'அரசு பங்களாவில் வசிக்க அனுமதியுங்க' உ.பி., முதல்வரிடம் முலாயம் கெஞ்சல்| Dinamalar

'அரசு பங்களாவில் வசிக்க அனுமதியுங்க' உ.பி., முதல்வரிடம் முலாயம் கெஞ்சல்

Added : மே 17, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
  'அரசு பங்களாவில் வசிக்க அனுமதியுங்க' உ.பி., முதல்வரிடம் முலாயம் கெஞ்சல்

லக்னோ,எதிர்க்கட்சி தலைவர்கள் என்ற முறையில், தன்னையும், தன் மகன் அகிலேஷ் யாதவையும், அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்கும்படி, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து, முலாயம் சிங் யாதவ் கோரிக்கை வைத்துள்ளார்.உ.பி.,யில் முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, முன்னாள் முதல்வர்களுக்கு, அரசு பங்களாக்களில் தொடர்ந்து வசிக்க, சட்ட திருத்தம் செய்யப்பட்டது.பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'முன்னாள் முதல்வர்களே ஆனாலும், பதவி விலகிய பின், அவர்களும் சாதாரண குடிமகன்களே. எனவே, அரசு வழங்கிய பங்களாக்களை விட்டு, அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்' என, உத்தரவிட்டது.இதையடுத்து, உ.பி.,யின் முன்னாள் முதல்வர்களான, முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி, ராஜ்நாத் சிங், கல்யாண் சிங் மற்றும் என்.டி.திவாரி ஆகியோர், தற்போது வசித்து வரும் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளனர்.இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, சமாஜ்வாதி கட்சி தலைவர், முலாயம் சிங் யாதவ், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, சட்டசபை மற்றும் மேல்சபையில் சமாஜ்வாதி, எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதால், எதிர்கட்சி தலைவர்கள் என்ற அடிப்படையில், தன்னையும், தன் மகன் அகிலேஷ் யாதவையும், அரசு பங்களாக்களில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
18-மே-201821:16:35 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram ஜப்தி செய்து தெருவில் பொதுமனிதன் போல் நின்றால் கஷ்டம் என்றால் என்ன என்று புரியும்
Rate this:
Share this comment
Cancel
Vel - Chennai,இந்தியா
18-மே-201815:15:22 IST Report Abuse
Vel ஓ. அப்போ இவர் கேர் ஆப் பிளாட்பாரமா
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
18-மே-201806:12:59 IST Report Abuse
Renga Naayagi ரொம்ப ஏழைங்க பாவம் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X