புதுக்கட்சி துவங்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுக்கட்சி துவங்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன்

Added : மே 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
புதுக்கட்சி துவங்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன்



கோல்கட்டா, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, சி.எஸ்.கர்ணன், ஊழலுக்கு எதிரான புதுக்கட்சியை துவங்கி உள்ளார். மேலும், லோக்சபா தேர்தலில், தன் கட்சி சார்பில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து, பெண் வேட்பாளரை நிறுத்தவும் முடிவு செய்துள்ளார்.மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, சி.எஸ்.கர்ணன். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த இவரை, பணியிட மாற்றம் செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பணியிடம் மாற்றத்துக்கான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, கர்ணன் தடை விதித்தார்.இதையடுத்து, அவருக்கு வழக்குகளை ஒதுக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 'நான், தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், குறிவைக்கப்படுகிறேன்' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது, கர்ணன் குற்றச்சாட்டு களை கூறினார்.இதையடுத்து, கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு மாத தண்டனை காலம் முடிந்து வெளியே வந்துள்ள, கர்ணன், கோல்கட்டாவில், 'ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி' என்ற பெயரில், புதுக்கட்சியை துவங்கினார்.இது குறித்து, அவர் கூறியதாவது:-அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், என் கட்சி சார்பில், பெண் வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்துள்ளேன். என் கட்சியை, முறைப்படி, தலைமை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வேன்.நாட்டிலிருந்து ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே, என் கட்சியின் நோக்கம். பிரதமர் மோடி, எம்.பி.,யாக உள்ள வாரணாசி தொகுதி யில், நான் போட்டியிட போவதில்லை. அங்கு, என் கட்சி சார்பில், பெண் வேட்பாளரை நிறுத்துவேன். நாடு முழுவதும் தலித், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-மே-201814:30:41 IST Report Abuse
Yaro Oruvan ஹா ஹா.. கவுண்டர் டயலாக் ஞாபகத்துக்கு வருதேஜி "" குண்டூசி விக்கிறவெனல்லாம் தொழிலதிபர் ""
Rate this:
Share this comment
Cancel
Velmurugan - Ariyalur,இந்தியா
18-மே-201804:34:16 IST Report Abuse
Velmurugan வாழ்த்துக்கள் அய்யா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X