணவியா்களும் நெருக்கடியில்லாமல் பாடங்களை விளங்கி படித்து உயா்வடைவா். கல்வியமைச்சா் செங்கோட்டையனின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை