ரூ.1.50 கோடி மதிப்புள்ள இ - டிக்கெட்டுகள் ரத்து| Dinamalar

ரூ.1.50 கோடி மதிப்புள்ள இ - டிக்கெட்டுகள் ரத்து

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம், சிலர் சட்டவிரோதமாக, பெரும் எண்ணிக்கையில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து, மும்பையில், சமீபத்தில், ரயில்வே இணையதளத்தில் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்து, விற்பனை செய்யும் தரகர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர்.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ஜோகேஷ்வரியில் நடந்த சோதனையில், சல்மான் அகமது என்பவரின், 'லேப் டாப்' மூலமாக, 6,853 டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. வெவ்வேறு பெயர்களில், முன்பதிவு செய்யப்பட்ட, அவற்றின் மதிப்பு, 1.50 கோடி ரூபாய். இந்த டிக்கெட்டுகளை ரயில்வே ரத்து செய்தது. இந்த சோதனையில், 45 தரகர்கள் பிடிபட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.முன் பதிவு செய்த ரயில் டிக் கெட்டுகளை, ரத்து செய் தால், அதற்குரிய தொகை, எப்போது திரும்ப கிடைக்கும் என்பதை கண் காணிக்கும் புதிய தொழில் நுட்பத்தை, ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.இதன்படி, refund.indian rail.gov.in என்ற இணைய தளத்தில், பி.என்.ஆர்., எண்ணை பதிவு செய்து, அதுபற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை