கேரள சுற்றுலா துறைக்கு'பேஸ்புக்' விருது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரள சுற்றுலா துறைக்கு'பேஸ்புக்' விருது

Added : மே 17, 2018
Advertisement
கேரள சுற்றுலா துறைக்கு'பேஸ்புக்' விருது

திருவனந்தபுரம்,கேரள சுற்றுலாத் துறையின், 'பேஸ்புக்' பக்கம், 2017ம் ஆண்டின், சிறந்த சமூக வலைதளப் பக்கமாக, 'பேஸ்புக்' நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அரசு துறை நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பேஸ்புக் பக்கங்களில், 2017ல், சிறப்பாக செயல்பட்ட பக்கங்களை, பேஸ்புக் நிறுவனம், சமீபத்தில் தேர்ந்தெடுத்தது.அந்த ஆண்டில், அதிக, 'லைக்'குகள், 'ஷேர்'கள் மற்றும் 'கமெண்ட்'டுகளைப் பெற்றதன் அடிப்படையில், இந்த தேர்வு நடந்தது. இதில், கேரள சுற்றுலாத் துறையின் பேஸ்புக் பக்கம், முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களை ஜம்மு - காஷ்மீர் மற்றும் குஜராத் சுற்றுலாத் துறை பிடித்துள்ளன.இதற்கான விருதை, டில்லியில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தில் இருந்து, கேரள சுற்றுலாத் துறை இயக்குனர், பால கிரண் பெற்றார். சிறப்பாக செயல்பட்டதற்காக, சுற்றுலாத் துறை ஊழியர்களுக்கு, கேரள சுற்றுலாத் துறை அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், வாழ்த்துகளை தெரிவித்தார்.

முதலிடத்தில் அமிதாப்!
சமூக வலைதள பக்கமான, 'பேஸ்புக்'கில், மிக தீவிரமாக செயல்படும் இந்திய நடிகர்களை, பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தேர்ந்தெடுத்தது. இதில், 75 வயதான, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முதலிடத்தில் தேர்வாகி உள்ளார். இவரை, மூன்று கோடி பேர், பேஸ்புக்கில் பின்தொடர்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக, சல்மான் மற்றும் ஷாருக் கான் தேர்வாகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X