துறை ரீதியான வழக்குகளை விசாரிக்க தனிக்குழுவுக்கு மத்திய அரசு அனுமதி| Dinamalar

துறை ரீதியான வழக்குகளை விசாரிக்க தனிக்குழுவுக்கு மத்திய அரசு அனுமதி

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கு இடையிலான வழக்குகளுக்கு தீர்வு காண, நீதிமன்றங்களை அணுகாமல், துறை செயலர்கள் அளவிலேயே விசாரணைக் குழு அமைத்து, விவகாரத்தை முடித்துக் கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.நம் நாட்டு நீதிமன்றங்களில், மொத்தம், மூன்று கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், உச்ச நீதிமன்றத்தில் மட்டும், 60 ஆயிரம் வழக்குகளும், பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில், 40 லட்சம் வழக்குகளும், இதர துணை நீதிமன்றங்களில், இரண்டு கோடிக்கும் அதிமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களின் வழக்குகள் மட்டுமே, நீதிமன்றங்களில், 46 சதவீதம் தேங்கிக் கிடக்கின்றன. இதையடுத்து, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளுக்கு இடையிலான வழக்கு விவகாரங்களை, நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லாமல், துறை ரீதியாக குழு அமைத்து, விரைவில் விசாரித்து முடிக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கு இடையேயான வழக்குகளை, துறைகளுக்கு உள்ளேயே, இரண்டு கட்டமாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்ட விசாரணை, பிரச்னைக்குரிய இரு துறையை சார்ந்த குழுவின் முன் நடக்கும்; இதில், சம்பந்தப்பட்ட துறைகளின் நிதி ஆலோசகர்கள் மற்றும் சட்ட செயலர் ஆகியோர் இடம் பெறுவர்.இந்த முதல் கட்ட விசாரணை மூன்று மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்; தவறும் பட்சத்தில், இரண்டாம் கட்ட விசாரணை நடக்கும். இதில், துறை செயலரின் முடிவே இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை