பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் டில்லியில் தமிழக அரசு கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் டில்லியில் தமிழக அரசு கோரிக்கை

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

'பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தமிழக மீனவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு, மத்திய அரசு முன்வர வேண்டும்' என, தமிழக அரசு, கோரிக்கை வைத்துள்ளது.கடலோர மாநிலங்களின் மீன்வளத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற, தேசிய கருத்தரங்கு, டில்லியில் நேற்று நடந்தது; இதில், தமிழக அரசின் சார்பில், மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் பங்கேற்றார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது:கடலில் திசை மாறிச் செல்லும் மீனவர்களை, கைது செய்யக் கூடாது; அவர்களை, விடுவிக்க வேண்டும். இலங்கை அரசின் பிடியில் உள்ள, 168 மீன்பிடி படகுகளை மீட்க வேண்டும்.


நடவடிக்கை


ஆழ்கடலுக்குள், புயலில் சிக்கும் மீனவர்களை, கண்காணிப்பது, தேடுவது, அடையாளம் காணும் பணிகளுக்காக, கம்பியில்லா தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.பொருளாதாரத்தில், தமிழக மீனவர்கள், மிகவும் பின்தங்கியுள்ளனர். எனவே, இச்சமூகத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மீன்பிடிதுறைமுக மேலாண்மை நிர்வாகத்தை, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்கிற்கு பின், டில்லி, தமிழ்நாடு இல்லத்தில், நிருபர்களிடம், அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:ஆழ்கடலில் கிடைக்கும், சிறப்பு வகையிலான மீன்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது. எனவே, அவ்வகை மீன்களை பிடிப்பதற்கு, பிரத்யேகமான படகுகள் தேவை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை